ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை,மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலகம். பெரம்பலுார்
- துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் , 7338801325, dadwo.perambalur @gmail.com
- நிர்வாக அமைப்பு
- நோக்கங்கள்
ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினரின் சமூக. பொருளாதார முன்னெற்றத்திற்காக இத்துறை பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.குறிப்பாக கல்வியின் மூலமாக இம் மக்களைச் சமூக பிரிவினையிலிருந்தும்.பொருளாதார இக்கட்டிலிருந்தும் மீள செய்து தேசிய நீரோட்டத்தில் சேர்க்கும் வண்ணம் திட்டங்கள் தீட்டப்பட்டு செயல்படுத்துவது மட்டுமின்றி.சமுதாயத்தில் நலிவுற்ற மக்களின் சமூகப் பொருளாதார நிலையைத் துரிதமாக மேம்படுத்தும் நோக்கங்களுடனும்.இத்திட்டங்கள் அமைந்துள்ளன.
ஆதிதிராவிடர் நலத்துறையால் நிறைவேற்றப்படும் திட்டங்களில் கல்வி உதவித் தொகை முக்கியப் பங்கு வகிக்கின்றது.இத்திட்டம் மட்டுமின்றி.சமூக மேம்பாட்டு திட்டங்களில் ஒருபாகமாக. வீட்டுமனைப்பட்டாக்கள் வழங்குதல்.வீடுகள் கட்டித்தருதல் மற்றும் அடிப்படை வசதிகளான சாலைகள் அமைத்தல்.மயான மேம்பாடு.மயானத்திற்கு செல்லும் பாதை.இணைப்புச்சாலை, சமுதாய நலக்கூடங்கள்.சமத்துவ மயானம் மற்றும் ஊக்கத்தொகை வழங்குதல்.தெருவிளக்கு வசதி செய்தல்.குடிநீர்.மயானம் மற்றும் மயானப்பாதை அமைத்தல் போன்ற திட்டங்களும் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மலைப்பகுதிகளில் வசிக்கும் அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர்களுக்கு அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதிபடுத்தும் பொருட்டு அவர்கள் வசிக்கின்ற பகுதியிலேயே இத்துறை பாரம்பரிய விடுகள் கட்டித்தருதல். கறவை மாடுகள் வழங்குதல்.குடிநீர் வசதி மற்றும் தெருவிளக்குகள் போன்றவை அமைத்தல் ஆகிய அம்சங்களில் சில சிறப்பு திட்டங்களைத் தீட்டி வருகிறது.
பழங்குடியினர் பகுதிகளில் உட்கட்டமைப்புப் பணிகளை மேம்படுத்துவதற்காகவும். வனஉரிமைப் பாதுகாப்புச் சட்டத்தைச் செயல்படுத்துவதற்காகவும் இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் 275(1) கூறு நிதி பயன்படுத்தப்படுகிறது.ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு எதிராக நிகழும் தீண்டாமை மற்றும் வன்கொடுமைகளைத் தடுக்க இத்துறை அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.
- தற்போது செயல்படுத்தி வரும்திட்டங்கள் / இலக்கு குழுக்களின் திட்டங்கள்/ திட்டங்களை பெறுவதற்கான தேவையான ஆவணங்கள்
வ.
எண் |
திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் | திட்டத்தின் பெயர் மற்றும் விவரம் | தொடர்பு கொள்ள வேண்டிய அலுவலர் |
1 | போஸ்ட் மெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம்
பத்தாம் வகுப்பிற்கு மேற்பட்ட படிப்புகளில் கல்வி பயிலும் மாணாக்கர் தமது கல்வியை தொடரவும், உயர்கல்வியில் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் மாணாக்கரின் மொத்த சேர்க்கை விகிதத்தை உயர்த்திடும் நோக்குடனும் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது. இத்திட்டத்தினை செயல்படுத்த ஏற்படும் செலவினத் தொகை 60:40 என்ற விகிதத்தில் ஒன்றிய மற்றும் மாநில அரசுகளால் பகிர்ந்தளிக்கப்படுகிறது. இத்திட்டத்தின்கீழ் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரி கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் மாணாக்கருக்கு கல்விக் கட்டணங்கள் மற்றும் கல்விப்படி ஆகியவை கல்வி உதவித் தொகையாக மாணாக்கரின் வங்கி சேமிப்புக் கணக்குகளில் அரசால் வரவு வைக்கப்படுகிறது. |
பெற்றோர் (அல்லது) பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சம் (அனைத்து வகை வருமானமும் சேர்த்து கணக்கிடப்படும்)
(ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணாக்கர்களுக்கு மட்டும்) |
(அ) பள்ளி தலைமை ஆசிரியர்கள் கல்லூரி முதல்வர்கள்
(ஆ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம். |
2 | ப்ரீமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம்
ஒன்பது மற்றும் பத்தாம் வகுப்பு பயிலும் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் மாணாக்கர்களுக்கான ப்ரீமெட்ரிக் கல்வி உதவித் தொகை திட்டம்.
ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை பயிலும் சுகாதார தொழில் புரிவோரின் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை திட்டம் |
பெற்றோர் (அல்லது) பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சம்
1 முதல் 10ஆம் வகுப்பு வரை பயிலும் மாணாக்கர்கள் சாதி இனம் கணக்கின்றி அனைத்து பிரிவினருக்கும் பொருந்தும். |
(அ) பள்ளி தலைமை ஆசிரியர்கள்
(ஆ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம். |
3 | பெண்கல்வி ஊக்குவிப்புசிறப்பு திட்டம்
மாணவியர் இடைநிற்றலை தவிர்க்கவும், ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் பெண் குழந்தைகளை அதிக அளவில் கல்வி பயில செய்யும் பொருட்டு அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 3 முதல் 8-ஆம் வகுப்பு வரை கல்வியை தொடரும் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின மாணவியை ஊக்குவிக்கும் வகையில் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
3முதல் 5-ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ரூ.500-மும் 6-ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,000-மும், 7 மற்றும் 8-ஆம் வகுப்பு பயிலும் மாணவியர்களுக்கு ஆண்டிற்கு ரூ.1,500-மும் வழங்கப்படுகிறது. |
பெற்றோர் (அல்லது) பாதுகாவலர் ஆண்டு வருமானம் ரூ.2.50 இலட்சம்
அரசு (ம) அரசு நிதியுதவி பெறும் பள்ளிகளில் பயிலும் ஆதிதிராவிடர் (ம) பழங்குடியின பெண் குழந்தைகள் மட்டும் |
(அ) பள்ளி தலைமை ஆசிரியர்கள்
(ஆ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம். |
4 | இலவச வீட்டுமனை வழங்கும் திட்டம்
கிராமப்புறத்தில் 3சென்ட், பேரூராட்சி மற்றும் நகராட்சியில் 1.5 சென்ட்மற்றும் மாநரகராட்சியில் 1 சென்ட் வரை வீட்டுமனை வழங்கப்படும். |
வீடு, வீட்டுமளை சொந்தமாக இல்லாத ஆதிதிராவிடர் (ம) பழங்குடியினர் கிராம, நகர்ப் பகுதிகளில் உள்ளவர்களுக்கு ஆண்டு வருமான உச்சவரம்பு ரூ.72,000- | (அ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.
(ஆ) தனிவட்டாட்சியர்,ஆதிதிராவிடர் நலம், பெரம்பலூர். |
5 | மயானம்
மயான மேம்பாடு மயானத்திற்குச் செல்லும் பாதை மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருதல்.. |
ஆதிதிராவிடர் குடியிருப்புகளுக்கு மயானம் இல்லாமை இருத்தல்,
மயானம் இருந்தால் அதற்குப் பொது வசதி தேவை. |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.
|
6 | இணைப்புச்சாலை
ஆதிதிராவிடர் குடியிருப்புகளிலிருந்து பிரதான சாலைக்கு இணைப்பு சாலை ஏற்படுத்துதல் |
இணைப்புச் சாலை இல்லாத ஆதிதிராவிடர் வசிக்கும் குடியிருப்புகள்
|
(அ) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.(ஆ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம். |
7 | சமுதாயநலக்கூடங்கள்
ஆதிதிராவிடர் மங்ஞம் பழங்குடியினர் குடியிருப்புகளில் திருமணம் மற்றும் சமுதாய விழாக்கள் போன்ற நிகழ்ச்சிகள் நடத்த சமுதாய நலக்கூடங்கள் கட்டித் தரப்படுகின்றன. |
சமுதாய நலக்கூடங்கள் இல்லாத ஆதிதிராவிடர், பழங்குடியினர் குடியிருப்புகள் | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம். |
8 | சமத்துவ மயானம் ஊக்கத் தொகை வழங்குதல்
சாதி வேறுபாடுகளற்ற பயன்பாட்டிலுள்ள மயானங்கள் உள்ள சிற்றூர்களை தேர்ந்தெடுத்து ஒரு சிற்றூருக்கு ரூ.10.00இலட்சம் வீதம் மூன்று சிற்றூர்களுக்கு ரூ.30.00இலட்சம் நிதியுதவி அளிக்கப்படுகிறது. |
சாதி வேறுபாடுகளற்ற மயானங்கள் பயன்பாட்டில் உள்ள சிற்றூராக இருக்க வேண்டும். | மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம். |
9 | பிரதம மந்திரி கிராம முன்னோடி திட்டம் (PMAGY)
40 சதவீதத்திற்கு மேல் ஆதிதிராவிடர் மக்கள் வசிக்கும் தேர்ந்தெடுக்கப்பட்ட கிராமங்களின் ஒருங்கிணைந்த வளர்ச்சியை உறுதி செய்வதே இந்த திட்டத்தின் முக்கிய நோக்கமாகும். |
ஆதிதிராவிடர் 40 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் வசிக்கும் கிராமங்களில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது. | (அ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.
