Close

மாற்றுத்திறனாளிகளுக்கான அரசு நலத்திட்டங்கள்

வ.எண் மாற்றுத்திறனாளிகளுக்கான நல திட்டங்கள் விண்ணப்பம் பதிவிறக்கம் / இணையதள முகவரி
1 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை

தகுதி: 40 சதவீதத்திற்கு மேல் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு வழங்கப்படுகிறது.
(1.கண் பார்வையின்மை 2.குறை பார்வையின்மை 3.தொழு நோயிலிருந்து குணமடைந்தோர் 4.காது கேளாமை 5.செவிதிறன்; குறைபாடு 6.கை கால் இயக்க குறைபாடு 7.குள்ளத் தன்மை 8.அறிவுசார் குறைபாடு (மனவளர்ச்சி குன்றியவர்) 9.மனநோய்
10.புறஉலக சிந்தனையற்றவர் 11.மூளை முடக்கு வாத பாதிப்பு 12.தசை சிதைவு நோய் 13.நாள்பட்ட நரம்பியல் பாதிப்பு
14.குறிப்பிட்ட கற்றலில் குறைபாடு 15.திசு பண்முகக் கடினமாதல் 16.பேச்சு மற்றும் மொழித் திறன் குறைபாடு 17.இரத்த அழிவு சோகை 18.இரத்த உறையாமை அல்லது இரத்த ஒழுகு குறைபாடு 19.அரிவாளனு இரத்த சோகை 20.அமில வீச்சினால் பாதிக்கப்பட்டோர் 21நடுக்கு வாதம் பல்வகை குறைபாடு)

தேவைப்படும் ஆவணங்கள்: குடும்ப அட்டை, ஆதார் அட்டை, பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம்- 3 கை, கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் –
அரசு எலும்பு முறிவு மருத்துவரிடம் சான்று. கண்பார்வையற்றவர் – அரசு கண் மருத்துவர் சான்றுகாது கேளாதவர் (ம) வாய் பேசாதவர் –
அரசு காது மூக்கு தொண்டை மருத்துவர் சான்று.மனவளர்ச்சி குன்றியவர் –
12 வயதுக்கு உட்பட்டவர்கள் அரசு மனநல மருத்துவர், குழந்தைகள் நல மருத்துவரிடம் சான்று.12 வயதுக்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியோர்கள் மனநல மருத்துவரிடம் சான்று.

மனநலம் பாதிக்கப்பட்டவர் –
அரசு மனநல மருத்துவரிடம் சான்று.

பல்வகை மாற்றுத் திறனாளிகள்
3 நபர்கள் கொண்ட மருத்துவ குழுவிடம் சான்று.

வழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை

விண்ணப்ப படிவம்(PDF)
2 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை
(UNIQUE IDENTITY CARD FOR PERSONS WITH DISABILITIES)தகுதி: மத்திய அரசால் இயற்றப்பட்ட மாற்றுத் திறனாளிகள் உரிமை சட்டம் 2016 இல் அறிவிக்கப்பட்ட வகையான மாற்றுத் திறனாளிகளதேவைப்படும் ஆவணங்கள்: பாஸ்போர்ட் சைஸ் புகைப்படம், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், சிறப்பு மருத்துவரிடம் பெற்ற மருத்துவ சான்று, ஜாதி சான்று, கையொப்பம் / கைவிரல் ரேகை
வழங்கப்படும் உதவி: மாற்றுத் திறனாளிகளுக்கான தனிப்பட்ட தேசிய அடையாள அட்டை (UDID) இணையதளம் மூலம் பதிவு செய்தவர்களுக்கு வழங்கப்படும்
விண்ணப்ப படிவம்(PDF)

Click for Website: http://www.swavlambancard.gov.in

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

3 திட்டம்: மனவளர்ச்சி குன்றியோருக்கான பராமரிப்பு உதவித்தொகை

தகுதி: 40 விழுக்காடுக்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியோர். வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்

வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.2000/-

 

விண்ணப்ப படிவம்(PDF)

http://www.swavlambancard.gov.in

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

 

4 திட்டம்: தசைச்சிதைவு நோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை

தகுதி: 40 விழுக்காடுக்கு மேல் தசைச்சிதைவு நோய் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, இணை சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.2000/-

