Close

மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

மாவட்ட நில அளவை பதிவேடுகள் துறை, மாவட்ட ஆட்சியரக வளாகம், முதல் தளம், பெரம்பலூர்-621212

  • துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

உதவி இயக்குநர், நிலஅளவை பதிவேடுகள் துறை,  04328-224744 , adsurvey.tnpmb@nic.in

  • நிர்வாகஅமைப்பு

survey administrative structure Tamil.

  • நோக்கங்கள்
    • பல்வேறு வகையான நிலஅளவைகளான ஆரம்ப நிலஅளவை, மறுநிலஅளவை, நத்தம் நிலஅளவை மற்றும் நகர நிலஅளவை ஆகிய நிலஅளவைகள் இத்துறையினால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
    • வட்ட அலுவலகத்தில் அளவீட்டுப் பணியானது புதிய உட்பிரிவுடன் கூடிய பட்டா பரிமாற்றம், விரைவுப் பட்டா வழங்க அளவீட்டு பணி செய்தல்.
    • மாநில அரசு, மத்திய அரசு மற்றும் பிற அரசு நிறுவனங்களுக்கான நிலம் கையகப்படுத்தும் பணி.
    • அரசு நிலம் ஆக்கிரமிப்புகளை அளவீடு செய்தல்.
    • நிலஅளவை கற்களை பராமரித்தல்
    • புல எல்லையை அளந்து அத்துக்காட்டுதல்.
    • மாநிலங்களுக்கிடையேயான எல்லை பணி அளவீடு செய்தல்.
    • நகர நிலவரித்திட்டப்பணிகள் செய்தல்.
    • புலப்படங்கள், கிராம வரைபடங்கள், வட்ட வரைபடங்கள், மாவட்ட வரைபடங்கள் மற்றும் மாநில வரைபடங்கள் தயார் செய்தல்.
  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் / இலக்கு குழுக்களின் திட்டங்கள் / திட்டங்களைப் பெறுவதற்கான தேவையான ஆவணங்கள்

எங்கிருந்தும் எந்நேரத்திலும் இணையவழி சேவைகள்

இந்த இணைய வழி சேவை மூலம் வழங்கப்படும் தகவல்கள் அனைத்தும் உடனுக்குடன் நிகழ்நிலைப்படுத்தப்பட்டு வெளியிடப்படுபவை என்பதால் இத் தகவல்களை பெற எந்தவொரு வருவாய்த் துறை அலுவலத்திற்கும் நேரில் செல்ல வேண்டிய அவசியம் இல்லை.
பட்டா மாறுதல் மனுக்களை மாநிலத்தில் உள்ள எந்தவொரு பொது சேவை மையத்தின் மூலமும் அளிக்கலாம்.அதற்கு கட்டணமாக ரூ.60/- பொதுச் சேவை மையத்தில் பெறப்படுகிறது.
இந்த மின்னணு சேவை மூலம், புலப்பட நகல்களை கட்டணமின்றி பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.இணையதள முகவரி: https://eservices.tn.gov.in/eservicesnew/home.html

  • விருதுகள் மற்றும் சாதனைகள்
    • இணையவழி பட்டா மாறுதல் திட்டப்பணியினை விரைவாகவும், சிறப்பாகவும் செயலாக்கத்திற்கு கொண்டுவர முனைப்புடன் செயல்பட்டு, முழு ஒத்துழைப்பு நல்கியமைக்காக பெரம்பலூர் மாவட்ட நிலஅளவை பதிவேடுகள் துறை உதவி இயக்குநர் அலுவலகத்திற்கு பாராட்டு தெரிவித்து பாராட்டு சான்றிதழ் நிலஅளவை மற்றும் நிலவரித்திட்ட ஆணையரால் வழங்கப்பட்டுள்ளது.
    • பெரம்பலூர் நகராட்சியில் GPS மற்றும் Total Station – ஐ பயன்படுத்தி நவீன நகரளவை நடத்தப்பட்டது.