ரூ.2.19 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா – 10.03.2025
வெளியிடப்பட்ட தேதி : 10/03/2025

மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குன்னம், மருவத்தூர் எழுமூர், வரகூர், புதுவேட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ரூ.2.19 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இன்று (10.3.2025) திறந்து வைத்தார்கள். (PDF 38KB)