விண்ணப்ப படிவம்(PDF)
5 திட்டம்: தொழுநோயால் பாதிக்கப்பட்டோருக்கான பராமரிப்பு உதவித்தொகை

தகுதி: தொழுநோயால் பாதிக்கப்பட்டவர் வருவாய் துறை மூலம் மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவர்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். கிராம நிர்வாக அலுவலரிடம் வேறு அரசு துறையில் உதவித்தொகை பெறவில்லை எனச் சான்று, சேமிப்பு வங்கி கணக்கு, புகைப்படம்.

வழங்கப்படும் உதவி: மாதம் ரூ.2000/-

 

விண்ணப்ப படிவம்(PDF)
6 திட்டம்: சுய வேலைவாய்ப்பு வங்கிக்கடன்

தகுதி: பார்வையற்றவர்கள், கை கால்கள் பாதிக்கப்பட்டவர்கள், செவித்திறன் குறைபாடுடையவர்கள், மூளை முடக்கு வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்கள் வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயது முதல் 45 வயது வரை உடையவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல். சேமிப்பு வங்கி கணக்கு புகைப்படம்

.
வழங்கப்படும் உதவி: ரூ.75000 வரை கடன் வழங்க வங்கிக்கு பரிந்துரைக்கப்படும் மூன்றில் ஒரு பங்கு (அல்லது) அதிகபட்சம் ரூ.25000 மானியம் வழங்கப்படும்

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

7 திட்டம்: தேசிய ஊனமுற்றோர் நிதி மேம்பாட்டு கழகத்தின் மூலமாக மாவட்ட கூட்டுறவு வங்கிகளில் சுயதொழில் வங்கி கடன் உதவி

தகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவாராக இருத்தல் வேண்டும் 18 வயதுக்கு மேற்பட்டவராக இருத்தல் வேண்டும். உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. 14 வயதிற்கு மேற்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்களுக்கும் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல். புகைப்படம். ஜாமின்தாரரிடமிருந்து கூட்டுறவு சங்கங்களின் உறுப்பினர் சான்று மற்றும் புகைப்படம்வழங்கப்படும்

 

 உதவி: தங்கள் மாவட்டத்தில் செயல்படும் மத்திய கூட்டுறவு வங்கி, அருகாமையில் உள்ள கூட்டுறவு கடன் சங்கங்கள் / நகர் கூட்டுறவு வங்கிகளில் விண்ணப்பம் பெற்று சமர்ப்பிக்க வேண்டும். ரூ.25,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 1 நபர் ஜாமீன், ரூ.50,000 க்குள் கடன் உதவி பெறுபவர்கள் 2 நபர் ஜாமீன், அதற்கு மேல் கடன் உதவி பெறுபவர்கள் சொத்து ஜாமீன் வழங்க வேண்டும். 4 விழுக்காடு வட்டியில் வங்கி கடன் வழங்கப்படும். தவறாது வங்கி கடன் செலுத்துபவர்களுக்கு வட்டி தமிழக அரசு ஏற்று செலுத்தும்.

 

விண்ணப்ப படிவம்(PDF)
8 திட்டம்: பாரத பிரதமரின் வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் மாற்றுத் திறனாளிகளுக்கு சுய தொழில் வங்கி கடன் PMEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

தகுதி: வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 18 வயது முதல் உச்ச வயது வரம்பு ஏதும் இல்லை. மாற்றுத் திறனாளி குழுக்களுக்கும் சுயதொழில் வங்கி கடன் உதவி வழங்கப்படுகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்ட பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வழங்கப்படும் உதவி: ரூ.25,000 முதல் ரூ.25,00,000 வரை தேசியமயமாககப்பட்ட வங்கிகளுக்கு பரிந்துரைக்கப்படுகிறது . மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக கிராமபுற மாற்றுத்திறனாளிகளுக்கு 35 விழுக்காடு மானியமும், நகர்புற மாற்றுத்திறனாளிகளுக்கு 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
தொடர்பு அலுவலர் : பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் ஆபீஸ் அருகில் , பெரம்பலூர்

