Close

கால்நடை பராமரிப்புத்துறை

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

கால்நடை பராமரிப்புத்துறை, பெரம்பலூர். பின்கோடு – 621 212

  • துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

மண்டல இணை இயக்குநர், கால்நடை பராமரிப்புத்துறை, பெரம்பலூர். 9445001205, rjdahpblr@gmail.com

  • நிர்வாகஅமைப்பு

Animal Husbandry Adminstrative structures tamil.

  • நோக்கங்கள்
    • கால்நடைகளுக்கு அயல்நாட்டு இன விந்துவையும், எருமைகளுக்கு முர்ரா விந்துவையும் பயன்படுத்தி செயற்கைமுறை கருவூட்டல் மூலம் கால்நடைகள் மற்றும் எருமைகளின் எண்ணிக்கையினை உயர்த்துவது.
    • கால்நடைகளின் உள்நாட்டு இனங்களை அவற்றின் பூர்வீகப்பகுதிகளில் பரப்புதல்
    • கால்நடைகள் மற்றும் கோழிகளின் உற்பத்தி திறனை பெருக்கி பால் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிக்க செய்தல்.
    • கால்நடைகள் மற்றும் கோழிகளுக்கு தேவையான மற்றும் சரியான நேரத்தில் நவீன கால்நடை உதவி மற்றும் சுகாதார பாதுகாப்பு வழங்கப்படும்.
    • கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்துவதன் மூலம் நோய்கள் வராமல் தடுத்து கால்நடைகளின் ஆரோக்கியத்தை உறுதி செய்தல்.
    • கிராமப்பறு ஏழைகளின் பொருளாதார நிலையை மேம்படுத்த மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துதல்.
    • விலங்குகளிலிருந்து மனிதர்களுக்கு பரவும் நோய்களை கண்டறிந்து கட்டுப்டுத்துவதன் மூலம் மனித ஆரோக்கித்தை பாதுகாத்தல்
    • நவீன கால்நடை வளர்ப்பு முறைகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துதல்.
    • விவசாயிகளுக்கு கால்நடை வளர்ப்பு மற்றும் அடிப்படை நடைமுறைகள் குறித்து பயிற்சி நடத்துதல்.
  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்

மாநில தீவனஅபிவிருத்தி திட்டம்

மாநில தீவன அபிவிருத்தி திட்டத்தின் மூலம் தென்னை மற்றும் பழத்தோட்டங்களில் ஊடுபயிராக பசுந்தீவனம் வளர்த்தல் இத்திட்டத்தில் பயன்பெற தென்னை மற்றும் பழத்தோட்டம் உள்ள விவசாயியாக இருக்கவேண்டும். 0.50 ஏக்கர் முதல் அதிகபட்சம் 1 ஹெக்டேர் வரை தீவன பயிரை ஊடுபயிராக பராமரிக்கவேண்டும். குடும்ப அட்டை ஆதார் எண் புகைப்படம் வங்கி கணக்கு புத்தக நகல் சமர்ப்பிக்கவேண்டும்

மின்சாரத்தால் இயங்கும் புல்நொறுக்கும் கருவி

மின்சாரத்தால் இயங்கும் புல் நொறுக்கும் கருவி பெறுவதற்கு 0.25 ஏக்கர் நிலத்தில் தீவன புல் பயிரிட்டு இருக்கவேண்டும். குறைந்த பட்சம் 2 பசு அல்லது எருமை இருக்கவேண்டும். குடும்ப அட்டை ஆதார் எண் புகைப்படம் வங்கி கணக்கு புத்தக நகல் சமர்ப்பிக்கவேண்டும்

கால்நடை காப்பீடு திட்டம்

கால்நடை காப்பீட்டு திட்டத்தின் அதிகபட்சமாக ரூ.35000/- வரை மானியத்துடன் காப்பீடு செய்துகொள்ளலாம். வறுமைகோட்டிற்கு கீழ் உள்ளவர்கள் தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு 70% மானியத்தில் கால்நடைகளுக்கு காப்பீடு செய்யப்படும் இதர வகுப்பினருக்கு 50% மானியத்தில் காப்பீடு செய்யப்படும் அதிகபட்சமாக ஒரு குடும்பத்திற்கு 5 பசு மற்றும் எருமை மாடுகளுக்கு காப்பீடு செய்து கொள்ளலாம்.

சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம்

2023-24 ஆம் ஆண்டு தலா ஒரு ஒன்றியத்திற்கு 20 எண்ணிக்கையில் 4 ஒன்றியத்திற்கு 80 சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணர்வு முகாம் நடத்தப்படவுள்ளது. இம்முகாமில் கால்நடைகளுக்கு சிகிச்சை, செயற்கைமுறை கருவூட்டல், குடற்புழு நீக்கம் போன்ற சிகிச்சை பணிகள், வருடத்திற்கு 1,50,000 கால்நடை கள் பயனடையவுள்ளது. இம்முகாமிற்கு வருடத்திற்கு தலா ரூ.8,00,000/- செலவினம் மேற்கொள்ளப்படவுள்ளது.

தேசிய நோய் கட்டுப்பாடு திட்டம் – கால் மற்றும் வாய் நோய் தடுப்பூசிப்பணி

தேசிய நோய் கட்டுப்பாடு திட்டம், கால் மற்றும் வாய் நோய் கட்டுப்பாடு திட்டம் 2023-2024 ஆம் ஆண்டில் தேசிய விலங்கு நோய்க் கட்டுப்பாட்டுத்திட்டத்தின் கீழ் 1.24 இலட்சம் கால்நடைகளுக்கு கால் மற்றும் வாய் நோய்களைத் தடுக்க இலவச தடுப்பூசி அளிக்கப்படும்.

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டம் – கன்று வீச்சு நோய் தடுப்பூசி

தேசிய கால்நடை நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ் 4 மாதம் முதல் 8 மாதம் வரை வயதுடைய கன்றுகளுக்கு கன்று வீச்சு (Brucellosis) தடுப்பூசி இலவசமாக செலுத்தப்படுகிறது.

கால்நடைகளின் நலன் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டம் – ஆட்டுக்கொல்லி நோய் ஒழிப்பு தடுப்பூசி

கால்நடைகளின் நலன் மற்றும் நோய் கட்டுப்பாட்டு திட்டத்தின்கீழ் 4 மாதத்திற்கு மேல் வயதுடைய வெள்ளாடுகள் மற்றும் செம்மறி ஆடுகளுக்கு இலவசமாக ஆட்டுக்கொல்லி நோய் தடுப்பூசி செலுத்தப்படுகிறது.