முன்னாள் படைவீரர் நல அலுவலகம்
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
பெரம்பலூர் மாவட்டம் இணைந்து ஒருங்கிணைந்த மாவட்டமாக அரியலூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலகம் அரசு பல்துறை வளாகத்தில் அறை எண்.17 -18ல் இயங்கிவருகிறது. இவ்வலுவலகம் மாவட்ட முப்படைவீரர் வாரியம் என்றும் அழைக்கப்படும். இம்முப்படைவீரர் வாரியத்திற்கு உதவி இயக்குநர் செயலாளராகவும், இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்ற முதுநிலை படை அலுவலர் ஒருவர் துணை தலைவராகவும், மாவட்ட ஆட்சியர் அவர்களை தலைவராகவும் கொண்டு செயல்பட்டுவருகிறது.
இவ்வலுவலக தொலைபேசி எண்.04329 – 221011, மின்னஞ்சல் முகவரி exwelalr@tn.gov.in ஆகும்
- துறையின் முதன்மைத் தலைவர்
இணை இயக்குநர் முன்னாள் படைவீரர் நல இயக்ககம் 22, ராஜா முத்தையா சாலை, சென்னை – 600 003 தொலைபேசி எண் 044-2669134
- நிர்வாகஅமைப்பு

- நோக்கங்கள்
1. முன்னாள் படைவீரர் மற்றும் அவர்தம் சார்ந்தோர் நலம் பேணும் மறுவாழ்வுத் திட்டங்கள் / சுயதொழில் வேலைவாய்ப்புகள் / நிதி உதவிகள் / மானியங்கள் மற்றும் பல்வேறு பணப்பயன்கள் வழங்கப்படுகின்றன.
2. இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று வெளிவரும் முன்னாள் படைவீரர்களுக்காக இவ்வலுவலகத்தின் மூலம் சிறப்பு வேலைவாய்ப்பு பிரிவும் செயல்படுகிறது. இதன்மூலம் அரசு மற்றும் அரசு சார்பு நிறுவனங்களில் முன்னாள் படைவீரர்களுக்கான சிறப்பு ஒதுக்கீட்டின்கீழ் ஏற்படும் காலியிடங்களில் முன்னாள் படைவீரர்களின் பெயர் பட்டியல் பரிந்துரைக்கப்படுகிறது.
3. போர் விதவை / போரில் ஊனமுற்றோர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கான மறுவாழ்வு மற்றும் புனரமைப்பு ஆகியன எண்.22, ராஜா முத்தையா சாலை,சென்னை-03 ல் உள்ள இத்துறை தலைமை அலுவலகத்தின் ஆணைகள் / அறிவுரைகளின்படி செயல்படுத்தப்படுகிறது.
4. அரியலூர் மாவட்டத்தில் கீழ்கண்ட எண்ணிக்கையில் முன்னாள் படைவீரர் / விதவையர்கள் வசிக்கின்றனர்.
| வ.எண் | விவரங்கள் | தகவல்கள் |
| 1. | முன்னாள் படைவீரர் | 294 |
| 2. | விதவையர் | 185 |
| 3. | போர் விதவையர் | 1 |
| 4. | போரில் ஊனமுற்றோர் | 0 |
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களைப் பார்க்க இங்கே சொடுக்கவும்
- விருதுகள்/சாதனைகள்
1. இந்தியாவில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7 ஆம் தேதி “படைவீரர் கொடி நாள்” (Armed Forces Flag Day) கொண்டாடப்படுகிறது.
2. கொடி நாள் நிதி திரட்டுவதன் முக்கிய நோக்கம், போரில் காயமடைந்தவர்களின் மறுவாழ்வு, பணியில் உள்ள ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின நலன். அத்தடன் முன்னாள் ராணுவத்தினர் மற்றும் அவர்களது குடும்பத்தினரின் மறுவாழ்வு மற்றும் நலன் ஆகியவற்றை உறுதி செய்வதாகும்.
3. பெரம்பலூர் மாவட்டத்தில் 2022 ஆம் ஆண்டில் கொடி நாள் நிதி வசூலில் மாநில அளவில் மூன்றாவது இடமும், 2023 ஆம் ஆண்டில் கொடி நாள் நிதி வசூலில் மாநில அளவில் இரண்டாம் இடமும் மற்றும் 2024 ஆம் ஆண்டில் கொடி நாள் நிதி வசூலில் மாநில அளவில் மூன்றாவது இடமும் பெற்றுள்ளது.