Click for Website :http://www.kviconline.gov.in/pmegpeportal

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

9 திட்டம்: படித்த இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின்கீழ் வங்கி கடன் UYEGP LOAN (இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)

தகுதி: 1) 8ம் வகுப்பு தேர்ச்சி. 2) வேறு எந்த வங்கியிலும் கடன் பெறாதவராக இருத்தல் வேண்டும். 3) 18 வயது முதல் 45 வயது வரை.
தேவைப்படும் ஆவணங்கள்: இணையதளம் மூலம் விண்ணப்பித்த விண்ணப்பத்துடன் தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல், ஆதார் அட்டை நகல் திட்ட அறிக்கை புகைப்படம். ஆகியவற்றை தங்கள் மாவட்ட பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம் அவர்களுக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

வழங்கப்படும் உதவி: வியாபாரம், சேவை, உற்பத்தி ஆகியவற்றிற்கு ரூ.3,00,000 முதல் ரூ.5,00,000 வரை வங்கி கடன் வழங்க மாவட்ட தொழில் மையத்தால் பரிந்துரைக்கப்படுகிறது. மாவட்ட தொழில் மையத்தின் மூலமாக 25 விழுக்காடு மானியமும் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக 5 விழுக்காடு மானியமும் வழங்கப்படுகிறது.
தொடர்பு அலுவலர் : பொது மேலாளர், மாவட்ட தொழில் மையம், கலெக்டர் ஆபீஸ் அருகில் , பெரம்பலூர்

Click for Website: http://www.msmeonline.tn.gov.in/uyegp

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

10 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தகுதி: 1 முதல் 8ம் வகுப்பு வரை

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், சேமிப்பு வங்கி கணக்கு

வழங்கப்படும் உதவி: 1ம் வகுப்பு முதல் 5ம் வகுப்பு வரை ரூ.2000
6ம் வகுப்பு முதல் 8ம் வகுப்பு வரை ரூ.6000

APPLICATION FORM (PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

11 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தகுதி: 9ம் வகுப்பு முதல் 12 ம் வகுப்பு மற்றும் ஐ.டி.ஐ பயில்பவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.

வழங்கப்படும் உதவி: 9ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை ரூ.8000

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

12 திட்டம்: மாற்றுத் திறனாளி மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை

தகுதி: பட்டய படிப்பு கல்லூரி பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு, தொழில் கல்வி பயில்பவர்கள் மருத்துவ கல்வி பயில்பவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு, முந்தைய கல்வி ஆண்டில் 40 விழுக்காட்டிற்கு மேல் மதிப்பெண் பெற்ற சான்று.

வழங்கப்படும் உதவி:  பட்டப்படிப்பு
முதுகலை பட்டப்படிப்பு ரூ.12000/-

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

13 திட்டம்: மத்திய அரசின் மாற்றுத் திறனாளிகளுக்கான கல்வி உதவித் தொகை
(இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்)தகுதி: முழுநேர மாணவராக அரசு அங்கீகரிக்கப்பட்ட பள்ளி அல்லது கல்லூரிகளில் 9ம் வகுப்பிற்கு மேல் படிப்பவராக இருத்தல் வேண்டும்.தேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்குவழங்கப்படும் உதவி: கல்வி கட்டணம், விடுதி கட்டணம், போக்குவரத்து கட்டணம், புத்தகம் வாங்குவதற்கான தொகை, பார்வையற்றவர்களுக்கு வாசிப்பாளர் உதவித் தொகை போன்றவற்றிற்காக வழங்கப்படுகிறது
9 முதல் 10ம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு ரூ. 8465/- முதல் ரூ.46,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
11ம் வகுப்பு முதல் பட்டயம் மற்றும் பட்டபடிப்பு படிப்பவர்களுக்கு ரூ.15,000/-முதல் ரூ.1,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.
முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்பு பயில்பவர்களுக்கு ரூ.2,00,000/- வரை கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவர்கள் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கல்வி நிறுவனங்கள் இணையதளத்தின் மூலம் பரிந்துரைக்க வேண்டும்.
Click for Website: http://www.scholarships.gov.in

