மாவட்ட தொழில் மையம்
மாவட்ட ஏற்றுமதி செயல் திட்டம்
ஏற்றுமதி பொருட்கள் ஊக்குவிப்பு குழுக்கூட்டம்
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
மாவட்ட தொழில் மையம், பெருந்திட்ட வளாகம், மாவட்ட ஆட்சியரகம் அருகில், பெரம்பலூர்-621 212.
- துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
மாவட்ட தொழில் மையம், பொது மேலாளர், 89255 33976, dicpblr@gmail.com
- நிர்வாகஅமைப்பு
- நோக்கங்கள்
படித்த வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு சுயதொழில் துவங்கிட மானியத்துடன் கூடிய கடனுதவி வங்கிகள் மூலம் கடன் பெற்று உற்பத்தி, சேவை மற்றும் வியாபாரம் ஆகிய பிரிவுகளில் தொழில் துவங்க வழிவகை செய்தல்.
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் இலக்கு குழுக்கள் திட்டங்களை செயல்படுத்த தேவையான ஆவணங்கள்
படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (UYEGP)
தமிழகத்தில் வேலை வாய்ப்பினை உருவாக்கவும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்களின் வளர்ச்சிக்காகவும், படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பபு உருவாக்கும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்த திட்டத்தின் கீழ் தொழில் தொடங்க வியாபாரம் பிரிவில் ரூ.15 லட்சம் வரையிலும் உள்ள கடன் திட்டங்களுக்கு 25 சதவீதம் மானியமாக ரூபாய் 3,75,000/- வரை தமிழக அரசு வழங்கும். வங்கியின் மூலம் கடன் பெற மாவட்ட தொழில் மைய பொது மேலாளரைத் தலைவராகக் கொண்ட தேர்வுக்குழு வங்கிகளுக்கு பரிந்துரை செய்யும்.
இத்திட்டத்தின் கீழ் பயன்பெற குறைந்தபட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற பொதுப்பிரிவினர் 18 முதல் 35 வயது வரையிலும், சிறப்பு பிரிவினர் மற்றும் பெண்கள் 18 முதல் 45 வயது வரையிலும் இருக்கலாம் மற்றும் குடும்ப ஆண்டு வருமானம் ரூபாய் 5,00,000/- வரை இருக்கலாம்.
திட்ட மதிப்பீட்டில் பொது பிரிவினர் 10 சதவீதமும் தாழ்த்தப்பட்டோர், பழங்குடியினர், பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர், முன்னாள் இராணுவத்தினர், உடல் ஊனமுற்றோர், மகளிர் மற்றும் திருநங்கைகள் 5 சதவீதமும் தமது பங்காக செலுத்த வேண்டும்.
புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டம் (NEEDS)
தமிழகத்தில் படித்த வேலையற்ற இளைஞர்கள் புதிதாக தொழில் துவங்க, தமிழக அரசு குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் மேம்படவும், புதிய தொழில் நிறுவனங்கள் முதல் தலைமுறை தொழில் முனைவோர் மூலம் ஏற்படவும் மாவட்ட தொழில் மையம் மூலம் புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டுத் திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.
இத்திட்டத்தில் பயன்பெற 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற முதல் தலைமுறை தொழில் முனைவோர் பொதுப் பிரிவினர் 21 வயது முதல் 35 வயதிற்குள் இருக்க வேண்டும். பெண்கள் மற்றும் இதர பிரிவினர்களுக்கு 21 வயது முதல் 45 வயது வரை இருக்கலாம்.
விண்ணப்பதாரர்கள் தமிழகத்தில் குறைந்தது 3 ஆண்டுகள் வசிப்பவராக இருக்க வேண்டும். இத்திட்டத்தின் கீழ் ரூ. 10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரையிலான உற்பத்தி மற்றும் சேவை சார்ந்த தொழில் திட்டங்களுக்கு 25 சதவீதம் அதிகபட்சமாக ரூ.75 லட்சம் வரை தமிழக அரசு மானியத்துடன் கூடிய வங்கி கடன் உதவி வழங்கப்படும்.
இத்திட்டத்தின் கீழ் பட்டியல் இனம் / பழங்குடியினர் மற்றும் மாற்றுத் திறனாளி தொழில் முனைவோருக்கு 10 விழுக்காடு கூடுதல் முதலீட்டு மானியம் வழங்கப்படும். தவணை தவறாமல் கடனை திருப்பி செலுத்தும் தொழில் முனைவோர்களுக்கு கூடுதல் சலுகையாக 3 சதவீதம் வட்டி மானியம் வழங்கப்படும்.
பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டம் (PMEGP)
குறுந்தொழில்கள் மற்றும் கிராமத் தொழில்களை ஊக்குவிக்கும் பொருட்டு பிரதம மந்திரியின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 25% முதல் 35% வரை மானியத்துடன் கூடிய உற்பத்தி சார்ந்த தொழில்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலும், சேவை சார்ந்த தொழில்களுக்கு ரூ.20 லட்சம் வரையிலும் இத்திட்டத்தின் கீழ் வங்கியின் மூலம் தொழில் கடன் பெற்று சுய தொழில் செய்ய செயல்படுத்தப்படுகிறது.
இத்திட்டத்தில் உற்பத்தி பிரிவின் கீழ் ரூபாய் 10 லட்சத்திற்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், சேவை பிரிவின் கீழ் 5 லட்ச ரூபாய்க்கு மேல் திட்ட மதிப்பீடு உள்ள தொழில்களுக்கும், குறைந்த பட்சம் 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தகுதியுடையவர்கள் மற்றும் உச்ச வயது வரம்பு கிடையாது.
அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்டம்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பை முன்னேற்றம் அடைய இளம் தொழில் முனைவோர்களை உருவாக்க தமிழக அரசால் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேல் 55 வயதிற்குள் உள்ளவர்கள் கல்வி தகுதி மற்றும் ஆண்டு வருமானம் உச்ச வரம்பின்றி 35 சதவீதம் மானியத் தொகை மற்றும் 6 சதவீதம் வட்டி மானிய தொகை உதவியுடன் வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று நேரடி வேளாண்மை தவிர்த்து அனைத்து உற்பத்தி, வணிகம் மற்றும் சேவை சார்ந்த தொழில்கள் துவங்கி பயன்பெறலாம்.
பிரதான் மந்திரி உணவு பதப்படுத்தும் குறு நிறுவனங்களை முறைப்படுத்தும் திட்டம்
ஆண்/பெண், சாதி/மதம், கிராமம்/நகரம் பாகுபாடு இன்றி அனைத்து வகுப்பினரையும் முன்னேற்றமடைய தொழில் முனைவோர்களை உருவாக்க இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
இத்திட்டத்தின் கீழ் 18 வயதிற்கு மேல் உள்ளவர்கள் கல்வி தகுதி மற்றும் ஆண்டு வருமானம் உச்ச வரம்பின்றி 35 சதவீதம் அதிகபட்ச ரூபாய் 10 லட்சம் மானியத் தொகை உதவியுடன் ரூ 1 கோடி வரையிலான உணவு பொருட்கள் தயாரிக்கும் தொழில்களுக்கு வங்கிகள் மூலம் கடன் உதவி பெற்று தொழில்கள் துவங்கி பயன்பெறலாம்.