Close

குறைகளை-எப்படி-தெரிவிக்க

பார்க்க : http://gdp.tn.gov.in

தமிழக அரசின் மனுப் பரிசீலனை முகப்பு (மின்-மாவட்ட பொதுமக்களின் குறைதீர்ப்பு நாள்) என்பது மாவட்ட நிர்வாகம் மற்றும் சம்பந்தப்பட்ட துறைகளின் அன்றாட அலுவல்களில் இரண்டற கலந்த ஒன்று. இது பொதுமக்கள் தங்கள் கோரிக்கை மனுக்களை சமர்ப்பிக்கவும், மனுக்களின் நிலையைப் பார்க்கவும் உதவுகிறது.

பொதுமக்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்ட அலுவலகம், வட்டாச்சியர் அலுவலகம், பொது மக்கள் சேவை மையம் / இ-சேவை மையம் மற்றும் இணையவழி முறைகளில் கோரிக்கை மனுக்களை சமர்பிக்கலாம்.

மனுவை சமர்ப்பிக்கவும், மனுவின் நிலையை அறிந்து கொள்ளவும், மனுவை செயலாக்கவும் பின்வரும் விருப்பங்களைப் பயன்படுத்தலாம்:

  • இணையவழி மனுக்கள் – இந்தியர்கள்
  • மனுவின் நிலையை அறிய
  • அலுவலர்களின் உள்நுழைவு

மக்கள் குறை தீர்க்கும் பிரிவு

மக்கள் குறை தீர்க்கும் பிரிவு, மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர்.
இடம், இருப்பிடம் : மாவட்ட ஆட்சியரகம் | மாநகரம் : பெரம்பலூர் | அஞ்சல் குறியீட்டு எண் : 621212