மாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி – 28.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 29/08/2025தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில் மாண்புமிகு உயர் கல்வித் துறை அமைச்சர் முனைவர் கோவி.செழியன் அவர்கள், கலந்து கொண்டு கல்வி சிறந்த தமிழ்நாடு” என்ற தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அரசு பள்ளி மாணவ மாணவிகளுக்கு “தேர்வை வெல்வோம்” புத்தகங்களை வழங்கினார் – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் அரசுப் பள்ளி மாணவ மாணவிகள் பொதுத்தேர்வுகளை எளிதாக எதிர்கொள்ளும் வகையில் மிக முக்கிய வினா-விடைகள் அடங்கிய ”தேர்வை வெல்வோம்” புத்தகங்களை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலநிமிர்ந்து நில் திட்டம் – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025உயர் கல்வி நிறுவனங்களுக்கான “நிமிர்ந்து நில்” திட்டம் சார்ந்த பயிற்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப.. அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் மாற்றுத்திறனாளி பயனாளிகளுக்கு பல்வேறு அரசு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார் – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025மாற்றுத்திறனாளி நலத்துறையின் சார்பில், மாற்றுத்திறனாளி நபருக்கு சக்கர நாற்காலியினையும், முதலமைச்சரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டையினையும் மற்றும் ஆதிதிராவிடர் நலத்துறையின் சார்பில் மாற்றுத்திறனாளி மாணவிக்கு கல்லூரி விடுதி சேர்க்கைக்கான ஆணையினையும் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ,ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமுதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டி – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025முதலமைச்சர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் ஆகியோர் மாணவர்களுடன் இறகுப்பந்தாட்டம் விளையாடி போட்டிகளை தொடங்கி வைத்தனர்.(PDF 38KB)
மேலும் பலநகரப் பகுதிகளிலுள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதல்வரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் – 26.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 28/08/2025மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் நகர் பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு முதலமைச்சரின் காலை உணவு திட்டம் விரிவாக்கம் செய்யும் திட்டத்தை தொடங்கி வைத்த நிகழ்ச்சியினை, மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் , பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் ஆகியோர் பெரம்பலூர் தந்தை ரோவர் தொடக்கப்பள்ளியில் நேரலையில் பார்வையிட்டு, மாணவர்களுக்கு காலை உணவினை பரிமாறி மாணவர்களுடன் அமர்ந்து சாப்பிட்டனர்.(PDF 38KB)
மேலும் பலகீழப்பெரம்பலூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 25.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025கீழப்பெரம்பலூர் ஏரிக்கு செல்லும் வரத்து வாய்க்கால் தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 25.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 26/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் காதொலிக் கருவி கேட்டு மனு கொடுத்த மாற்றுத்திறனாளிக்கு உடனடியாக நடவடிக்கை எடுத்து கருவி வழங்கிய மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள்.(PDF 38KB)
மேலும் பலநலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் ஆய்வு செய்தார் – 23.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025நலம் காக்கும் ஸ்டாலின் மருத்துவ முகாமினை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் பார்வையிட்டு, பயனாளிகளுக்கு மருத்துவ அறிக்கைகளை வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலசிறுவாச்சூர் சின்ன ஏரியினை தூர்வாரும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தொடங்கி வைத்தார் – 22.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 25/08/2025சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் சிறுவாச்சூர் சின்ன ஏரியினை தூர்வாரி கரைகளை பலப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல