Close

தோட்டக்கலை

பெரம்பலூா் மாவட்டத்தில் 10,730 எக்டர் பரப்பில் தோட்டக்கலை பயிர்களான வெங்காயம், மரவள்ளி, மஞ்சள், வாழை, எலுமிச்சை மற்றும் இதர பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டு வருகின்றன. பெரம்பலூா் மாவட்டம் வெங்காய சாகுபடிக்கு குறிப்பாக வெங்காயத்தின் உற்பத்தி மற்றும் தரத்திற்கு பெயா்போனதாகும். காய்கறி பயிர்களில் சிறிய வெங்காயம் சுமார் 7000 எக்டா் பரப்பளவில் பயிரிடப்படுகிறது.

துறையின் பெயா் மற்றும் முகவரி :

தோட்டக்கலை துணை இயக்குநா், மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகம் (பின்புறம்), ஒருங்கிணைந்த வேளாண்மை அலுவலகம், பெரம்பலூா் – 621 212.

துறைத்தலைவர் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :

தொலைபேசி எண். 04328 – 224522, மின்னஞ்சல் முகவரி : ddhpblr@yahoo.com

நிர்வாக அமைப்பு :

admin-setup-tamil

நோக்கம்

தோட்டக்கலை பயிர்களின் மகசூலைப் பெருக்கவும், அதன் மூலம் விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் நோக்கத்தோடு தமிழக அரசு தோட்டக்கலை மற்றும் மலைப்பயிர்கள் துறை மூலமாக பல்வேறு மானியத் திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

தோட்டக்கலைதுறை மூலம் செயல்படுத்தப்படும் திட்டங்கள்

பிரதம மந்திரி விவசாய பாசன மேம்பாட்டு திட்டம் (PMKSY):

இன்றைய காலக்கட்டத்தில் பயிர் சாகுபடிக்கு தேவையான அளவு பாசன நீா் கிடைப்பதில்லை. அதனால் கிடைக்கும் சிறிதளவு நீரைக் கொண்டு அதனை சிக்கனமாக பயன்படுத்தி அதிக பரப்பில் பயிர் சாகுபடி செய்திட அறிமுகப்படுத்தப்பட்ட திட்டமே நுண்ணீா் பாசனத் திட்டமாகும். சொட்டுநீா் மற்றும் தெளிப்பு நீா் என நுண்ணீா் பாசன முறைகள் பலவற்றிற்கும் அரசு, சிறு குறு விவசாயிகளுக்கு 100 சதவீத மான்யமும் இதர விவசாயிகளுக்கு 75 சதவீத மான்யமும் வழங்குகிறது. கூடுதலாக தேவைப்படும் பொருட்களுக்கு சொட்டு நீா் பாசன அமைப்பு பொருத்த தொகையை விவசாயிகள் செலுத்தி பயன்பெற வேண்டும். மேலும் இத்திட்டத்தில் குறிப்பாக ஆதிதிராவிட மற்றும் பழங்குடி விவசாயிகளுக்கு அதிக முக்கியத்துவம் அளித்து செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி இயக்கத் திட்டம் (MIDH) – தேசிய தோட்டக்கலை இயக்கம் (NHM)

வீரியரக காய்கறி சாகுபடி (கத்தரி, மிளகாய், தக்காளி) – ஒரு எக்டருக்கு ரூ.20,000/- மான்யத்தில் வீரியரக குழித்தட்டு நாற்றுகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளிருந்தும், நேரடியாக விதைப்பு காய்கறிகளான வெண்டை, புடல், பீர்க்கு ஆகிய விதைகளுக்கு தமிழ்நாடு வேளாண்மை பல்கலை கழகம் மற்றும் அரசு சார்ந்த நிறுவனத்திலிருந்தும் பெற்று பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

உதிரிமலா்கள் (சாமந்தி / மல்லிகை) – ஒரு எக்டருக்கு ரூ.16,000/- மானியத்தில் குழித்தட்டு நாற்றுகள் மற்றும் செடிகள் அரசு தோட்டக்கலை பண்ணைகளிலிருந்து பெறப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படும்.

