Close

மின் மாவட்ட திட்டம்

முன்னுரை:

மின்னாளுமை மாவட்ட திட்டம் என்பது தேசிய மின்னாளுமை திட்டத்தின் கீழ் மாநில கொள்கை முனைப்பு திட்டங்களின் (State Mission Mode Project ) ஒரு பகுதியாக விளங்குகிறது. மிக அதிக அளவில் சேவை வழங்கப்படும் அரசு சேவைகளில், சேவைகளின் தரத்தை உயர்த்தி, இணையம் மூலமாக வழங்குவதற்காக, தகவல் தொழில்நுட்பம் மற்றும் அரசு செயல்பாடுகள் மறுசீரமைப்பு தொழில்நுட்பங்களை இந்த திட்டத்தில் பயன்படுத்துகிறது. 06.12.2013 தேதியிட்ட தகவல் தொழில்நுட்பத்துறை அரசாணை எண்.22 படி எல்லா மாவட்டங்களிலும் மின்னாளுமை மாவட்ட திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மேலும் எல்லா மாவட்டங்களிலும், மாவட்ட மின்னாளுமை சங்கம் ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதன் படி மாவட்ட ஆட்சித் தலைவரை தலைவராகக் கொண்ட மாவட்ட மின்னாளுமை சங்கம், 12.12.2012 அன்று ஏற்படுத்தப்பட்டது.

பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள பொது சேவை மையம் (CSC):
வ.எண் சேவை நிறுவனம் மையங்களின் எண்ணிக்கை முனையங்களின் எண்ணிக்கை
1 அரசு கேபிள் தொலைக்காட்சி 6 11
2 அரசு கேபிள் தொலைக்காட்சி Franchise 10 10
3 தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம் 54 55
4 கிராம வறுமை ஒழிப்பு சங்கம் 112 113
5 கிராமப்புற தொழில் முனைவோர் 26 26
மொத்தம் 208 215
வட்டம் வாரியான பொது சேவை மையங்கள் :
வ.எண் வட்டத்தின் பெயர் தொ.வே.கூ.ச கி.வ.ஒ.ச த.அ.கே.டிவி கி.தொ.மு. த.அ.கே.டிவி (TAF) மொத்தம்
1 ஆலத்தூர் 12 35 1 5 0 55
2 குன்னம் 16 33 2 9 2 60
3 பெரம்பலூர் 9 18 6 6 8 46
4 வேப்பந்தட்டை 18 27 2 6 0 54
மொத்தம்
55 113 11 26 10 215
  • தொ.வே.கூ.ச – தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம்
  • ம.தி – மகளிர் திட்டம்
  • த.அ.கே.டிவி – தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம்
  • கி.தொ.மு. – கிராம தொழில் முனைவோர்

மின் ஆளுமை சேவைக் கட்டணம்:

பார்க்க: https://tnega.tn.gov.in/readmore