மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு, சுபா வணிக வளாகம், 106F/7, அன்னை நகர், மாவட்ட ஆட்சியர் சாலை, பெரம்பலூர்-621212.

  • துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலுவலர், சமூக நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, 8668092093

  • நிர்வாகஅமைப்பு

DCPU Administrative Structure Tamil.

  • நோக்கங்கள்

பாதுகாப்பற்ற சூழ்நிலைகள், அத்துமீறல், புறக்கணிப்பு, சுரண்டல் மற்றும் குழந்தைகள் தனிமைப்படுத்துதல் போன்ற காரணங்களால் இக்கட்டான சூழ்நிலைகளில் உள்ள குழந்தைகளின் முன்னேற்றம் மற்றும் அவா்களின் மறுவாழ்விற்கு தேவையான பங்களிப்பு மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்தல்.

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
நிதி ஆதரவு திட்டம்:
குழந்தைகளின் மருத்துவம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.
இலக்கு மக்கள்:
o 0 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள்
o கிராமப்புறத்தில், ரூ.72000/- நகர்ப்புறத்தில் ரூ.96000/- ஆண்டு வருமானம் உள்ள குடும்பங்களை சேர்ந்த குழந்தைகள்.
o மத்திய மாநில அரசுகளின் வேறு திட்டங்களின் கீழ் உதவித்தொகை பெறாத குழந்தைகள்.
o குழந்தை பராமரிப்பு நிறுவனங்கள் மற்றும் விடுதிகளில் தங்கி கல்வி பயலும் குழந்தைகள்.
கீழ்க்கண்ட வகைப்பாட்டிலுள்ள குழந்தைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும்:
o விதவை தாய்மார்களின் குழந்தைகள்
o தொழுநோய் / எச்.ஐ.வியால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள்
o சிறைவாசிகளின் குழந்தைகள்
நிதி விபரங்கள்:
o ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.4000/- வீதம் ஒரு குடும்பத்தில் இரண்டு குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
o 18 வயது பூர்த்தியடையும் நாள்(விதிவிலக்கான சூழ்நிலைகள் தவிர) வரை மாதம் ரூ.4000/- மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.
நிதி ஆதரவு உதவித்தொகை பெற கொடுக்க வேண்டிய ஆவணங்கள்:
o மனு (பாஸ்போர்ட் அளவு புகைப்படம்-1 எண்)
o கல்விச்சான்று
o வருமானச்சான்று
o குழந்தையின் வங்கிகணக்கு புத்தகத்தின் நகல்
o குழந்தை / பெற்றோர் / பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல்
o குடும்ப அட்டை நகல்
o தாய் / தந்தை இறந்திருப்பின் இறப்புச்சான்று நகல்
o தாய் / தந்தை / குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பான மருத்துவ ஆவணங்களின் நகல்.
வளர்ப்பு பராமரிப்பு:
குழந்தை நலக்குழுவின் ஆணையின் படி ஒரு குழந்தை, தான் பிறந்த குடும்பம் அல்லாத வேறு ஒரு குடும்ப சூழலில்; தற்காலிகமாக பராமரிக்கப்படுவது வளர்ப்பு பராமரிப்பு ஆகும்.
இலக்கு மக்கள்:
o குழந்தை பராமரிப்பு நிறுவனத்தில் தங்கியுள்ள 6 முதல் 18 வயது வரையுள்ள குழந்தைகள்.
