Close

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம், பெரம்பலூர் மாவட்டம் எண்.132/ஏ3 – பெரியார் தெரு, துறைமங்கலம், ( 3 – ரோடு) ,பெரம்பலூர் 621 212

  • துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

இயக்குநர் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் ,04328296267,dtcppblr@gmail.com

  • நிர்வாகஅமைப்பு

Administrative structure tamil

  • நோக்கங்கள்

1. திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டைஆகியமாவட்டங்களை இணைத்து ஒருங்கிணைந்த மண்டல திட்டம் தயாரித்தல்.
2. நகர்ப்புறம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளின் மேம்பாட்டு வளர்ச்சிக்காக முழுமைதிட்டம் தயார் செய்தல்.
3. முழுமைதிட்டம் அங்கீகரிக்கப்பட்ட பிறகு நகர்ப்புறம் சார்ந்த வளர்ச்சிக்காக விரிவு அபிவிருத்தி திட்டம் செயல்படுத்தல்.
4. திட்ட அனுமதியில் உள்ளாட்சி அமைப்புகளுக்கு உதவுதல் மற்றும் சட்டத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி நடவடிக்கை மேற்கொள்ளுதல்.

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்

1) முழுமை திட்டம்
ஒரு முழுமைத்திட்டம் என்பது எதிர்கால வளர்ச்சிக்கு வழிகாட்டும் மாற்றங்களை உள்ளடக்கிய நீண்ட கால திட்டமிடலுக்கான சட்டப்பூர்வ ஆவணமாக அமைகிறது. கட்டடங்கள், சமூக அமைப்பு மற்றும் அவற்றின் சுற்றுச்சூழல் ஆகியவற்றிற்கிடையே தொடர்பை ஏற்படுத்துவதுதான் முழுமைத் திட்டம் என்பதாகும். ஒரு பகுதியின் மக்கள் தொகை, பொருளாதாரம், வீட்டு வசதி, போக்குவரத்து வசதி, சமூக வசதிகள் மற்றும் நிலப்பயன்பாடு ஆகியவற்றை ஆய்வு செய்தல், பரிந்துரைகள் செய்தல் மற்றும் உத்தேசங்கள் தயாரித்தல் போன்றவற்றை உள்ளடக்கியது தான் முழுமைத் திட்டமாகும். இது பொது மக்களின் கருத்துக்கள், அளவீடு செய்தல், திட்டமிடல் முன்னெடுப்புகள், தற்போதுள்ள வளர்ச்சி, வளர்ச்சியின் தன்மைகள், சமூக மற்றும் பொருளாதார நிலவரங்கள் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டதாகும். ஒரு நகர்ப்புற சுற்றுச்சூழலை எவ்வாறு உருவாக்கம் செய்ய வேண்டும் என்பதில் முழுமைத் திட்டங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

முழுமைத் திட்டங்களின் கீழ், தற்போது உள்ள 7 விழுக்காடு நிலப்பரப்பிலிருந்து 22 விழுக்காடாக அதிகரிக்க வேண்டும் எனும் அரசின் கொள்கையை நிறைவேற்றும் வகையில் நகர் ஊரமைப்பு இயக்ககம் செயல்பட்டு வருகிறது. நகரப்பகுதியின் வளர்ச்சி அதன் எல்லையை அடுத்து அமையும் பகுதிகளிலும் தாக்கத்தை ஏற்படுத்துவதால் தற்போதுஉள்ள123 முழுமைத் திட்டப் பகுதிகளை விரிவாக்கம்செய்வதன் வாயிலாகவும், முழுமைத் திட்டம் தயாரிப்பதற்காகப் புதியப் பகுதிகளைஅறிவிப்பு செய்வதன் வாயிலாகவும் முழுமைத் திட்டத்தின் கீழ் வரும் நிலப்பரப்பு அதிகரிப்பு செய்யப்படுகிறது.

பெரம்பலூருக்கான முழுமை திட்டம் தயாரிப்பதற்காக, 190.24 ச.கி.மீபரப்பளவுஉள்ளடக்கியபெரம்பலூர் கூட்டு உள்ளூர் திட்ட பகுதியினை அறிவிப்பு செய்து தமிழ்நாடு அரசிதழ் எண்: பாகம் –II பகுதி 2, பாகம் எண்: நாள்: 22.11.2006-ல், பிரசுரம்செய்யப்பட்டு, தமிழ்நாடுநகர் ஊரமைப்பு சட்டம் 1971, பிரிவு 10(4)-ன்கீழ் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும்உத்தேசபெரம்பலூர் கூட்டு உள்ளூர் திட்ட குழுமமானது, 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி1,06,548மக்கள் தொகையுடன்பெரம்பலூர் நகராட்சி மற்றும் அதனை சுற்றி உள்ள 14 வருவாய் கிராமங்களை உள்ளடக்கியது.

