நீர்வளத்துறை ( நிலநீர் கோட்டம்)
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
செயற்பொறியாளர், நீ.வ.து., நிலநீர் கோட்டம், திருச்சி-20, 0431-2311755
- துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
முதன்மை தலைமைப்பொறியாளர் மற்றும் தலைமைப்பொறியாளர், (பொது) நீவது., சேப்பாக்கம், சென்னை-05 , 044-28525351
- நிர்வாகஅமைப்பு

- நோக்கங்கள்
- நிலத்தடி நீர் ஆய்வுகள் மற்றும் அறிவியல் பூர்வமொன ஆய்வுகள் மூலம் நிலத்தடி நீர் வளத்தினை மதிப்பிடுதல்.
- நீரியல், நீர் வானிலையியல் மற்றும் நிலத்தடி நீரின் தரத்தை கண்காணித்தல்.
- பதிவுக்கருவிகள் வாயிலாக நிலத்தடி நீர்மட்டம், நீரின் தரம் மற்றும் மேற்பரப்பு நீர் தொடர்பான தரவுகளைச் சேகரித்தல், தொகுத்தல் மற்றும் பகுப்பாய்வு செய்தல்.
- தொடர்புடைய பங்குதாரர்களுக்கு திறந்த வெளிக் கிணறுகள் / ஆழ்துளைக் கிணறுகள் அமைப்பதற்குத் தகுந்த இடத்தைத் தெரிவு செய்ய ஆலோசனை வழங்குதல்.
- பொதுமக்கள், கல்வி நிறுவனங்கள் மற்றும் மத்திய, மாநில அரசு அமைப்புகள் போன்றவற்றுக்கு, குடிநீர் மற்றும் கட்டுமானப் பணிகளுக்கான நீரின் தரம் குறித்து ஆலோசனை வழங்குதல்.
- பாதுகாப்பான மற்றும் மித அபாயகரமான குறுவட்டங்களில் நீர் சார்ந்த மற்றும் நீர் சாராத தொழிற்சாலைகளுக்கு நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதி மற்றும் பிற உள்கட்டமைப்புத் தேவைகளுக்காக நிலத்தடி நீர் எடுப்பதற்கான அனுமதி (தடையின்மைச் சான்றிதழ்) வழங்குதல்.