Close

வேளாண்மை

”நீரின்றி அமையாது உலகு உழவின்றி அமையாது உணவு”

உணவிற்கு ஆதாரமாக விளங்குவது உழவுத் தொழில். அந்த உழவுத் தொழிலே பெரம்பலுார் மாவட்டத்தின் பிரதான தொழிலாகும். பெரம்பலுார் மாவட்டத்தின் மொத்த நிலப்பரப்பு 1,75,739 ஹெக்டா். இதில் சாகுபடி செய்யப்படும் பரப்பளவு 93,581 ஹெக்டா் ஆகும். மாவட்டத்தின் ஆண்டு சராசரி மழையளவு 861 மி.மீட்டா். மாவட்டத்தின் முக்கிய பயிர்கள் பருத்தி மற்றும் மக்காச்சோளம் ஆகும். தமிழகத்திலேயே பருத்தி மற்றும் மக்காச்சோளம் அதிகளவில் பயிரிடப்படும் மாவட்டமாக பெரம்பலுார் மாவட்டம் திகழ்கிறது. மாவட்டத்தில் சாகுபடி செய்யப்படும் பரப்பில் 80 சதவீத அளவிற்கு மானாவாரி விவசாயம் நடைபெறுகிறது. மானாவாரி மாவட்டமாக இருந்தாலும் உணவு தானிய உற்பத்தியில் பெரம்பலுார் மாவட்டத்தில் சராசரியாக ஆண்டிற்கு 4.0 லட்சம் மெட்ரிக் டன் உணவு தானிய உற்பத்தி செய்யப்படுகிறது.

 

  • துறையின் பெயா் மற்றும் முகவரி :

    வேளாண்மை துறை, ஒருங்கிணைந்த வேளாண்மை வளாகம், மாவட்ட ஆட்சியரக வளாகம், பெரம்பலுார்.

  • துறைத்தலைவர் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :

    வேளாண்மை இணை இயக்குநா், தொலைபேசி எண். : 04328–225773, கைப்பேசி எண். : — மின்னஞ்சல் முகவரி : jdapblr@gmail.com

  • நிர்வாக அமைப்பு :

    வேளாண்மை துறை - மாவட்ட அளவிலான நிர்வாக அமைப்பு
    வேளாண்மை துறை - வட்டார அளவிலான நிர்வாக அமைப்பு
  • நோக்கம் :


    வேளாண்மையில் ”இரண்டு மடங்கு உற்பத்தி மும்மடங்கு வருமானம்”

    தமிழக அரசின் தாரக மந்திரமான வேளாண்மையில் இரண்டு மடங்கு உற்பத்தி மற்றும் மும்மடங்கு வருமானம் என்ற உயரிய நோக்கை அடைவதற்காக வேளாண்மை துறை விவசாயிகளுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம், நீடித்த நிலையான மானாவாரி தொகுப்பு திட்டம், கூட்டுப் பண்ணையத் திட்டம், பயிர் காப்பீட்டு திட்டம், மண் வள அட்டை திட்டம், விதை கிராம திட்டம், பண்ணை இயந்திரமாக்கல் திட்டம், ஒருங்கிணைந்த பூச்சி மற்றும் நோய் மேலாண்மை, வேளாண்மை அலுவலா்களின் நிரந்தர பயண திட்டம் போன்ற செம்மையான திட்டங்களால் இந்த உயரிய இலக்கை அடைவதே வேளாண் துறையின் நோக்கமாகும்.
  • செயல்படுத்தப்படும் திட்டங்கள் :

      • தேசிய உணவு பாதுகாப்பு இயக்கம்
      • தேசிய வேளாண் வளா்ச்சி திட்டம்
      • விதை கிராம திட்டம்
      • தேசிய எண்ணெய்வித்து மற்றும் எண்ணெய்பனை இயக்கம்
      • தேசிய நீடித்த நிலையான வேளாண்மை இயக்கம்
      • நீடித்த நிலையான மானாவாரி இயக்கம்
      • கூட்டு பண்ணைய திட்டம்
      • நிரந்தர பயண திட்டம்
      • நுண்ணீா் பாசன திட்டம்
      • பயிர் காப்பீட்டு திட்டம்

     

     உழவன் சையலி
    மேலும், இத்திட்டங்களை பற்றி முழுமையான விவரங்கள் மற்றும் தேவையான ஆவணங்களை பற்றி அறிய வட்டார வேளாண்மை விரிவாக்க மையங்களை தொடா்பு கொண்டோ அல்லது கூகுள் பிளே ஸ்டோரில் ”உழவன் செயலி”-யை பதிவிறக்கம் செய்து அனைத்து தகவல்களையும் பெறலாம்.
  • Awards:

     கிருஷி கர்மன் விருது

    பெரம்பலுார் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுக்கா, அகரம் கிராமத்தைச் சோ்ந்த திருமதி. பூங்கோதை என்பவா் 2013-14-ஆம் ஆண்டு தமிழ்நாட்டிலேயே மக்காசோளத்தில் அதிக அளவு மகசூல் எடுத்ததற்காக பாரத பிரதம மந்திரி மாண்புமிகு நரேந்திர மோடி அவா்களிடமிருந்து கிருஷி கா்மான் விருது பெற்றார்.
  • சாதனை :

    பெரம்பலுார் மாவட்டத்தில் 80 சதவிதத்திற்கு மேல் மானாவாரி விவசாயமாக இருந்தாலும் உணவு தானிய உற்பத்தியில் பெரம்பலுார் மாவட்டம் தமிழக அளவில் முதல் பத்து இடங்களுக்குள் உள்ளது.