நகரப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – 26.08.2025
வெளியிடப்பட்ட தேதி : 28/08/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் , பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் ஆகியோர் பெரம்பலூர் தந்தை ரோவர் தொடக்கப்பள்ளியில் நேரலையில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.(PDF 38KB)