சின்ன வெங்காய வணிக வளாகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 03.10.2025
வெளியிடப்பட்ட தேதி : 06/10/2025

ஆலத்தூர் வட்டத்திற்குட்பட்ட செட்டிகுளம் பகுதியில் சின்னவெங்காயம் உற்பத்தி விவசாயிகளின் வயல்களுக்கே சென்று மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள், பார்வையிட்டு ஆய்வு செய்து, சின்ன வெங்காய வணிக வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மதிப்பு கூட்டக்கூடிய இயந்திரங்களை பார்வையிட்டு, சின்ன வெங்காய விவசாயிகளுடன் கலந்துரையாடினார்.(PDF 38KB)