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

14 திட்டம்: வேலை வாய்ப்பற்ற மாற்றுத் திறனாளிகளுக்கு நிவாரணத்தொகை

தகுதி: வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு ஆண்டு நிறைவு பெற்றிருக்க வேண்டும். மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும். மாற்றுத் திறனாளி உதவித் தொகை பெறாதவராக இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், வங்கி கணக்கு
வழங்கப்படும் உதவி: தொடர்ந்து 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.
10ம் வகுப்பு வரை மாதம் ரூ.600/-
12ம் வகுப்பு- ரூ.750/-
பட்டப்படிப்பு ரூ.1000/- உதவித் தொகை 10 ஆண்டுகளுக்கு வழங்கப்படுகிறது.தொடர்பு அலுவலர்:துணை இயக்குனர், மாவட்ட வேலைவாய்ப்புஅலுவலகம் பெரம்பலூர்

விண்ணப்ப படிவம்(PDF)
15 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை

தகுதி: பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்பவராக இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்-3, வேலைபார்க்கும் நிறவனத்திடமிருந்து சான்று, பள்ளி, கல்லூரி மருத்துவமனை, சிறப்பு பள்ளிக்கு செல்பவராக இருப்பின் நிறுவனத்திடமிருந்து சான்று

வழங்கப்படும் உதவி: வீட்டிலிருந்து பள்ளி, கல்லூரி, மருத்துவமனை மற்றும் பணிக்கு செல்லும் வரை

விண்ணப்ப படிவம்(PDF)
16 திட்டம்: பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான இலவச பேருந்து பயணச்சலுகை


தகுதி: பார்வையற்றவர்; என தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம் – 3.

வழங்கப்படும் உதவி: மாவட்டம் முழுவதும் சென்று வர இலவச பேருந்து சலுகை.

விண்ணப்ப படிவம்(PDF)
17 திட்டம்: அரசு பேருந்தில் மாற்றுத் திறனாளிகளுக்கான 75 விழுக்காடு இலவச பேருந்து சலுகை

தகுதி: தேசிய மாற்றுத் திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். பேரூந்து கட்டணத்தில் 25 விழுக்காடு தொகை நடத்துனரிடம் செலுத்த வேண்டும். எஞ்சிய 75 விழுக்காடு தொகை மாற்றுத் திறனாளிகள் நலத்துறை போக்குவரத்து கழகத்திற்கு செலுத்துகிறது.

தேவைப்படும் ஆவணங்கள்: தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்

வழங்கப்படும் உதவி: தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ்

தேசிய மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் வெளியூர் அரசு பேருந்து நடத்துனரிடம் வழங்க வேண்டும்
18 திட்டம்: அரசு பேருந்தில் கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளியுடன் செல்லும் துணையாளருக்கு 75 விழுக்காடு இலவச பேருந்து பயணச்சலுகை

தகுதி: மாற்றுத்திறனாளி அடையாள அட்டை பெற்றவராக இருத்தல் வேண்டும். துணையாளருடன் மட்டுமே செல்ல கூடியவராக இருத்தல் வேண்டும்.

தேவைப்படும் ஆவணங்கள்: மருத்துவரிடம் துணையாளரை அழைத்து செல்ல பெறப்பட்ட மத்துவ சான்று நகல் மாற்றுத்திறனாளி அடையாள அட்டை நகல் நடத்துனரிடம் வழங்க வேண்டும்.

வழங்கப்படும் உதவி: துணையாளருடன் தமிழ்நாடு முழுவதும் சென்று வர 4இல் ஒரு பங்கு பஸ் பாஸ்

விண்ணப்ப படிவம்(PDF)
19 திட்டம்: மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி

தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்; முதல் திருமணமாக இருத்தல் வேண்டும்.
திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.
18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம், திருமண பதிவு சான்று (அ) வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதற்க்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று

வழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 25000 மற்றும் மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம்

