Close

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

  • உதவி இயக்குநர் ஊராட்சிகள் /தணிக்கை அலுவலகம் உத்தேச பயண நிரல்
  • ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் – 15 வது மத்திய நிதிக்குழு மான்ய திட்டம் நிர்வாக அனுமதி

  • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் (மகாதேஊவேஉதி)

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி :

    மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, 2 வது தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர்

  • துறையின் முதன்மை தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :

    திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, பெரம்பலூர்.
    செல்பேசி எண்: 7373704220, தொலைபேசி எண்: (04328) – 225377, 225277, மின்னஞ்சல் முகவரி: drdapmb@nic.in

  • நிர்வாக அமைப்பு

    மாவட்ட ஊரக வளர்ச்சி நிர்வாக அமைப்பு
  • நோக்கங்கள்

    • மக்களிடையே நிலையான மற்றும் சமத்துவமான வாழ்வாதாரத்தை சமூக மற்றும் சுற்று சூழல் ரீதியான ஊரக சொத்துக்களை ஏற்படுத்தி ( இயற்கை, கட்டமைப்பு, மனிதவளம். தொழில்நுட்பம் மற்றும் சமூதாய மூலதனம்) போன்ற சேவைகள் மூலம் உற்பத்தி மூலதனத்தை பெருக்கி நீடித்த மற்றும் சமமான வாழ்வாதாரத்தை வழங்குதலே ஊரக வளர்ச்சித் துறையின் முக்கிய நோக்கம்.
    • ஊரக பகுதியில் வாழும் மக்களின் வறுமை ஒழித்தல், வேலையில்லா திண்டாட்டத்தை குறைத்து, மக்களின் சமூக பொருளாதார உள்கட்டமைப்பு மூலம் வேலைவாய்ப்பு வழங்குதல் மூலமும், ஊரக கிராமபுற வேலையில்லா இளைஞர்களுக்கு பயிற்சி அளித்தல், சிறுகுறு விவசாயிகளுக்கு குறைந்தபட்ச வேலைவாய்ப்பு வழங்குதல் மூலம் நகர பகுதிக்கு இடம் பெயர்தலை குறைக்க தொடர்ந்து இத்துறை மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்பப்படுகிறது.
  • நடப்பில் உள்ள திட்டங்கள்:

    • முதலமைச்சரின் சூரிய மின்சக்தியுடன் கூடிய பசுமை வீடுகள் திட்டம்
    • பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(கி)
    • சட்டமன்ற உறுப்பனர் உள்ளூர் வளர்ச்சி திட்டம்
    • பாராளுமன்ற உறுப்பனர் தொகுதி மேம்பாட்டு திட்டம்
    • மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம்
    • பிரதம மந்திரி கிராம சாலை இணைப்பு திட்டம் – தொகுதி 2
    • நபார்டு
    • தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டம்
  • விருதுகள் மற்றும் சாதனைகள்:

    • பில்லங்குளம், குரும்பாபாளையம் மற்றும் மூங்கில்பாடி ஆகிய மூன்று கிராம ஊராட்சிகளுக்கு தூய்மை கிராம இயக்க விருது மற்றும் தலா ரூபாய் ஐந்து இலட்சம் ரொக்கப் பரிசாக அரசால் வழங்கப்பட்டுள்ளது.
    • பெருந்திரள் மரம் வளர்ப்புத் திட்டத்தின் கீழ், 83,760 எண்ணிக்கையில் “ வேம்பு ”, “ பூவரசு “ மற்றும் “ புங்கை ” ஆகிய மரக் கன்றுகள் இம்மாவட்டத்தில் நடப்பட்டுள்ளது.
    • தூய்மை பாரத இயக்கத்தின் கீழ், 50,226 எண்ணிக்கையில் தனி நபர் இல்லக்கழிப்பறைகள் இம்மாவட்டத்தில் கட்டப்பட்டுள்ளது.
    • பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா(கி) மற்றும் பசுமை வீடுகள் திட்டத்தின் கீழ், 15,857 வீடுகள் கிராம புற நலிவடைந்த குடும்பங்களுக்கு இம்மாவட்டத்தில் வீடுகள் கட்டி கொடுக்கப்பட்டுள்ளது.