Close

சாத்தனூர் கல்மரம்

வழிகாட்டுதல்
வகை இயற்கை / கண்ணுக்கினிய அழகு

சாத்தனூருக்குக் கிழக்கே 100 கிலோ மீட்டர் தொலைவில் இன்று இருக்கும் கடல் 12 கோடி ஆண்டுகளுக்கு முன் இவ்வூருக்கு மேற்கே 8 முதல் 10 கிலோ மீட்டர் வரையிலும் பரவியிருந்தாக புவியியல் கூற்றுப்படி தெரியவருகிறது. புவியியல் சாத்திரப்படி க்ரிடேஷன் காலம் எனக்கூறப்படும் அக்காலத்திலும் இன்று கடலில் காணும் பிராணிகளைப் போன்று பலவித பிராணிகள் நிறைய இருந்தன. இப்பிராணிகள் இறந்த பிறகு ஆறுகளிலும் அடித்து வரப்பட்ட மணல் களிமண் இவற்றால் மூடப்பட்டக் கடலின் அடியில் அமிழ்ந்தன. கடலோரப்பகுதிகளிலும் அதன் சமீப இடங்களிலும் தழைத்து வந்த மரங்களும் ஆற்றுவெள்ளத்தினால் அடித்து வரப்பட்டு இப்பிராணிகளுடன் கடலில் அமிழ்ந்து காலப்போக்கில் கல்லுருவாக மாறின.

இங்குக் காணப்படும் கல்லுருவாகிய பெரிய அடிமரம் ஏறத்தாழ 10 கோடி ஆண்டுகளுக்கு முந்தய திருச்சிராப்பள்ளி பாறையினப்பகுதியில் அமைந்திருக்கின்றது. “ஆஞ்சியோஸ்பெர்ம்ஸ் ” என இக்காலத்தில் காணப்படும் பூக்கள் தோன்றும் தாவர இனம் தோன்றியதற்கு முன்னால் பெரிதும் காணப்பட்ட அக்காலப் பூக்கள் இல்லாத (தோன்றாத) நிலத்தாவர இனமான “கோனிபர்ஸ்” வகையைச் சேர்ந்ததே இம்மரம்.

இங்குக் காணப்படும் கல்லுருவாகிய அடிமரம் 18 மீட்டர் நீளமுள்ளது. வரகூர், அனைப்பாடி, அலுந்தளிப்பூர், சாரதாமங்கலம் இவ்வூர்களின் அருகே நீர் ஓடைப்பகுதிகளிலும் சில மீட்டர் நீளமுள்ள இம்மாதிரியான கல்லுருவாகிய மரங்கள் காணப்படுகின்றன. இந்திய புவியியல் துறையைச் சேர்ந்த டாக்டர். எம்.எஸ்.கிருஷ்ணன் அவர்களால் 1940-ஆம் ஆண்டில் இக்கல்லுருவாகிய மரம் பற்றி முதல் விவரம் தெரிவிக்கப்பட்டது.

சாத்தனூரில் உள்ள தேசிய புதைபடிவ மர பூங்காவில் ஒரு அருங்காட்சியகம் மற்றும் குழந்தைகள் பூங்கா உள்ளிட்ட கல்வி மையம் உள்ளது.

சாத்தனூர்  கல்லுருவாகிய அடிமர கல்வி மையம் என்று அழைக்கப்படும் இந்த மையம் தகவல், பார்வையாளர்களிடையே தளம் மற்றும் பிராந்தியத்தில் உள்ள புதைபடிவ மரத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும்.

திட்டத்தின் ஒரு பகுதியாக கட்டப்பட்ட கல்வி மையத்தில் சூரிய மண்டலம், பூமியின் தோற்றம், பெருவெடிப்பு கோட்பாடு, உயிர் மற்றும் பரிணாமம் மற்றும் பாழடைந்த மரம் பற்றிய விளக்கங்களுடன் கூடிய நான்கு அரங்குகள் உள்ளன. இப்பகுதியில் சேகரிக்கப்பட்ட புதைபடிவங்கள் அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

புகைப்பட தொகுப்பு

  • கல் மரம் பார்வை 1.
  • கல் மரம் மிக அருகில்
  • கல் மரம் விளம்பர பலகை

அடைவது எப்படி:

வான் வழியாக

பெரம்பலூரிலிருந்து 75 கி.மீ. தொலைவில் சர்வதேச விமான நிலையம் திருச்சி உள்ளது.

தொடர்வண்டி வழியாக

பெரம்பலூரிலிருந்து 30 கி.மீ. தொலைவில் தொடர்வண்டி நிலையம் அரியலூரில் உள்ளது. பெரம்பலூரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் திருச்சி தொடர்வண்டி சந்திப்பு உள்ளது. மேலும் இந்தியாவின் வெவ்வேறு பகுதிகளில் இருந்து தொடர்வண்டி வரும் இடமாக திருச்சி தொடர்வண்டி சந்திப்பு உள்ளது.

சாலை வழியாக

பெரம்பலூர் நகரிலிருந்து 23 கி.மீ., தொலைவில் சாத்தனுர் கிராமத்தில் கல் மரம் உள்ளது. பெரம்பலூரிலிருந்து சாத்தனுர் கிராமத்திற்கு டவுன் பஸ்கள் உள்ளன.