நெகிலி இல்லா பெரம்பலுார் – ஓர் இலக்கு நோக்கிய பயணம்

நெகிலி நம் வாழ்வில் அன்றாடும் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாகும். நாம் பயன்படுத்தும், சாதாரண பேனாவிலிருந்து துவங்கி நாம் வாங்கும் காய்கறிகள், பழங்கள் ஆகியனவற்றை எடுத்துச்செல்ல பயன்படுத்தும் நெகிலிப்பைகள் வரை நாம் தொடர்ந்து பயன்படுத்தி வந்து்ள்ளோம். இவை நம் வசதிக்கு ஏற்றதாக இருந்தாலும், நம் சுற்றுச்சுழலுக்கு மிகப்பெரிய பேராபத்தாகி உள்ளது.
நெகிலி உற்பத்தியின் போது உண்டாகும் நச்சு இராசாயினத்தால் உலக வெப்பமயமாதலுடன் சுற்றுச்சுழலும் மாசடைகிறது.
நெகலியினால் உண்டாகும் பாதிப்புகள்:
மண் பாதிப்படைகிறது:
நெகலியினை எரியுட்டுவதால் அதன் நச்சு இராசாயினம் மண்ணில் கலப்பதுடன், ஒழுகி நிலத்தடி நீருடனும் கலந்து விடுகிறது. இந்த நெகிலி நச்சு நீரை அருந்தும் மனிதனுக்கும், அதை பயன்படுத்தி நடைபெறும் விவசாய பணிக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. இதனால் விவசாயத்திற்கும், மனிதனும் இவை கேடு விளைகிறது.
கடல் மாசடைகிறது:
நெகிலியால் ஆன பொருட்கள் உதாரணமாக நெகலிப்பைகள், நெகலி டப்பாக்கள், பொருட்கள் கடலில் கலப்பதால் அவை கடலின் மேற்பரப்பில் மிதக்கின்றன. இதனால் இவை சூரிய ஒளி கடலினுள் செல்வதை தடுக்கின்றன. அதனால் கடலின் கீழ்மட்டத்தில் உள்ள தாவரங்கள், மீன்கள் உள்ளிட்ட உயிரிகள் வளர்வதற்கு போதிய உணவிற்றி இறந்துவிடுகின்றன. கடலில் கலக்கும் இத்தகைய நெகலிகள் கடல் நீரால் விரைந்து மக்க செய்யப்பட்டாலும், நெகலி நச்சு இரசாயினம் கடல் நீரில் கலந்து விடுகிறது. இவை உலகிற்கு கேடுவிளைவிப்பதுடன், உலக வெப்பநிலையை உயர்ந்திட காரணமாகிறது.
காற்று மாசடைகிறது:
கிராமத்திலும், நகரங்களிலும் வசிக்கும் பொதுமக்கள் பொதுவாக தாங்கள் பயன்படுத்தும் நெகலிப்பைகளை எரியுட்டி அழிக்கின்றனர். இதனால் உண்டாகும் நெகலியின் நச்சு இராசாயினம் காற்றில் கலந்து காற்றை மாசுபடுத்துகிறது. இந்த நச்சு இராசாயினம் கலந்த காற்றை நாம் சுவாசிக்கும் போது அவை நமது நுறையீரலை பாதித்து அதன் மூலமாக நம் உடல் நிலை மிக மோசமாக பாதிப்படைய செய்கிறது.
மிருகங்களை கொல்கிறது:
நெகலிப்பைகளை தங்களது உணவுடன் சேர்த்து உண்பதினால் டால்பின்கள், ஆமைகள், சுறாக்கள், பென்குயின்கள் போன்ற மிருகங்கள் ஆண்டிற்கு ஒருலட்சத்திற்கும் மேல் இறந்துபோகின்றன. அவ்வாறு இறந்துபோன மிருகங்களின் உடல்களில் கலந்து மக்கிப்போகாத நெகிலிகளால் சுற்றுச்சூழல் மிகுந்து பாதிப்படைகிறது.
சாக்கடை நீர் வெளியேற காரணமாகிறது:
நெகலிப்பொருட்கள், நெகலிப்பைகள் சாக்கடைகளில் கலந்து சாக்கடை பைப்புகளை அடைத்துவிடுகின்றன. இதனால், சாக்கடை நீர் தெருக்களின் ஓரங்களில் தங்கிவிடுகிறது. இந்த சாக்கடை நீரில் உற்பத்தியாகும் கொசுக்களால் மலேரியா, டெங்கு போன்ற கொடும் நோய்கள் உற்பத்தியாக காரணமாகிறது.
நெகலியால் உண்டாகும் மாசை குறைத்திட வழிகள்:-
சணலால் ஆன கைப்பைகளை உபயோகிப்போம்
நமது அன்றாட நெகலி பயன்பாட்டில் நெகலியிலால் ஆன பைகள் முக்கிய இடம் பெறுகின்றன. நாம் அன்றாட வாக்கும் காய்கறிளுக்கு கூட நெகலிப்பைகளையே பெரும்பாலும் பயன்படுத்தி வருகின்றோம். இவை சுற்றுச்சுழலுக்கு மிக எதிரானது. இவை விரைவாக மக்கிப்போவதில்லை. இவற்றின் அதிக பயன்பாட்டால் மனித இனத்திற்கும், நீர்நிலைகளுக்கும் மற்றும் சுற்றுச்சுழலுக்கும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்துகிறது. எனவே நாம் நமது அன்றான பயன்பாட்டில் நெகலிப்பைகளை தவிர்ப்போம், சணல்பைகளை பயன்படுத்துவோம்.
மறுசுழற்சி செய்யத்தக்க நெகிலி குடுவைகளை பயன்படுத்துவோம்
மறுசுழற்சி செய்திடத்தக்க நெகிலிக்குடுவைகள் தற்போது பயன்பாட்டிற்கு வந்துள்ளன. எனவே ஒருமுறை பயன்படுத்தும் நெகிலி குடுவைகளுக்கு பதிலாக மறுசுழற்சி செய்யத்தக்க நெகலிக்குடுவைகளை பயன்படுத்துவோம், நெகலி நச்சினை தவிர்ப்போம்.
குறுந்தகடுகளின் பயன்பாட்டை குறைப்போம்
குறுந்தகடுகள் பாலி கார்போனைட் நெகிலிகளால் செய்யப்படுகின்றன. இவற்றால் சுற்றுச்சுழல் பாதி்க்கப்படுகிறது என்பதால் இனி வருங்காலங்களில் பென்டிரைவ், கையடக்க ஹார்ட்டிஸ்க்கள் ஆகியவற்றை பயன்படுத்துவோம். இவற்றில் குறுந்தகட்டைவிட அதிக அளவிளான சேமிப்பு வசதியுள்ளது முக்கியமாக இவை மறுசுழற்சி முறையில் பயன்படுத்த முடியும்.
நெகிலிகளை பொது இடங்களில் எறிவதை தவிர்ப்போம்
நெகிழி மாசுபாடு தொடர்பான அரசாணைகள்