அதன்பிறகு, மேற்படி அறிவிப்புசெய்யப்பட்ட முழுமைதிட்ட பகுதியிலன்வளர்ச்சி 2022 பிப்ரவரி முதல்வாரத்தில் களஆய்வுசெய்யப்பட்டது. அதில் 14 கிராமங்களில் கீழக்கரை, செங்குணம், நொச்சியம், கல்பாடி வடக்கு, கல்பாடி தெற்கு, சித்தலி மேற்கு, சித்தலிகிழக்கு, பேரளி வடக்கு, பேரளி தெற்கு ஆகிய 9 கிராமங்கள் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி அடையாமல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. அதன்அடிப்படையில்கடந்த 10 ஆண்டுகளாக நகராட்சி மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் தொழில்துறை பயன்பாடு மற்றும் நிறுவன பயன்பாட்டில் பெரிய முன்னேற்றங்கள்ஏதும் இல்லை.

எனவே, பெரம்பலூர்கூட்டு உள்ளூர் திட்ட குழுமம் பகுதியின் எல்லையை மறுவரையறை செய்து மறுஅறிவிப்பு செய்யும் பொருட்டு, பெரம்பலூர் நகராட்சி, அரனாரை வடக்கு உட்படபகுதி, அரனாரை தெற்கு, பெரம்பலூர் வடக்கு (pt), எளம்பலூர் &துறைமங்கலம் (pt) கிராமங்கள் உள்ளடக்கிய 67.13 சதுரகி.மீ. திருத்தியபரப்புடன்அரசுக்குமறுஅறிவிப்பு செய்ய உத்தேசம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இதற்கிடைப்பட்ட நேரத்தில், இரண்டாம் நிலைதரவாகதண்ணீர் வழங்கல், போக்கு வரத்து, புள்ளியியல் மற்றும் பொருளாதாரம், வேளாண்மை, வனப்பகுதி மற்றும் பலவற்றை முழுமை திட்டம் தயாரிப்பதற்காக அந்தந்த துறைகளிடமிருந்து சேகரிக்கப்பட்டுள்ளது.மேலும், நிலையிலுள்ளநிலபயன்பாட்டுவரைபடம்தயாரிக்கும்பணிநடைபெற்றுவருகிறது.

2) மண்டல திட்டம்
மண்டலத்திட்டம் என்பது கிராமம் முதல் நகரம் வரை பல்வேறு நிலைகளில் துறைசார். இடம் சார்ந்த மற்றும் பொருளாதார இலக்குகளை ஒருங்கிணைத்து உறுதியான செயல்பாட்டின் மூலம் அறிவியல் முறையில் மற்றும் திட்டமிடப்பட்ட வளர்ச்சியை அடைவதற்கான ஒரு செயல்முறையாகும். இடம் சார்ந்த மற்றும் துறைசார் வளர்ச்சி, நில உபயோக முறை மற்றும் அதன் பயன்பாட்டின் அடிப்படையில் வகைப்படுத்துவதன் மூலம் ஒழுங்கு படுத்தப்படுகிறது.

இயற்கையான அல்லது மனிதனால் உருவாக்கப்பட்ட அம்சங்கள்/அளவுருக்கள், அதாவது மக்கள்தொகை, பொருளாதாரச் சார்பு, போக்குவரத்து இணைப்புகள், நிர்வாகம், சமூக இணைப்புகள்,சுற்றுச்சூழல் அம்சங்கள் (காடுகள், வனவிலங்குகள் அல்லது காலநிலை), இயற்கையமைவு, முதலீடுகள். வளம், போன்ற கூறுகளைக் கருத்தில் கொண்டு மண்டலத்தின் எல்லைகள் வரையறுக்கப்படுகின்றன.

மண்டலத் திட்டங்களைத் தயாரிப்பதற்காக மாநிலம்முழுமைக்கும்புவியியல்அமைப்பையும்12 மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.
திருச்சிராப்பள்ளி, அரியலூர், கரூர், பெரம்பலூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களைஉள்ளடக்கிய மண்டல திட்டங்கள் தயாரிக்கும் பொருட்டு,அரசாணை எண். 111,வீட்டுவசதிமற்றும்நகர்ப்புறவளர்ச்சித்துறைநாள்: 04.10.2021மூலம்ஓப்புதல்அளிக்கப்பட்டு, திட்டம்தயாரிக்கும்பணிநடைபெற்றுவருகிறது. இதன் Nodal office ஆகதிருச்சிராப்பள்ளி மாவட்ட அலுவலகம் நியமனம் செய்யப்பட்டுள்ளது.