(ஆ) திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம். |
10 | ஆதிதிராவிடர் துணைத் திட்டத்திற்கான ஒன்றிய அரசின் சிறப்பு நிதியுதவித் திட்டம் (SCA to SCSP)
மாநில அரசின் ஆதிதிராவிடர் துணைத்திட்டத்திற்கு கூடுதலாக வலுசேர்க்கும் வகையில் ஒன்றிய அரசு கூடுதலாக நிதியுதவி வழங்குகிறது. இந்த நிதியில் 80 விழுக்காடு, ஆதிதிராவிடர் மக்களின் பொருளாதார மேம்பாட்டுத் திட்டங்களுக்காகவும், 10 விழுக்காடு வேலையில்லா ஆதிதிராவிடர் இளைஞர்களுக்கு தாட்கோ மூலம் திறன் மேம்பாட்டுப் பயிற்சியளிக்க தமிழ்நாடு வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் (தாட்கோ) மேலாண்மை இயக்குநருக்கு ஆதிதிராவிடர் நலத்துறையின் மூலம் நிதிஒதுக்கீடு வழங்கப்படுகிறது. |
ஆதிதிராவிடர் 50 விழுக்காடு மற்றும் அதற்கு மேல் வசிக்கும் குடியிருப்புகளில் இத்திட்டம் மேற்கொள்ளப்படுகிறது | (அ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.
(ஆ) மாவட்ட மேலாளர், தாட்கோ, வருவாய் கோட்டாட்சியர் அலுவலகம், பெரம்பலூர் மாவட்டம். |
11 | சிறந்த எழுத்தானர்களுக்கான நிதியுதவி வழங்குதல்
அரசாணை (நிலை) எண்.49 , ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் (சிஉதி) துறை, நாள்.23.06.2022-ன்படி, சிறந்த எழுத்தாளர்களுக்கு ரூ.1,00,000- நிதியுதவி வழங்குதல் ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறித்துவ ஆதிதிராவிடர் ஆகியோரில் சிறந்த எழுத்தாற்றல் மிக்க 10 படைப்பாளிகளுக்கு நிதியுதவி வழங்குதல். ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல், மே மாதங்களில் செய்தித் தாள்களில் விளம்பரம் வெளியிடப்படும். சிறந்த எழுத்தாளர்களாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஒவ்வொரு எழுத்தாளருக்கும் ரூ.10,00,000- நிதியுதவி அளிக்கப்படும். |
சிறந்த படைப்பாக இருத்தல் வேண்டும் | (அ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.
(ஆ) இயக்குநர், ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-05. |
12 | இந்திய அரசியமைப்புச் சட்டத்தின் பிரிவுக்கூறு 275(1)
உட்கட்டமைப்பு பணிகள், பழங்குடியினர்களுக்கான வாழ்வாதார நலத்திட்டங்கள் |
சிறந்த படைப்பாக இருத்தல் வேண்டும். | (அ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர்,மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.
(ஆ) இயக்குநர்,ஆதிதிராவிடர் நலத்துறை, சேப்பாக்கம், சென்னை-05. |
13 | அழிவின் விளிம்பிலுள்ள பழங்குடியினர் மேம்பாடு (PVTG)
|
தோடா, கோட்டா, குரும்பாஸ், இருளர், பனியன் மற்றும் காட்டு நாயகன் ஆகிய பழங்குடியினராக இருக்க வேண்டும் வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும். |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் மாவட்ட ஆட்சியரின் பரிந்துரையுடன் முன் மொழிவுகள் வரப்பெற வேண்டும்.
|
14 | வந்தன் விகாஸ் கேந்திரம்
பழங்குடியினர் தலைமையின்கீழ் வந்தன் விகாஸ் கேந்திரம் 10 சுய உதவி குழுக்களை கொண்டு அமைக்கப்படுகிறது.
சிறுவன உற்பத்தி சேகரித்தல், மதிப்பு கூட்டுதல் போன்றவற்றில் சுய உதவிக் குழு ஈடுபடுகிறது.
|
பழங்குடியினர் பகுதிகளில் பழங்குடியின மக்களுக்காக நடத்தப்படும் தொண்டு நிறுவனங்கள்.
சுய உதவிக்குழு சிறுவன உற்பத்தியாளர்கள். |
(அ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.
