Close

மாவட்ட நூலகம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

மாவட்ட நூலக, அலுவலகம், புதிய பேருந்து நிலையம் எதிரில், துறைமங்கலம், பெரம்பலூர் மாவட்டம் – 621 220.

  • துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

மாவட்ட நூலக அலுவலர் ,மாவட்ட நூலக, அலுவலகம் பெரம்பலூர்,04328 -296039, dloperambalur@gmail.com

  • நிர்வாகஅமைப்பு

Library Dept Administrative Structure tamil.

  • நோக்கங்கள்

பெரம்பலூர் மாவட்ட ஆணைக்குழுவின் கீழ் செயல்படும் கீழ்க்காணும் நூலகங்களின் மூலம் சமுதாயத்தின் அனைத்து பிரிவு மக்களுக்கும் “குறைந்த செலவில் நிறைந்த மக்களுக்கு சிறந்த நூலக சேவை” வழங்குவதை நோக்கமாக கொண்டு பொது நூலகத்துறை செயல்பட்டு வருகிறது.

1. மாவட்ட மைய நூலகம் – 1
2. முழு நேர கிளை நூலகம் – 1
3. கிளை நூலகம் – 18
4. ஊர்ப்புற நூலகம் – 24
5. பகுதி நேர நூலகம் – 42

மாவட்ட மைய நூலகத்தை தினசரி நூற்றுக்கும் அதிகமான மாணவர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஆண்டுதோறும் நூலகங்களில் உலக புத்தக தினம், நூலக வார விழாக்கள், புத்தக கண்காட்சிகள் மற்றும் பள்ளி மாணவர்களுக்கு பல்வேறு போட்டிகள் நடத்துதல் ஆகியவற்றின் மூலம் மாணவ சமுதாயத்தினரிடம் நூலகத்தை பயன்படுத்துவதால் உண்டாகும் நன்மைகள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்ட்டு வருகிறது.

பெரம்பலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் முக்கிய மற்றும் முதன்மை நூலகமான மாவட்ட மைய நூலகத்தில் கீழ்க்காணும் பிரிவுகள் செயல்பட்டு வருகிறது. மாவட்ட மைய நூலகத்தின் பணிநேரம் காலை 8.00 மணி முதல் இரவு 8.00 மணி வரை ஆகும்.

1. நூல் இரவல் பிரிவு
2. நாளிதழ், பருவ இதழ்கள் பிரிவு
3. மாற்றுத் திறனாளிகள் பிரிவு
4. குறிப்புதவி பிரிவு
5. சொந்த நூல்கள் படிக்கும் பிரிவு
6. குழந்தைகள் பிரிவு
7. குடிமை பணி பயிற்சி பிரிவு

பெரம்பலூர் மாவட்ட நூலக ஆணைக்குழுவின் 2022- 2023 ஆம் ஆண்டிற்கான ஆண்டறிக்கை

மொத்த நூல் இருப்பு – 1283511
மொத்த உறுப்பினர்கள் – 85524
மொத்த புரவலர்கள் – 2337
வாசகர் வருகை (நாளொன்றுக்கு) – 686765
நூல்  இரவல் (நாளொன்றுக்கு) – 455808

  • விருதுகள் மற்றும் சாதனைகள்

நூலகங்களில் பணிபுரிந்து வரும் பல்வேறு நிலையிலான நூலகர்களின் பணியினை ஊக்குவிக்கும் விதமாக நூலகங்களில் அதிகமாக உறுப்பினர்கள், புரவலர்கள் சேர்த்தல், நூலகத்திற்கு இலவச காலிமனை/ கட்டடம் பெறுதல் நூலகங்களுக்கு, தேவையான தளவாடங்களை நன்கொடையாக பெறுதல் போன்ற வளர்ச்சிப் பணிகளில் ஆர்வமுடன் ஈடுபட்டு சிறந்த முறையில் சாதனை படைக்கும் நூலகர்கள் மாவட்டத்திற்கு “ஒருவர்” என தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்களுக்கு ஆண்டுதோறும் நவம்பர் 14 முதல் 20 வரை கொண்டாடப்படும் நூலக வார விழாவின்போது தமிழக அரசின் “ டாக்டர்.எஸ்.ஆர்.அரங்கநாதன் விருது” வழங்கப்பட்டு வருகிறது. விருது பெறும் நூலகருக்கு ரூ.5000/- ரொக்கப்பரிசும், வெள்ளி மடல் மற்றும் பாரட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

நூலக ஆர்வலர் விருது

ஆண்டுதோறும் மேற்படி நூலக வார விழாவின் போது மேற்கொள்ள நூலக வளர்ச்சிப்பணிகளில் சிறந்து விளங்குதல் மற்றும் பள்ளி கல்லூரி மாணவ/மாணவியர்களிடையே நூலகங்களின் தேவை மற்றும் பயன் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தி அதன் மூலம் அவர்களை நூலகத்தில் உறுப்பினராக சேர்த்தல் போன்ற நடவடிக்கைகளில் சிறப்பாக செயலாற்றும் “வாசகர் வட்டத்திற்கு” நூலக ஆர்வலர் விருது வழங்கப்பட்டு வருகிறது. இதன்படி தேர்வு செய்யப்படும் சிறந்த வாசகர் வட்டத்திற்கு கேடயம் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.

மாவட்ட மைய நூலகத்தில் மத்திய மற்றும் மாநில அரசுகளின் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வணையம் நடத்தும் தொகுதி -1 முதல் 4 வரையிலான தேர்வுகள், மத்திய பணியாளர் தேர்வாணையம், இரயில்வே தேர்வு வாரியம், வங்கி பணிகளுக்கான தேர்வுகள் போன்ற பல்வேறு வகையான போட்டித் தேர்வுக்கு தயாராகும் மாணவ, மாணவியர்களுக்கு தேவையான புத்தகங்கள் வாங்கி வைக்கப்பட்டு, அவற்றின் மூலம் அதிக அளவிலான மாணவ/மாணவியர்கள் பயனடைந்து வருகின்றனர். 2022 ஆம் ஆண்டில் 27 மாணவர்கள் இப்பிரிவுகளின் மூலம் பயன் பெற்று பல்வேறு அரசுப் பணிகளில் பணியாற்றி வருகின்றனர்.