மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்
வெளியிடப்பட்ட தேதி : 09/12/2025
மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் முனைவோர்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் மக்களோடு நேரலையில் பார்த்த பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த 1,754 பயனாளிகளுக்கு ரூ. 8.99 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.(PDF 38KB)