மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை திறந்து வைத்தார்கள் – 05.05.2025
வெளியிடப்பட்ட தேதி : 06/05/2025

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் இயங்கிவரும் 38 மாவட்டங்களிலும் “SDAT –ஸ்டார் அகாடமி மாவட்ட விளையாட்டு பயிற்சி மையத்தை சென்னை ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கிலிருந்து திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் மாவட்ட விளையாட்டு மைதானத்தில் ஸ்டார் அகாடமி குத்துச்சண்டை விளையாட்டு பயிற்சி மையத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் குத்து விளக்கு ஏற்றி, ஸ்டார் அகாடமி விளையாட்டு வீரர் மற்றும் வீராங்கனைகளுக்கு விளையாட்டு சீருடைகள் மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினார்.(PDF 38KB)