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

20 திட்டம்: பட்டதாரி மாற்றுத் திறனாளிகளுக்கான திருமண நிதியுதவி

தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் செவிதிறன் குறையுடைய மாற்றுத் திறனாளிகள் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகள்;
தம்பதியரில் ஒருவர் பட்டயம் /பட்டப்படிப்பு முடித்தவராக இருக்க வேண்டும்.
முதல்திருமணமாக இருத்தல் வேணடும்.
திருமண உதவித்தொகைக்காக வேறு அரசு துறையில் விண்ணப்பித்திருக்கக்கூடாது.
18 வயது முதல் 35 வயது வரை உடையவராக இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், குடும்ப அட்டை நகல். ஆதார் அட்டை நகல், திருமண பத்திரிக்கை, திருமண புகைப்படம் திருமண பதிவு சான்று அல்லது வழிபாட்டு தலத்தில் திருமணம் நடைபெற்றதக்கான சான்று, கிராம நிர்வாக அலுவலரிடம் முதல் திருமணம் என்று சான்று, பட்டயம் அல்லது பட்டதாரி சான்று.

வழங்கப்படும் உதவி: ரொக்கம் ரூபாய் 50000 மற்றும் மதிப்பு தாலிக்கு தங்கம் 8 கிராம்

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

21 திட்டம்: இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்

தகுதி: 1) 18 வயது முதல் 60 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.
2) இரண்டு கால்களும் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்
தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று
வழங்கப்படும் உதவி: விலையில்லா இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்.

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

22 திட்டம்: ஒரு கால் பாதிக்கப்பட்டோர்க்கான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்

தகுதி: 1) 18 வயது முதல் 60 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.
2) ஒரு கால் செயலிழந்து கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று

வழங்கப்படும் உதவி: விலையில்லா ஒரு கால் பாதிக்கப்பட்டோர்க்கான இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்.

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

23 திட்டம்: முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவினால் பதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்

தகுதி: 1) 18 வயது முதல் 60 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.
2) முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவினால் பதிக்கப்பட்டவர்கள் கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று

வழங்கப்படும் உதவி: விலையில்லா முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவினால் பதிக்கப்பட்டவர்களுக்கான சிறப்பு இணைப்பு சக்கரங்கள் பொருத்தப்பட்ட பெட்ரோல் ஸ்கூட்டர்

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

24 திட்டம்: மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்

தகுதி: கை கால் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மற்றும் செவித்திறன் குறையுடையவர்கள் லேசான மனவளர்ச்சி குன்றியவர்கள், 75 விழுக்காட்டிற்கு மேல் பாதிக்கப்பட்ட மனவளர்ச்சி குன்றியவர்களின் பெற்றோர்கள்
18 வயதுக்கு மேல் 45 வயது வரை.
தையல் பயிற்சி முடித்தவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், தையல் பயிற்சி முடித்த சான்று

வழங்கப்படும் உதவி: விலையில்லா மோட்டார் பொருத்திய தையல் இயந்திரம்.

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

25 திட்டம்: மாற்றுத்திறனரிளிகளுக்கான உதவி உபகரணங்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம்

வழங்கப்படும் உதவி: தகுதியுடைய மாற்றுத் திறனாளிகளுக்கு கீழ்கண்ட உதவி உபகரணங்கள் வழங்கப்படுகிறது

1) மூன்று சக்கர வன்டி
2) சக்கர நாற்காலி
3) ஆக்டசிலரி மற்றும் எல்போ ஊன்றுகோல்
4) சி.பி. சேர்
5) காலிபர்
6) நவீன செயற்கை கால்
7) ரோலேடார்
8) முதுகு தண்டுவடம் பாதிக்கப்பட்டவர்களுகக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி
9) காதுக்கு பின் அணியும் காதொலி கருவி

10) தடைகளை அறியும் பார்வையற்றவர்களுக்கான மடக்கு ஊன்றுகோல்
11) பார்வையற்றவர்களுக்கான கருப்பு கண்ணாடி
12) பிரெய்லி கை கடிகாரம்
13) எழுத்துக்களை பெரிதாக்கி காட்டும் உருப்பெருக்கி (பார்வைகுறையுடைய மாணவர்களுக்கு மட்டும்)
14) திறன் பேசி (பார்வையற்றோர் காதுகேளாதோர் மட்டும் )

15) தசைசதைவு நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி

உதவி உபகரணங்கள்: விண்ணப்ப படிவம்(PDF)

