Close

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், தரைத் தளம், மாவட்ட ஆட்சியரகம், பெரம்பலூர்.

  • துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

திட்ட இயக்குநர், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், 9444094323

  • நிர்வாகஅமைப்பு

தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்

     ↓

மாவட்ட இயக்க மேலாண்மை அலகு

     ↓

வட்டார இயக்க மேலாண்மை அலகு

  • நோக்கங்கள்

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தின் நோக்கம், வாழ்வாதார மேம்பாடு மற்றும் நிதி மற்றும் பிற சேவைகளை அணுகுவதன் மூலம் ஏழைகளின் குடும்ப வருமானத்தை அதிகரிப்பதே ஆகும்.

1. சமூக ஒருங்கிணைப்பு மற்றும் நிறுவன கட்டமைப்பு
2. திறன் உருவாக்கம் மற்றும் பயிற்சி
3. நிதி சேர்க்கை
4. வாழ்வாதார மேம்பாடு மற்றும் சந்தைப்படுத்தல்
5. திறன் பயிற்சி
6. கூட்டாண்மை மற்றும் ஒருங்கிணைப்பு

தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கம், பெரம்லூர் மாவட்டத்தில் நான்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட 121 கிராம ஊராட்சிகளிலும் மத்திய அரசு நிதி 60%-ம் மாநில அரசு நிதி 40% கொண்டு இத்திட்டம் செயல்பட்டு வருகிறது.
இத்திட்டமானது மகளிர், மாற்றுத்திறனாளி மற்றும் முதியோர்களை கொண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு பயிற்சிகள் வழங்கி வாழ்வாதார நடவடிக்கைகளில் ஈடுபட சுழல்நிதி மற்றும் வங்கி கடன் இணைப்பு பெற்று தரப்படுகிறது.

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் / இலக்கு குழுக்களின் திட்டங்கள் திட்டங்களைப் பெறுவதற்காக தேவையான ஆவணங்கள்

மகளிர் சுய உதவிக் குழுக்களின் விவரங்கள்  LOKOS என்ற இணையதளத்தில் பதிவு செய்திருத்தல் வேண்டும்.

  • விருதுகள்/சாதனைகள்

ஒவ்வொரு ஆண்டும் சிறப்பாக செயல்படும் சமுதாய அமைப்புகளுக்கு (PLF, BLF, ALF, VPRC, SHG(Rural & Urban) மணிமேகலை விருதுகள் வழங்கப்பட்டு வருகிறது.