• Site Map
  • Accessibility Links
  • தமிழ்
Close

மாவட்டம் சுருக்கக்குறிப்புகள்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரே ஒரு வருவாய்க் கோட்டமாக பெரம்பலூர் வருவாய் கோட்டம் உள்ளது. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, குன்னம், ஆலத்தூர் ஆகிய நான்கு வட்டங்கள் உள்ளன. இவற்றில் 152 வருவாய் கிராமங்கள் உள்ளன. பெரம்பலூர் மாவட்டத்தில் பெரம்பலூர், வேப்பந்தட்டை, வேப்பூர், ஆலத்தூர் ஆகிய நான்கு ஊராட்சி ஒன்றியங்கள் உள்ளன. இவற்றில் 121 ஊராட்சிகள் உள்ளன. ஒரே ஒரு நகராட்சியாக பெரம்பலூர் மற்றும் பேரூராட்சிகளாக அரும்பாவூர், குரும்பலூர், லப்பைக்குடிகாடு, பூலாம்பாடி ஆகிய நான்கு பேரூராட்சிகளும் உள்ளன.

மேலும் புள்ளியியல் தகவல்களுக்கு இங்கே சொடுக்குக (4.3 MB)