Close

முதன்மைக்கல்வி அலுவலகம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

முதன்மைக்கல்வி அலுவலகம், இரண்டாம் தளம், மாவட்ட ஆட்சியர் வளாகம், பெரம்பலூர் மாவட்டம்.

  • துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

முதன்மைக்கல்வி அலுவலர், முதன்மைக்கல்வி அலுவலகம், 7373280011, ceopmb@nic.in

  • நிர்வாகஅமைப்பு

CEO Administrative Structure Tamil.

  • நோக்கங்கள்

மாவட்ட அளவில் பள்ளி மாணவ மாணவியர்களின் கல்வி நலனை மேம்படுத்துதல், நவீன தொழில்நுட்பத்திற்கு ஏற்றார் போல் மாணவர்களை தயார் செய்தல், AI தொழில்நுட்பத்தில் ஆர்வத்தை ஏற்படுத்துதல், மாணாக்கர்களின் விளையாட்டுத் திறன்களை மேம்படுத்தி அவர்களை மாவட்ட, மாநில அளவிலான விளையாட்டு போட்டிகளில் பங்குபெறச் செய்தல், கற்றல் கற்பித்தல் பணிகளை சிறப்பாக மேற்கொள்ளும் பொருட்டு ஆசிரியர்களுக்கு பணியிடைப்பயிற்சிகள் வழங்குதல், மாணாக்கர்களின் பல்வேறு திறன்களை வெளிப்படுத்த ஏதுவாக கலைத்திருவிழா நடத்துதல், மாணாக்கர்களில் உயர்கல்வி பயில ஏதுவாக உயர்கல்வி வழிகாட்டி வகுப்புகள் நடத்துதல், NEET , JEE போன்றவற்றை மாணாக்கர்கள் எதிர்கொள்ள பயிற்சி வகுப்புகள் நடத்துதல்

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
    • காமராஜர் காலை உணவுத் திட்டம் – (1 முதல் 8-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்) மதிய உணவுத் திட்டம் (1 முதல் 10-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்)
    • இலவசக் கல்வி உபகரணங்கள் (பாடப்புத்தகங்கள், நோட்டுப் புத்தகங்கள், சீருடை, வடிவியல் பெட்டி, கிரேயான்கள், வரைபடம், பை, காலணிகள்,
    • காலுறைகள் போன்றவை) (1 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்கள்)
    • குடும்ப வாழ்வாதாரத் திட்டம் (விபத்துகளில் பெற்றோரை இழந்த மாணவர்களுக்கு ரூ. 75,000/-; பள்ளி வேலை நாட்களில் விபத்துகளில் தங்கள் பிள்ளைகளை இழந்த பெற்றோருக்கு ரூ. 1,00,000/-)
    • கல்வி உதவித்தொகைகள் (NMMS (8th Standard students), TRUST (9th Standard students), TTSE (10th Standard students), CM TALENT TEST(11th Standard students))
  • விருதுகள் மற்றும் சாதனைகள்

விருதுகள்

    • ஆசிரியர்களுக்கான டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது
    • சிறந்த பள்ளிகள் மற்றும் சிறந்த மாணவர்களுக்கான காமராஜர் விருது
    • பள்ளிகள் மற்றும் ஆசிரியர்களுக்கான பேராசிரியர் அன்பழகனார் விருது

சாதனைகள்

    • 2025-2026ஆம் கல்வியாண்டில் பள்ளிப்புத்தாக்க மேம்பாட்டுத் திட்டத்தில் மாநில அளவில் பெரம்பலூர், மௌலானா அரசு உதவி பெறும் உயர்நிலைப்பள்ளி இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
    • பெரம்பலூர் மாவட்டம், குன்னம், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவன் ஜீவா என்பார் தேசிய அளவிலான நீச்சல் போட்டியில் தங்கப்பதக்கம் வென்றுள்ளார்.
    • 2026-ல் நடைபெற்ற தென்னிந்திய அறிவியல் கண்காட்சியில் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த நக்கசேலம் அரசு மேல்நிலைப்பள்ளி மாநில அளவில் இரண்டாம் இடம் பெற்றுள்ளது.
    • வாலிகண்டபுரம், அரசு மேல்நிலைப்பள்ளி, Green Champion – 2026 விருது பெற்றுள்ளது.