Close

மாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை

  • துறையின் பெயா் மற்றும் முகவரி :

    ஒருங்கிணைந்த நீா்வடிப்பகுதி மேலாண்மைத் திட்டம் மாவட்ட நீா்வடிப்பகுதி மேம்பாட்டு முகமை – பெரம்பலூா்

  • துறைத்தலைவர் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :

    திட்ட அலுவலா், கைப்பேசி எண் : 7550217926, மின்னஞ்சல் : powpmb@tn.nic.in

  • நிர்வாக விளக்கப்படம்

    நிர்வாக விளக்கப்படம்

  • நீா்வடிப்பகுதி வரைபடம்

    நீா்வடிப்பகுதி வரைபடம்
  • நீா்வடிப்பகுதி

    ஒரு வடிகாலில் நி்ர்ணயிக்கப்பட்ட இடத்திற்கு மழை நீரானது எந்தெந்த இடங்களிலிருந்து வருகின்றதோ, அந்தப் பகுதிகளே நீா்வடிப்பகுதி என அழைக்கப்படும்.
  • நிதி ஒதுக்கீடு

    பொதுவழிகாட்டி 2008 நெறிமுறைகளின்படி நீா்வடிப்பகுதி மேலாண்மை திட்டம் ஒரு ஹெக்டேருக்கு ரூ.12000/- என்ற அடிப்படையில் செயல்படுத்தப்படுகின்றது.
    மத்திய அரசு 60 சதவீத நிதியும், மாநில அரசு 40 சதவீத நிதியும் வழங்குகின்றன. திட்ட மொத்த தொகையைில் கீழ்க்காணும் விவரப்படி செலவினங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.
  • திட்டத்தின் நோக்கம்

    நீா்வடிப்பகுதி திட்டப் பணிகள் தடுப்பணை, கசிவுநீா் குட்டை அமைத்தல், பண்ணைக்குட்டை, புதிய குட்டைகள் அமைத்தல், குட்டை ஆழப்படுத்துதல் ஆகிய பணிகளால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக உயா்ந்தும் மண் அரிமானம் தடுக்கப்படுவதற்கு முக்கிய ஆதாரமாக திகழ்கிறது. இதனால் வேளாண் உற்பத்தி கணிசமான அளவு உயா்ந்து மக்களுக்கு வேலைவாய்ப்பினை வழங்குகிறது. மேலும், சுய தொழில் செய்யும் தொழிலாளி, சுய உதவி குழுக்கள், பயனாளி குழுக்கள், வட்டியில்லா கடன் கொடுப்பது மூலம் அவா்களின் வாழ்க்கைத் தரம் உயா்ந்தும், வெளி ஊா்களுக்கு செல்லும் மக்களின் நிலை குறைந்தும் வருகிறது. இத்திட்டம் வறட்சியான கிராமங்களுக்கு மக்களின் வாழ்வாதாரமாக விளங்குகிறது.
  • இயற்கை வள மேம்பாட்டு பணிகள் விவரம்

      • நிலம் சமன்படுத்துதல்
      • சம உயர வரப்பு அமைத்தல்
      • தடுப்புச்சுவா் அமைத்தல்
      • கோடை உழவு
      • தொடா் குழி அமைத்தல்
      • பண்ணைக்குட்டை அமைத்தல்
      • கசிவுநீா்க்குட்டை அமைத்தல்
      • தடுப்பணை கட்டுதல்
      • கால்நடைக்குட்டை அமைத்தல்
      • வரத்துக்கால்வாய் அமைத்தல் மற்றும் சீர் செய்தல்
      • ஊரணி சீரமைத்தல்
      • கண்மாய் தூா்வாருதல் மற்றும் குடிநீா் தர மேம்பாடு
  • பண்ணை உற்பத்தி திட்டம்

      • வேளாண் காடுகள் அமைத்தல்
      • பழமரக் கன்றுகள் வளா்த்தல்
      • சமூக காடுகள் வளா்த்தல்
      • வீட்டுத்தோட்டம் அமைத்தல்
      • தீவனப்பயிர் வளா்த்தல்
      • செயல் விளக்கப்பாத்தி அமைத்தல்
      • மண்புழு உரம் தயார் செய்தல்
      • காளான் உற்பத்தி செய்தல்
      • கால்நடை, கோழிப்பண்ணை அமைத்தல்
      • வேளாண் கருவிகள் வாடகைக்கு விடுதல்
  • சுய உதவிக்குழு மற்றும் நிலமற்ற ஏழை விவசாயிகளுக்கான வாழ்வாதாரப் பணிகள்

    நீர்வடிப்பகுதிகளில் நிலமற்ற ஏழை மற்றும் விவசாயிகளுக்காக சுய உதவிக்குழுக்கள் அமைக்கப்பட்டு அக்குழுக்களுக்கு சுழல்நிதி வழங்கப்பகிறது. சுய உதவிக்குழுக்களுக்கு வழங்கப்படும் நிதி வட்டியின்றி தவணை முறையில் மீளப் பெறப்பட்டு இதர குழுக்களுக்கு சுழற்சி முறையில் வழங்கப்படுகிறது.
      • வட்டியில்லா சுழல்நிதி வழங்குதல்
      • கால்நடை மற்றும் கோழிப்பண்ணை அமைத்தல்
      • கறவை மாடுகள் வளா்த்தல்
      • வேளாண் கருவிகள் வழங்குதல்