(ஆ)இணைப்பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்கள். |
15 | சிறுவன விளைபொருட்களுக்கான குறைந்த பட்ச ஆதார விலை (MSP for MFP)
பழங்குடியினர் வனத்தில் சேகரிக்கும் சிறுவன உற்பத்தி பொருட்களுக்கும் மற்றும் விவசாய பொருட்களுக்கும் அரசு நிர்ணயித்த குறைந்தபட்ச விலையை பயனாளிகளுக்கு வழங்கி விலை பொருட்களை கொள்முதல் மேற்கொள்ளுதல். |
பழங்குடியின சிறுவன உற்பத்தியாளர்கள் | (அ) மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம்.
(ஆ)இணைப்பதிவாளர், கூட்டுறவுச் சங்கங்கள். |
16 | விரிவான பழங்குடியினர் மேம்பாட்டுத்திட்டம்
இத்திட்டத்தின் மூலம் பழங்குடியினர் நல மேம்பாட்டுப் பணிகள், சாலைப்பணிகள், அரசு பழங்குடியினர் உண்டி உறைவிடப் பள்ளிகளின் உட்கட்டமைப்பை மேம்படுத்துதல், குடிநீர் வசதி , பொருளாதாரம் மற்றும் திறன் மேம்பாட்டுத் திட்டங்கள் மேற்கொள்ளப்படுகின்றன. |
பழங்குடியினராக இருக்க வேண்டும்.
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும். |
மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர் மாவட்டம். |
- விருதுகள் மற்றும் சாதனைகள்
- 2022-2023 ஆம் நிதியாண்டில் சிறந்த நல்லிணக்க கிராமமாக ஆலத்தூர் ஒன்றியம்.கொளக்காநத்தம் கிராமம் தேர்வு செய்யப்பட்டு அக்கிராமத்திற்கு அடிப்படை வசதிகள் மேற்கொள்ள ரூ.10.00.000- வழங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 ஆம் நிதியாண்டில் அனைத்து சமுதாய மக்களும் மயானத்தினை பயன்படுத்திட வேண்டி சமத்துவ மயானம் அமைத்திட பெரம்பலுார் ஒன்றியம்.எளம்பலுார் கிராமத்திற்கு ரூ.10.00.000- வழங்கப்பட்டுள்ளது. 2022-2023 ஆம் நிதியாண்டில் மயானப்பாதை அமைத்திட பெரம்பலுார் ஒன்றியம்.விளாமுத்துார் கிராமத்திற்கு ரூ.7.64.035- வழங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் இன மக்களுக்கு 104 இலவச தையல் இயந்திரம் பயனாளிகளுக்க ரூ,6.96.020- செலவில் வழங்கப்பட்டுள்ளது, கிராமத்திற்கு ரூ.7.64.035- வழங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 ஆம் நிதியாண்டில் ஜந்தாம் வகுப்பில் முதன்மை மதிப்பெண்கள் பெற்ற ஆதிதிராவிடர். பழங்குடியினர் மற்றும் மதம் மாறிய கிறித்துவ ஆதிதிராவிடர் மாணவ/மாணவியர்களின் கல்வித் தரத்தை உயர்த்த சிறந்த நற்பெயர் பெற்ற உண்டு உறைவிடப்பள்ளிகளில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரை சேர்ந்து கல்வி பயில கட்டணத் தொகையாக 19 மாணவ/மாணவியர்களுக்கு ரூ.5.73.583- வழங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு வன்கொடுமை தீருதவித் தொகையாக 92 பயனாளிகளுக்கு ரூ.65.13.999- வழங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவியர்களின் இடைநிற்றலின்றி தொடர்ந்து கல்வி பயின்றிட பெண்கல்வி ஊக்குவிப்புத் தொகையாக 3 முதல் 8 ஆம் வகுப்பு வரை பயிலும் 6038 மாணவியர்களுக்கு ஊக்குவிப்பு தொகையாக ரூ.56.11.000- வழங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் நலப்பள்ளிகள். விடுதிகள் மற்றும் ஆதிதிராவிடர் காலனிகளுக்கு அடிப்படை வசதிகள்மேற்கொள்ள ரூ.21.73.720-க்கு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது, 2022-2023 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கிப் பயிலும் 1773 மாணவ/மாணவியர்களுக்கு பாய்களும்.2131 மாணவ/மாணவியர்களுக்கு போர்வை போன்ற பல்வகை பொருட்கள் வழங்கப்பட்டுள்ளது.
- 2022-2023 ஆம் நிதியாண்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவ/மாணவியர்களுக்கு வழங்கப்பட்ட மிதிவண்டிகள் விவரம்
மாணவர் ஒரு சைக்கிளின் விலை ரூ.5175 | 1164 | 60,23,700 |
மாணவியர் ஒரு சைக்கிளின் விலை ரூ.4992 | 1147 | 57,25,824 |