Close

வரலாறு

1741 ஆம் ஆண்டு மராட்டியர் திருச்சிராப்பள்ளி மீது படையெடுத்து சந்தா சாபே என்பவரை சிறைபிடித்தார். 1748 இல் சந்தா சாகேப் சுதந்திர சாம்ராஜ்யத்தை கைப்பற்றுவதில் வெற்றி பெற்றார். ஆனால் விரைவில் ஆற்காடு நவாப் அன்வார்டின் மற்றும் அவரது மகன் முகமது அலி ஆகியோருக்கு எதிராக காநாடக நவாபின் பிரபலமான போர்களில் ஈடுபட்டார்.

தற்சமயம் உள்ள அரியலூர் மாவட்டத்தின் அரியலூர் மற்றும் உடையார்பாளையத்தில் வசிக்கும் பழங்குடியினர் பணம் செலுத்துவதிலும், கிளர்ச்சியாளரான யூசப்காணுக்கு உதவுவதிலும், அடக்குவதிலும் முகமது அலி தோல்வியுற்றார். முகமது அலி இந்த பிரச்சனையை 1764 நவம்பரில் (மெட்ராஸ்) சென்னை சபை கவனத்திற்கு கொண்டு சென்றார். மேலும் 1765, 3ஆம் தேதி ஜனவரிமாதம் இராணுவ உதவிகளைப் பெற்றார்.   உமத்த் உல் உமர் மற்றும் டொனால்ட் காம்பெல் தலைமையிலான படைகள் அரியலூரில் நுழைந்து அதை கைப்பற்றியது. இளம் பாலிகர் தன் ஆதரவாளர்களுடன் சேர்ந்து அங்கிருந்து உடையார்பாளையம் தப்பியோடினர். ஜனவரி 19ஆம் தேதி இராணுவம் உடையார்பாளையம் மீது படையெடுத்த்து. பாலிகரின் படைகள் தோற்கடிக்கப்பட்டு பாளையம் கைப்பற்றப்பட்டது. இரண்டு பாலிகர்கள் தங்களுடைய நகரத்தை விட்டு தரங்கம்பாடியில் தஞ்சம் புகுந்து பிறகு டேனிஸ் குடியற்ற்த்தை அடைந்தனர். ஆற்காட்டிலிருந்து திருச்சிராப்பள்ளி வரை நவாப்பின் தலையீடு இல்லாமல் பாலிகரின் எல்லை விரிவாக்கப்பட்டது.

ஹைதர் அலிக்கு திப்பு சுல்தானுக்கும் இடையே போராட்டம் நடைபெற்றது. திப்பு சுல்தானுக்கு பிரிட்டீஸ்கார்ர்கள் துணைபுரிந்தார்கள். திப்பு சுல்தானின் மறைவிற்குப் பின் 1801 ஆம் ஆண்டு கர்நாடகத்தின் இராணுவ நிர்வாகம் ஆங்கில அதிகாரத்தின் கீழ் கொண்டு வரப்பட்டது. இவ்வாறு 1801ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்தது. 1995 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளி ஆங்கில ஆதிக்கத்தின் கீழ் வந்த்து. 1995 ஆம் ஆண்டு திருச்சிராப்பள்ளியிலிருந்து பிரிந்து பெரம்பலூர் மற்றும் கரூர் ஆகிய புதிய மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன. பெரம்பலூர் மாவட்டம் வடக்கே கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்கள், தெற்கே திருச்சிராப்பள்ளி கிழக்கே அரியலூர் மற்றும் மேற்கில் திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் மாவட்டங்களுக்கு இடையே அமைந்துள்ளது.

அரசாணை எண் 913, வருவாய் Y3 தேதி 30.09.1995 இன் படி அன்றிலிருந்த திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலிருந்து பிரிந்து ஒருங்கிணைந்த பெரம்பலூர் மாவட்டம் நடைமுறைக்கு வந்த்து. அரசாணை எண் 656, வருவய், தேதி 29.12.2000 மற்றும் அரசாணை எண் 657, வருவாய் தேதி 29.12.2000 இன்படி பெரம்பலூர் மாவட்டம் பெரம்பலூரைத் தலைமையிடமாகக் கொண்ட பெரம்பலூர் மாவட்டம் எனவும், அரியலூரைத் தலைமையிடமாகக் கொண்ட அரியலூர் மாவட்டம் எனவும் இரண்டாகப் பிரிக்க ஆணை பிறப்பித்தது. பிறகு அரசாணை எண் 167 வருவாய், தேதி 19.04.2002 மற்றும் அரசாடைண எண் 168, வருவாய், தேதி 19.04.2002 இன்படி அரசு மேற்குறிப்பிட்ட இரண்டு மாவட்டங்களையும் ஒருங்கிணைத்து பெரம்பலூரை தலைமையிடமாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் அமைய ஆணை பிறப்பித்தது.

அரசாணை எண் 683, தேதி 19.11.2007 இன்படி, அரசு பெரம்பலூர் மாவட்டம் மீண்டும் பெரம்பலூர் மற்றும் அரியலூர் என இரு மாவட்டங்களாகப் பிரிக்க உத்தரவு பிறப்பித்தது. அதன்படி பெரம்பலூரை தலைமையாகக் கொண்டு பெரம்பலூர் மாவட்டம் உருவானது. இம்மாவட்டம் ஒரு வருவாய்க் கோட்டத்தினை உள்ளடக்கியது. இது பெரம்பலூர், குன்னம் மற்றும் வேப்பந்தட்டை ஆகிய மூன்று வட்டங்களை (தாலுக்காக்கள்) கொண்டது. பின்னர் அரசாணை எண் 410, தேதி 21.11.2012 இன்படி குன்னம் வட்டம், குன்னம் மற்றும் ஆலத்தூர் வட்டம் என இரண்டாகப் பிரிக்கப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டம் வடக்கே கடலூர் மற்றும் சேலம் மாவட்டங்களையும், தெற்கே திருச்சிராப்பள்ளி கிழக்கே அரியலூர் மேற்கே திருச்சிராப்பள்ளி மற்றும் சேலம் மாவட்டத்தினாலும் சூழப்பட்டுள்ளது.