மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மையம்

  • துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

எண்.138-1, மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம், மாவட்ட மைய நூலகம் எதிர்ப்புறம், துறைமங்கலம், பெரம்பலூர் (அஞ்சல்) பெரம்பலூர்-621220

  • நிர்வாகஅமைப்பு

Employment and Career Guidance Administrative Structure Tamil.

  • நோக்கங்கள்

1.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் கல்வித்தகுதியினை வேலைவாய்ப்புத்துறையின் இணையத்தில் (https://www.tnvelaivaaippu.gov.in/) பதிவு செய்தல், புதுப்பித்தல், முன்னுரிமை பதிவுகள் மேற்கொள்ளுதல்
2.வேலையளிப்பவர்களிடமிருந்து பெறப்படும் காலிப்பணியிடங்களுக்கு பதிவு மூப்பின் அடிப்படையில் பரிந்துரைத்தல்
3.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள்) உதவித்தொகை அரசு விதிமுறைகளின்படி வழங்குதல்
4.அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளை எதிர்கொள்ளும் படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு (பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள்) கட்டணமில்லா பயிற்சி வகுப்பு நடத்துதல்
5.அரசு மற்றும் தனியார் துறைகளில் உள்ள காலிப்பணியிட விவரங்களை சேகரித்தல்
6.தனியார்துறையில் விருப்பமுடைய வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை (பொது மற்றும் மாற்றுத்திறனாளி இளைஞர்கள்) பணியமர்த்திட உரிய நடவடிக்கை மேற்கொள்ளுதல்
7.பள்ளி, கல்லூரி, தொழிற்பயிற்சி நிலைய மாணவ மாணவிகளுக்கு தொழில்நெறி வழிகாட்டுதல் நிகழ்ச்சிகள் நடத்துதல்
8.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுய வேலைவாய்ப்பு ஏற்படுத்திட ஊக்குவித்தல்

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்

1.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டம்
2.மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டம்
3.மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கு இலவச பயிற்சி வகுப்புகள் நடத்துதல்
4.வேலைவாய்ப்பற்ற இளைஞர்களை தனியார்துறையில் பணியமர்த்தம் செய்தல்

  • சாதனைகள்

1.கடந்த 5 ஆண்டுகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடத்தப்பட்ட மத்திய, மாநில அரசுப்பணிகளுக்கான போட்டித்தேர்வுகளுக்கான இலவச பயிற்சி வகுப்புகளில் ஆண்கள்-42 மற்றும் பெண்கள்-37 என மொத்தம் – 79 மாணவ மாணவிகள் வெற்றி பெற்று அரசுப்பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.
2.கடந்த 5 ஆண்டுகளில் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடத்தப்பட்ட 9 மாபெரும் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் 4408 வேலைநாடுநர்களும், 54 சிறிய அளவிலான தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்களில் 2359 வேலைநாடுநர்களும் வேலையளிப்பவரால் தேர்வு செய்யபப்ட்டு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டது.
3.கடந்த 5 ஆண்டுகளில் 5433 வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.3,53,44,500/- உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது.
4.கடந்த 5 ஆண்டுகளில் 381 வேலைவாய்ப்பற்ற மாற்றுத்திறனாளி இளைஞர்களுக்கு ரூ.46,62,900/- உதவித்தொகை வழங்கப்பட்டுள்ளது

விண்ணப்பப் படிவம்

வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான உதவித்தொகைத் திட்டம் – விண்ணப்பப் படிவம்

மாற்றுத்திறனாளி வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு உதவித்தொகை திட்டம் – விண்ணப்பப் படிவம்

போட்டித் தேர்வுகளுக்கான இலவசப் பயிற்சி வகுப்பு – மாணவர் சேர்க்கை விண்ணப்பப் படிவம்