பெரம்பலூர் கூட்டுறவு வார விழா-18.11.2025
வெளியிடப்பட்ட தேதி : 20/11/2025
பெரம்பலூர் மாவட்ட கூட்டுறவு துறையின் சார்பில் நடத்தப்பட்ட 72 வது அகில இந்திய கூட்டுறவு வார விழாவில் மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 1,008 பயனாளிகளுக்கு டாம்கோ கடன், பயிர் கடன், விவசாய நகைக் கடன், மகளிர் சுய உதவிக் குழுக் கடன் உள்ளிட்ட ரூ.9.40 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளையும், சிறந்த கூட்டுறவு சங்கங்களுக்கான விருதுகளையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் இன்று (18.11.2025) கர்ணம் சுப்ரமணியம் சகுந்தலா திருமண மண்டபத்தில் வழங்கினார்.(PDF 38KB)