திறன் பேசி:  விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

26 திட்டம்: முதுகு தண்டுவடம் தசைசதைவு நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி

தகுதி: 1) 18 வயது முதல் 60 வயது வரை கல்லூரியில் படிக்கும் மாணவர்கள் அல்லது பணிபுரிபவர்களாக இருக்க வேண்டும்.
2) முதுகு தண்டுவடம் மற்றும் தசை சிதைவினால் பதிக்கப்பட்டவர்கள் கைகளால் வண்டியை இயக்கக்கூடிய நிலையில் இருத்தல் வேண்டும்

தேவைப்படும் ஆவணங்கள்: விண்ணப்பம், தேசிய மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், பணிச்சான்று அல்லது கல்விச்சான்று

வழங்கப்படும் உதவி: விலையில்லா முதுகு தண்டுவடம் மற்றும் தசைசதைவு நோயால் பாதிக்கப்பட்வர்களுக்கான பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி

விண்ணப்ப படிவம்(PDF)

Click for the website :www.tnesevai.tn.gov.in/Citizen/

மேற்காணும் இணையதளம் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.

 

27 திட்டம்: இரயில் பயன சலுகை (நான்கில் ஒரு பங்கு கட்டணத்துடன்)

கடுமையாக பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் மாற்றுத் திறன் தன்மைக்கு ஏற்ப அரசு எலும்பு முறிவு மருத்துவர் அல்லது கண் மருத்துவர் அல்லது காது மூக்கு தொண்டை மருத்துவர் அல்லது குழந்தைகள் நல மருத்துவர் அல்லது மனநோய் மருத்துவாரிடம் விண்ணப்பத்தில் சான்று பெற்று இரயில் நிலையத்தில் சமர்ப்பித்து பயண சலுகை பெறவேண்டும்.

விண்ணப்ப படிவம்(PDF)
28 திட்டம்:மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை

தகுதி: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை வைத்துள்ள அனைவருக்கும் வருமான உச்சவரம்பு இன்றி வழங்கப்படுகிறது. மாற்றுத் திறனாளி குடும்பத்தினர் அனைவரும் பயன்படுத்தலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத் திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல் குடும்ப தலைவர் அல்லது குடும்ப தலைவி நேரில் வந்து பதிவு செய்ய வேண்டும்

வழங்கப்படும் உதவி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை

தொடர்பு அலுவலர்: மாவட்ட திட்ட அலுவலர், மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்ட அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,பெரம்பலூர்
குடும்ப தலைவர் நேரில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்
29 திட்டம்: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் காதுக்கு பின் அணியும் காதொலி கருவி

தகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ள காதுகேளாதவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல், ஆதார் அட்டை நகல், குடும்ப அட்டை நகல், புகைப்படம், ஆடியோகிராம் சான்று மருத்துவ காப்பீடு அட்டை

வழங்கப்படும் உதவி: விலையில்லா காதுக்கு பின் அணியும் காதொலி கருவி

தொடர்பு அலுவலர்: அனைத்து அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை மருத்துவர் பெரம்பலூர் மாவட்டம் அவர்களை தொடர்பு கொள்ளவும்.
30 திட்டம்: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு திட்டத்தின் கீழ் நவின செயற்கை கால் செயற்கை கை


தகுதி: மாண்புமிகு முதலமைச்சர் விரிவான மருத்துவ காப்பீடு அட்டை உள்ள கால்கள் இழந்தவர்கள் கைகள் இழந்தவர்கள்

தேவைப்படும் ஆவணங்கள்: மாற்றுத்திறனாளிகள் அடையாள அட்டை நகல் ஆதார் அட்டை நகல் குடும்ப அட்டை நகல் புகைப்படம்இ மாற்றுத் திறனாளி தேசிய அடையாள அட்டையுடன் மருத்துவர் சான்று மருத்துவ காப்பீடு அட்டை

வழங்கப்படும் உதவி: விலையில்லா நவின செயற்கை கால் செயற்கை கை

தொடர்பு அலுவலர்: அனைத்து அரசு மருத்துவமனை காது மூக்கு தொண்டை மருத்துவர் பெரம்பலூர் மாவட்டம் அவர்களை தொடர்பு கொள்ளவும்.