Close

சர்க்கரை ஆலை பெரம்பலூர்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

பெரம்பலூர் சர்க்கரை ஆலை, 36 எறையூர் P.O, பெரம்பலூர் மாவட்டம் – 621 133

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் இலக்கு குழுக்கள் திட்டங்களை செயல்படுத்த தேவையான ஆவணங்கள்

ஒன்றிய மற்றும் மாநில அரசின் திட்டங்கள்

1.தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2023-24 – கரும்பு துறை.
2.சொட்டுநீர் பாசணம்- கரும்பு துறை.
3. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டம். 2023-2024.
4.காட்டுபன்றி விரட்டி மருந்து:
5.சிறப்பு ஊக்கத்தொகை – விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கிற்கு வழங்குதல். 2022-23 அரவைப்பருவம்.

1.தேசிய வேளாண்மை வளர்ச்சித் திட்டம் 2023-24 – கரும்பு துறை.

1.அ. வல்லூநர் விதை கரும்பு.
1.ஆ. திசு வளர்ப்பு நாற்றுகள்.
1.இ. பருசீவல் நாற்றுகள்.
1.ஈ. ஒரு பரு விதைக்கரணைகள்.

1.அ. வல்லூநர் விதை கரும்பு.

1.அ.I. மானியம் – ரூ.2500/- ஒருஹெக்டேர்; ஒரு ஹெக்டேருக்கு தேவையானவல்லூநர் விதை கரும்பு அளவு 5 மெ.டன்.
1.அ.II.புதிய வகை வல்லூநர் விதை கரும்புகள் – கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் TNAU- SRS கடலூர், மேலாளத்தூர் அவர்களிடம் கொள்முதல் செய்யப்பட்டு மானிய விலையில் வழங்கப்படும்.
1.அ.III. இலக்கு – 7 ஹெக்டேர் (35 மெ.டன்).
1.அ.IV. இத்திட்டத்தின் மொத்த மானியத் தொகை – ரூ.87,500/-.

1.ஆ. திசு வளர்ப்பு நாற்றுகள்.

1.ஆ.I. மானியம் – ரூ.90,000/- ஒரு ஹெக்டேர்; ஒரு ஹெக்டேருக்கு தேவையான திசு வளர்ப்பு நாற்றுகள் அளவு 15000 எண்ணிக்கை.
1.ஆ.II திசு வளர்ப்பு நாற்றுகள் – கரும்பு இனப்பெருக்க நிறுவனம், கோயம்புத்தூர் மற்றும் கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை-1, மூங்கில்துறைப்பட்டு அவர்களிடம் கொள்முதல்செய்யப்பட்டு மானிய விலையில் வழங்கப்படும்.
1.ஆ.III. இலக்கு – 1 ஹெக்டேர் (15000 திசு வளர்ப்பு நாற்றுகள்).
1.ஆ.IV. மொத்த மானியத் தொகை – ரூ.90,000/-.

1.இ. பருசீவல் நாற்றுகள்.

1.இ.I.மானியம் – ரூ.12500/- ஒரு ஹெக்டேர். ஒரு ஹெக்டேருக்கு தேவையான பருசீவல் நாற்றுகள் அளவு 12500 நாற்றுகள்.
1.இ.II. இலக்கு –1.50 ஹெக்டேர்.
1.இ.III. மொத்த மானியத் தொகை – ரூ.18,750/-.

1.ஈ. ஒரு பரு விதைக்கரணைகள்.

1.ஈ.I. மானியம் – ரூ.3750/- ஒரு ஹெக்டேர். ஒரு ஹெக்டேருக்கு தேவையான ஒரு பரு விதைக்கரணைகள் அளவு 2.5 மெ.டன்.
1.ஈ.II. இலக்கு – 0 ஹெக்டேர்.(வழங்கப்படும்)

2.சொட்டுநீர் பாசணம்- கரும்பு துறை

2.1. பெரம்பலூர் மாவட்டம் – வட்டாரம்:
2.1.அ. ஆலத்தூர்.
2.1.ஆ.பெரம்பலூர்.
2.1.இ. வேப்பூர்.
2.1.ஈ. வேப்பந்தட்டை.

