பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்து பள்ளிகளில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் 20 கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டுவதற்குகான பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பார்வையிட்டு தொடங்கி வைத்தார் -20.09.2025
வெளியிடப்பட்ட தேதி : 22/09/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு. க. ஸ்டாலின் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் ஐந்து பள்ளிகளில் ரூ.5.27 கோடி மதிப்பீட்டில் 20 கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள் கட்டுவதற்கு காணொளிக்காட்சி வாயிலாக அடிக்கல் நாட்டினார்கள்.அதனைத்தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆகியோர் எளம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் வகுப்பறைக்கட்டடம் கட்டப்படவுள்ள இடத்தைப் பார்வையிட்டு பணிகளை தொடங்கி வைத்தார்கள்.(PDF 38KB)