Close

மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 2025-2026ஆம் ஆண்டிற்கான இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்வினை தொடங்கி வைத்தார்

வெளியிடப்பட்ட தேதி : 24/11/2025
Hon’ble Minister for Transport and Electricity, Thiru S. S. Sivasankar, inaugurated the distribution of free bicycles for the year 2025–2026.
பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை, பள்ளிக் கல்வித்துறை இணைந்து நடத்திய நிகழ்ச்சியில், மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டத்தில் 2025-2026 ஆம் நிதிஆண்டிற்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் பதினோராம் வகுப்பு மாணவ, மாணவிகளுக்கு அரசின் இலவச மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் அரசு மேல்நிலைப் பள்ளியில் பயிலும் 270 மாணவ,மாணவிகளுக்கு ரூ.13.04 லட்சம் மதிப்பிலான விலையில்லா மிதிவண்டிகளை வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)