3) விரிவு அபிவிருத்தி திட்டம்
முழுமைத் திட்டங்களின் நில உபயோகத்திற்கு தொடர்புடைய வகையில் நகரப்பகுதிகளுக்கான நுண்அளவிலான நடவடிக்கைத் திட்டமே விரிவு வளர்ச்சித் திட்டமாகும். இத்திட்டம் நகர்ப்புற பகுதிகளில் மேற்கொள்ளப்படுகின்றன, பூங்கா, விளையாட்டு மைதானம், சிறு சாலை இணைப்புகள், முறையான போக்குவரத்துக்கான சாலைகள், வணிகம், தொழிற்சாலைகள் மற்றும் பொது பயன்பாட்டு ஒதுக்கீடுகள் மற்ற பிற குறிப்பான பயன்பாட்டிற்கான விரிவான பகுதி வரையறை செய்தல் போன்றவற்றை கொண்டதாகவும் முழுமைத்திட்ட வரம்பிற்குள்அமையும் வகையில் சமச்சீரான வளர்ச்சிக்கு உதவுவதற்கும் இத்திட்டம் தயாரிக்கப்படுகிறது.

பெரம்பலூர் முழுமைத்திட்டம் அங்கீகரிக்கப்படுமாயின், எதிர்கால வளர்ச்சிக்கு அதிக வாய்ப்புள்ள நகரமாக கண்டறியப்பட்டு, நகர்ப்புற வளர்ச்சியை மையமாக கொண்ட விரிவான அபிவிருத்தி திட்டம் தயாரிக்கப்படும்.

4) ஒற்றைச் சாளரமுறை
மனைப்பிரிவு, கட்டிடம் மற்றும் நிலப்பயன் மாற்ற விண்ணப்பங்களுக்கு ஒப்புதல் வழங்கும்பொருட்டு ஒற்றைச் சாளர முறை இத்துறையால் ஏற்படுத்தப்பட்டுவருகிறது.வெளிப்படைத் தன்மையுடனான பணி செய்வது, பயனாளர்கள் தங்களின் விண்ணப்பங்களை எளிதாக இணையதளம் மூலம் செயல்படுத்தும் ஒற்றைச் சாளர முறை பொது மக்கள் பயன்பெறும் வகையில் அமைந்துள்ளது மட்டுமல்லாமல் ஆவணங்களை மின்னணு முறையில் வைத்திருப்பதால் அதிகார அமைப்புகளின் எதிர்காலபயன்பாட்டிற்கும் உகந்ததாகவும் அமையும்.

5) அதிகாரப்பகிர்தல்
1) அரசாணை. எண்: 265, வீட்டுவசதிமற்றும்நகர்ப்புறவளர்ச்சித்துறை [UD4(1)]நாள்: 21.12.2022-ன்படி, 8 குடியிருப்புகள் (ஸ்டில்ட் + 3 தளம்) அல்லது (G +2), 10,000 சதுர அடி பரப்பளவில் அமையும் குடியிருப்பு கட்டிடங்களுக்கு அனுமதியளிக்கவும், 2000 சதுர அடி (தரைதளம் + 1 தளம்) வரையிலான வணிக கட்டிடங்களுக்கு ஒப்புதல் அளிக்கவும் சம்மந்தப்பட்ட உள்ளாட்சிகளுக்கு அதிகாரபகிர்வு வழங்கப்பட்டுள்ளது.

2) அரசாணை. எண்: 289, வீட்டுவசதிமற்றும்நகர்ப்புறவளர்ச்சித்துறை(UD 4 – 1) நாள். 16.12.2010 மற்றும்நகர் ஊரமைப்பு சட்டம், 1971 இன்பிரிவு 47-A(4)(d), 56 மற்றும் 57இன்கீழ்விதிமீறியகட்டிடங்கள்மீதுநடவடிக்கைமேற்கொள்ளஉள்ளாட்சிஅமைப்புக்களுக்குஅதிகாரம்உள்ளது .

6) அனுமதியற்ற கல்வி நிலைய கட்டிடங்கள் வரன்முறைப்படுத்துதல்
திட்டமில்லா பகுதிகளில்01.01.2011-ற்கு முன்பாக கட்டப்பட்டு இயங்கி வரும் அனுமதியற்ற கல்வி நிறுவனக் கட்டடங்களை வரன்முறைப்படுத்த அரசாணை (நிலை) எண்.76, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை, நாள் 14.06.2018 வெளியிடப்பட்டது. அதன் அடிப்படையில் விதிகளுக்கு உட்பட்டு கல்வி நிறுவனங்கள் வரன்முறைபடுத்தப்பட்டு உரிய உத்தரவுகள் வழங்கப்படுகிறது.

7) அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகள் வரன்முறைப்படுத்துதல்
அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த ஒரு சிறப்புத் திட்டம் 04.05.2017 முதல் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டம் அரசாணை எண்.78, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(3)) துறை, நாள்.04.05.2017 மற்றும் அரசாணை எண்.172, வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி (UD4(3)) துறை, நாள்.13.10.2017- ன்படி20.10.2016-க்கு முன்னர் அமைக்கப்பட்ட அனுமதியற்ற மனைகள் மற்றும் மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த வழிவகுக்கிறது. இதனால் அடிப்படை கட்டமைப்பு வசதிகள், குடிநீர் வசதிகள் போன்றவை உள்ளாட்சிகள்வழங்கமுடியும்.