குமிழ்கள் மலா் (சம்மங்கி) – ஒரு எக்டருக்கு ரூ.60,000/- பின்னேற்பு மான்யமாக வழங்கப்படும்.

பாதுகாக்கப்பட்ட சாகுபடி முறை:

பசுமைக்குடில்
பசுமைக்குடில் அமைப்பதற்கு ஒரு சதுர மீட்டா் 50 சதவீதம் மான்யத்தில் ரூ.468/- வீதம் ஒரு பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 4000 சதுர மீட்டருக்கு பின்னேற்பு மான்யம் வழங்கப்படுகிறது.
NHM PGH
நிழல்வலைக்குடில்
ஒரு சதுர மீட்டருக்கு 50 சதவீதம் மான்யத்தில் ரூ.355/- வீதம் ஒரு பயனாளிகளுக்கு அதிகபட்சமாக 2000 சதுரமீட்டருக்கு பின்னேற்பு மான்யம் வழங்கப்படும்.

நிலப்போர்வை
ஒரு எக்டருக்கு 50 சதவீதம ரூ.16,000/- பின்னேற்பு மான்யமாக வழங்கப்படும்.

நீா் வளங்களை உருவாக்குதல்

தனி நபா்களுக்கான நீா் சேகரிப்பு முறை ( Water Harvesting System for Individual) திட்ட இனத்தில் நீா் சேகரிப்பினை ஊக்குவிப்பதற்காக பண்ணைக்குட்டைகள், கிணறுகள் அமைப்பதற்கு அரசு மான்யமாக ஒரு எண்ணிற்கு ரூ.75,000/- மான்யத்தில் வழங்கப்படும்.

நுண்ணூட்ட சத்து இடுதலை ஊக்குவித்தல்

தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு, வயல்களில் நுண்ணூட்டசத்து இடுதலின் அவசியத்கை ஊக்குவிக்கும் வகையில் ஒரு எக்டருக்கு ரூ.1200/- மதிப்பில் நுண்ணூட்ட சத்துக்கள் கொண்ட உயிர் உரங்கள் வழங்கப்பட்டுள்ளது.

மகரந்த சோ்க்கையை அதிகரிக்க தேனீ வளா்ப்பு திட்டம்

தேனி வளா்ப்பதன் மூலம் தோட்டக்கலை பயிர்களில் மகசூல் அதிகரிப்பதால், விவசாயிகளின் மகசூலினை பெருக்கிட தோட்டக்கலை துறை மூலம் தேன் குடும்பம் மற்றும் தேன் கூடுகள் ஒரு எண்ணிற்கு ரூ.1600/- மான்யமாக வழங்கப்படுகிறது.
தேன் பிழியும் இயந்திரம் ஒரு எண்ணிற்கு ரூ.8000/- மான்யமாக வழங்கப்படுகிறது.

இயந்திரமயமாக்குதல்

20 குதிரைதிறந் (20-HP) வரையுள்ள டிராக்டருக்கு அதிகபட்சமாக ரூ.75,000/- மான்யத்தில் வழங்கப்படுகிறது. 8 குதிரைத்திறனுக்கு (8-HP) மேல் வரையுள்ள பவா்டில்லருக்கு ரூ.60,000/- மான்யத்தில் வழங்கப்படுகிறது.
ஒருங்கிணைந்த அறுவடைக்கு பின்சார் மேலாண்மை
விவசாயிகளின் வயலில் விளைபொருட்களை அறுவடை செய்த பின்பு சேமிப்பு மற்றும் தரம் பிரிப்பதற்கு சிப்பம் கட்டும் அறை அமைக்க 50 சதவீதம் மான்யத்தில் ரூ.2.00 இலட்சம் பின்மான்யமாக வழங்கப்படுகிறது.
NHM

விவசாயிகளின் பயிற்சி

பெரம்பலூா் மாவட்டத்தில் தோட்டக்கலை பயிர் சாகுபடி செய்யும் விவசாயிகளை ஊக்கப்படுத்துவதற்காக, விவசாயிகளுக்கு உள் மாநிலம், வெளி மாநிலம் மற்றும் விவசாயிகள் கண்டுணா்வு சுற்றுலா ஆகிய பயிற்சிகள் வழங்கப்படும்.

தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம் (NADP).

வெங்காய பயிர் பரப்பு அதிகரித்தல் (வெங்காயம் சாகுபடிக்கு ஒரு எக்டருக்கு ரூ.20,000/- மான்யம் வழங்கப்படும்).
பந்தல் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஒரு எக்டருக்கு ரூ.2,00,000/- பின் மான்யம் வழங்கப்படும்.
இயற்கை முறையில் காய்கறி பயிர்கள் சாகுபடி செய்யும் விவசாயிகளுக்கு ஊக்கத் தொகையாக ரூ.3750/- வழங்கப்படுகிறது.

ஒருங்கிணைந்த தோட்டக்கலை அபிவிருத்தி திட்டம் (IHDS)

இத்திட்டத்தின்கீழ் பரப்பு அதிகரித்தல் (எலுமிச்சை மற்றும் பப்பாளி), வறட்சி தாங்கும் பழ பயிர்களான சீத்தா, நாவல், மற்றும் பாரம்பரிய காய்கறி ரகங்கள் ஆகிய இனத்தில் மான்ய உதவியுடன் திட்டம் செயல்படுத்தப்படுகிறது
விவசாயம் சாராத நபா்களுக்கும் வீட்டுக் காய்கறி தோட்டம் அமைப்பதற்காக ஒரு சிறுதளை பாக்கெட் ரூ.10/- மற்றும் மாடித் தோட்டம் அமைப்பதற்காக ஒரு சிறுதளை பாக்கெட் ரூ.340/- மான்யத்தில் வழங்கப்படுகிறது.

பிரதம மந்திரி பயிர் காப்பீட்டுத் திட்டம் (PMFBY)

விவசாயிகள் தாங்கள் சாகுபடி செய்த பயிர்களில் மகசூல் இழப்பினை ஈடுகட்டும் விதமாக பிரதம மநதிரியின் பயிர் காப்பீட்டுத் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இத்திட்டத்தில் ராபீ மற்றும் காரீப் பருவத்தில் தோட்டக்கலை பயிர்களான சின்ன வெங்காயம், வாழை, மஞ்சள், தக்காளி, மரவள்ளி ஆகிய பயிர்களுக்கு காப்பீட்டுத் தொகையில் 5 சதவீத தொகையை பிரீமியமாக செலுத்தி விவசாயிகள் பயிர் காப்பீடு செய்து பயன்பெறலாம். இத்திட்டம் குறிப்பிட்ட பகுதியில் (Notified Villages) மட்டுமே செயல்படுத்தப்படும்.

பயிர் கடன் பெறும் மற்றும் பெறாத விவசாயிகள் தங்களது விருப்பத்தின் பேரில் சேரலாம். புயல் / ஆலங்கட்டி மழை, மண் சரிவு, வெள்ளம் போன்ற இயற்கை இடா்பாடுகளில் ஏற்படும் இழப்பிற்கு மானியம் வழங்கப்படும்.
Horticulutre activities

அனைத்து திட்டங்களிலும் பயனடைய தோ்வு செய்யும் தகுதிகள்:

சொந்த நிலம் மற்றும் நீா் ஆதாரம் உள்ள அனைத்து உழவா்களும் இத்திட்டத்தில் பயன் பெறலாம்.
குத்தகை நிலமாக இருப்பின் 10 ஆண்டுகளுக்கு பதிவு செய்யப்பட்ட குத்தகை பத்திரம் இருத்தல் வேண்டும்.
நில ஆவணங்கள்: சிட்டா, அடங்கல், புகைப்படம், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு புத்தக நகல், ஆதார் அட்டை நகல் மற்றும் நிலவரைபடம்.
சிறுமற்றும் குறு விவசாயிகள் சான்று (வட்டாட்சியா் கையொப்பம்)
மேலும் தகவல் மற்றும் தொழில்நுட்பங்களை அறிந்திட அலுவலா்களை தொடா்பு கொள்ளவும்.