Close

வருவாய் நிர்வாகம்

வருவாய் கோட்ட அலுவலகம்

பெரம்பலூர் மாவட்டத்தில் ஒரு வருவாய்க் கோட்டம் உள்ளது. ஐஏஎஸ் நிலையில் சார் ஆட்சியரோ அல்லது வருவாய் கோட்டாட்சியரோ இருப்பார். இவர் உட்கோட்ட நடுவராக உள்ளார். தாசில்தார் பணிநிலையில் வருவாய் கோட்டாட்சியரின் நேர்முக உதவியாளர் வருவாய்க் கோட்ட அலுவலருக்கு அவருடைய அன்றாட பணியில் உதவி புரிகிறார். வருவாய்க் கோட்ட அலுவலகம் மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தின் பிரதிபலிப்பாக இருக்கும். மாவட்ட ஆட்சியரின் அலுவலகத்தில் உள்ள அனைத்து பிரிவுகளும் வருவாய்க் கோட்ட அலுவலகத்தில் உள்ளது. இவை மாவட்ட நிருவாக அமைப்புடன் இணைந்து செயல்படுகிறது.

வருவாய்க் கோட்டம் : 1 தாலுக்கா : 4 பிர்க்கா : 11 வருவாய் கிராமங்கள் : 152

தாலுக்கா, பிர்கா மற்றும் ஒவ்வொரு பிர்க்காவிலும் உள்ள வருவாய் கிராமங்கள் விவரம்
தாலுக்கா பிர்க்கா(கிராமங்களின் எண்ணிக்கை) வருவாய் கிராமங்களின் எண்ணிக்கை
குன்னம் வடக்கலூர்(15), கீழப்புலியூர்(17), வரகூர்(15) 47  (PDF 373 KB)
பெரம்பலூர் பெரம்பலூர்(16), குரும்பலூர்(11) 27  (PDF 358 KB)
வேப்பந்தட்டை வெண்கலம்(14), பசும்பலூர்(12), வாலிகண்டபுரம் (13) 39  (PDF 365 KB)
ஆலத்தூர் செட்டிகுளம்(14), கொளக்காநத்தம்(12), கூத்தூர்(13) 39  (PDF 363 KB)