2.2. சொட்டுநீர் பாசணம் ஆண்டுகள், வட்டாரம் – பயனாளிகள் விபரம்.

ஆண்டு வட்டாரம் சொட்டு நீர் பாசனம் பரப்பு (ஹெக்டேர்) பயனாளிகள் எண்ணிக்கை
2017-18 ஆலத்தூர் 0 0
  பெரம்பலூர் 0 0
  வேப்பூர் 0 0
  வேப்பந்தட்டை 7.66 7
2018-19 ஆலத்தூர் 1.84 1
பெரம்பலூர் 1.15 1
வேப்பூர் 51.38 46
வேப்பந்தட்டை 54.29 43
2019-20 ஆலத்தூர் 10.10 8
பெரம்பலூர் 20.96 18
வேப்பூர் 225.48 221
வேப்பந்தட்டை 114.98 99
2020-21 ஆலத்தூர் 2.81 3
பெரம்பலூர் 18.84 16
வேப்பூர் 116.83 113
வேப்பந்தட்டை 135.29 119
2021-22 ஆலத்தூர் 10.43 10
பெரம்பலூர் 6.07 7
வேப்பூர் 72.01 72
வேப்பந்தட்டை 72.33 63
2022-23 ஆலத்தூர் 4.75 3
பெரம்பலூர் 6.68 4
வேப்பூர் 26.82 30
வேப்பந்தட்டை 25.30 22
2023-24 ஆலத்தூர் 0 0
31.07.2023 வரை பெரம்பலூர் 0.78 1
வேப்பூர் 5.98 5
வேப்பந்தட்டை 6.67 5

 

3. கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளான் வளர்ச்சி திட்டம். 2023-2024.

3.அ. பருசீவல் நாற்றுகள்.
3.அ.I. மானியம் – ரூ.12500/- ஒரு ஹெக்டேர். ஒரு ஹெக்டேருக்கு தேவையான பருசீவல் நாற்றுகள் அளவு 12500 நாற்றுகள்.
3.அ.II. இலக்கு – 12.00 ஹெக்டேர்.

3.ஆ. ஒரு பரு விதைக்கரணைகள்.
1.ஆ.I. மானியம் – ரூ.3750/- ஒரு ஹெக்டேர். ஒரு ஹெக்டேருக்கு தேவையான ஒரு பரு விதைக்கரணைகள் அளவு 2.5 மெ.டன்.
1.ஆ.II. இலக்கு – 6.10 ஹெக்டேர்.

4.காட்டுபன்றி விரட்டி மருந்து:

4.அ.மானியம் – ரூ.2250/- ஒரு ஹெக்டேர். ஒரு ஹெக்டேருக்கு தேவையான காட்டுபன்றி மருந்து 5 லிட்டர்,400 எண்ணிக்கையிலான இரும்பு கட்டு கம்பி.
4.ஆ. இலக்கு – 100 ஹெக்டேர்
4.இ.மொத்த மானியத் தொகை – ரூ.2,25,000/-.

தமிழ்நாடு வேளாண்ப் பல்கலைக்கழகத்தால் உற்பத்தி செய்யப்படும் காட்டுபன்றி விரட்டி மருந்து.

5.சிறப்பு ஊக்கத்தொகை – விவசாயிகளின் நேரடி வங்கி கணக்கிற்கு வழங்குதல். 2022-23 அரவைப்பருவம்.

5.அ. சப்ளை செய்யப்பட்ட மொத்த கரும்பு – 362146.778 மெ.டன்.(4 மாவட்டங்கள்)
5.ஆ. சிறப்பு ஊக்கத்தொகை – ரூ.195/மெ.டன்.
5.இ. விவசாயிகளின் மொத்த எண்ணிக்கை – 4254 விவசாயிகள்.