o தீவிர நோயால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகள், தங்கள் குழந்தைகளை பராமரிக்க இயலவில்லை எனவும் தங்கள் குழந்தைகளுக்கு உரிய பராமரிப்பு அளிக்குமாறும் குழந்தை நலக்குழு மற்றும் மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகிற்கு விண்ணப்பித்த பெற்றோர்களின் குழந்தைகள்.
o மனநிலை பாதிக்கப்பட்ட நிலையில் தங்கள் குழந்தைகளை பராமரிக்க இயலாத நிலையிலுள்ள குழந்தைகள்.
o தாய் தந்தை இருவருமோ அல்லது எவரேனும் ஒருவர் சிறையில் இருப்பவர்களின் குழந்தைகள்.
o உடல் ரீதியான, உணர்வு ரீதியான, பாலியல் ரீதியான, இயற்கை பேரழிவு, உள்நாட்டு வன்முறைகளால் பாதிக்கப்பட்ட குழந்தைகள்.
நிதியுதவி:
o வளர்ப்பு பராமரிப்பில் உள்ள குழந்தையை பராமரிக்க நிதியுதவி தேவைப்படின்> குழந்தையின் பராமரிப்பிற்காக மாதம் ரூ.2000/- மட்டும் வழங்கப்படும்.
o வளர்ப்பு பராமரிப்பு குறித்த மேலும் விபரங்களுக்கு கீழ்க்கண்ட வலைதளத்தில் பார்க்கவும்: http://www.wcd.nic.in/acts/model-guidelines-foster-care-2016
அன்புகரங்கள் திட்டம்:
குழந்தைகளின் மருத்துவம், ஊட்டச்சத்து, கல்வி மற்றும் இதர தேவைகளை பூர்த்தி செய்வதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கைத்தரத்தை மேம்படுத்துவதற்கு நிதி ஆதரவு வழங்கப்படுகிறது.
குழந்தைகளின் வகைப்பாடு:
1. ஆதரவற்ற குழந்தைகள் (பெற்றோர் இருவரையும் இழந்தவர்கள்).
2. கைவிடப்பட்ட குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து. மற்றொரு பெற்றோர் குழந்தையை கைவிட்டுச் சென்று இருப்பின்)
3. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் மாற்றுத்திறன் தன்மை (Physically/mentally challenged) கொண்டவராக இருந்தால்
4. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து மற்றொரு பெற்றோர் சிறையில் இருந்தால்)
5. ஆதரவு தேவைப்படும் குழந்தைகள் (பெற்றோரில் ஒருவர் இறந்து, மற்றொரு பெற்றோர் உயிருக்கு ஆபத்தான நோய்களுடன் வாழ்ந்து வந்தால்)
அன்புகரங்கள் உதவித்தொகை பெற கொடுக்க வேண்டிய ஆவணங்கள்:
o பாஸ்போர்ட் அளவு (புகைப்படம்-1 எண்)
o கல்விச்சான்று
o பிறப்பு சான்று
o குழந்தையின் வங்கிகணக்கு புத்தகத்தின் நகல்
o குழந்தை / பெற்றோர் / பாதுகாவலரின் ஆதார் அட்டை நகல்
o குடும்ப அட்டை நகல்
o தாய் / தந்தை இறந்திருப்பின் இறப்புச்சான்று நகல்
o தாய் / தந்தை / குழந்தைகளுக்கு ஏதேனும் உடல் நலப் பிரச்சனைகள் இருந்தால் அது தொடர்பான மருத்துவ ஆவணங்களின் நகல்.
நிதி விபரங்கள்:
o ஒரு குழந்தைக்கு மாதம் ரூ.2000/- வீதம் ஒரு குடும்பத்தில் உள்ள அனைத்து குழந்தைகளுக்கு உதவித்தொகை வழங்கப்படுகிறது.
o 18 வயது பூர்த்தியடையும் வரை மாதம் ரூ.2000/- மட்டும் உதவித்தொகை வழங்கப்படும்.
போக்சோ –இழப்பீட்டு நிதி:
பாலியல் துன்புறுத்தல்களால் பாதிக்கப்படும் குழந்தைகளுக்கு நீதிமன்றத்தில் உத்தரவிடப்படும் இழப்பிட்டு தொகையினை பெற்று வழக்குவதற்கான கருத்துரு மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகின் மூலம் சென்னை-08, குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை இயக்குநர் அவர்களுக்கு அனுப்ப உரிய ஒப்பளிப்பு ஆணை பெறப்பட்டு தொகை பெற்று வழங்கப்படுகிறது