கால்நடை பராமரிப்பு
-
பெயர் மற்றும் துறையின் முகவரி :
மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத் துறை, பெரம்பலூர் – 621212.
-
துறைத்தலைவர் தொடர்பு எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி :
மண்டல இணை இயக்குனர், கால்நடை பராமரிப்புத் துறை, கால்நடை மருந்தக வளாகம், பெரம்பலூர்.
செல் நம்பர் – 9445001205 இ-மெயில் – rjdahpblr@gmail.com. -
நிர்வாக அமைப்பு
-
பொருள்
- அயலின் மற்றும் கலப்பின உறைவிந்தை பயன்படுத்தி செயற்கைமுறை கருவூட்டல் செய்து உள்ளூர்
- பசுக்களின் தரத்தையும் முர்ரா இன உறைவிந்தைப் பயன்படுத்தி எருமைகளின் தரத்தையும் உயர்த்துவது.
- உள்நாட்டின் கால்நடைகளை அவற்றின் வாழ்விடங்களிலேயே பாதுக்காப்பு மற்றும் அவற்றின் எண்ணிக்கையைப் பெருக்குவது.
- கால்நடை மற்றும் கோழி இனங்களின் உற்பத்தித்திறனைப் பெருக்கி அதன் மூலம் பால் முட்டை மற்றும் இறைச்சி உற்பத்தியை அதிகரிப்பது.
- கால்நடைகளுக்கும் கோழி இனங்களுக்கும் தேவையான காலத்தில் நவீன மருத்துவ சேவை அளிப்பது
- தடுப்பூசிகள் வாயிலாக நோய்களை தடுத்து அனைத்துக் கால்நடைகளின் உடல்நலனை உறுதிப்படுத்துவது.
- கிராமப்புற ஏழைகளின் பொருளாதார நிலையை உயர்த்தும் நோக்குடன் மத்திய மற்றும் மாநில அரசுகளின் பல்வேறு திட்டங்களை செயல்படுத்துவது.
- கால்நடைகள் மூலம் மனிதர்களுக்குப் பரவும் நோயிகளைக் கண்டறிந்து கட்டுபடுத்துவது.
- நவீன கால்நடை பராமரிப்பு முறைகள் பற்றி பொதுமக்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவது.
- அடிப்படை மற்றும் நவீன கால்நடை பராமரிப்பு முறைகள் பற்றிய பயிற்சியை விவசாயிகளுக்கு அளிப்பது.
-
தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் இலக்கு குழுக்கள் திட்டங்களை செயல்படுத்த தேவையான ஆவணங்கள்
-
கோழிப்பண்ணை அபிவிருத்தி திட்டம்
தமிழக அரசு கோழிப்பண்ணை தொழிலை ஊக்குவிக்கும் வகையில் கோழிப்பண்ணை அபிவிருத்தித்திட்டம் செயல்படுத்த்பட்டு வருகிறது கோழிப்பண்ணை அமைக்க ஆகும் செலவில் 25 சதவிகிதம் தொகை ரூ.26875௦ ஐ மானியமாக வழங்குகிறது. இதை தவிர நபார்டு வங்கியின் கோழி துணிகர முதலீட்டு நிதியிலிருந்தும் 25 சதவிகிதம் ரூ.26875௦ ஐ மானியமாக வழங்கப்படுகிறது. மீதமுள்ள 5௦0 சதவிகிதத் தொகை பயனாளிகள் தங்களின் சொந்த செலவிலோ அல்லது வங்கி கடனாகவோ பெற்றுக்கொள்ளலாம்.
குடியிருப்பு பகுதியில் கோழிப்பண்ணை அமைக்க கூடாது கோழிப்பண்ணை அமைக்க போதுமான இடவசதி மற்றும் சாலை வசதி இருக்க வேண்டும்.. வங்கியில் கடன் பெற வங்கியில் கேட்கப்படும் ஆவணங்கள் இருக்க வேண்டும்.
தேவையான ஆவணங்கள் : பட்டா சிட்டா, வங்கி கணக்கு எண், ஆதார் அட்டை, குடும்ப அட்டை.
-
கால்நடை காப்பீடு திட்டம்
விவசாயிகள் தாங்கள் வளர்க்கும் கால்நடைகள் திடீரென நோய்ற்றாலோ அல்லது இயற்கை சீற்றத்தினால் இறந்துவிட்டாலோ அதனை ஈடுசெய்யும் விதமாக கால்நடைகளுக்கு காப்பீடு திட்டம் நடைமுறைபடுத்தப்படுகிறது. உள்நாட்டு மற்றும் கலப்பினவகை கறவைப் பசுக்கள் மற்றும் எருமைகள் ஆகிய கால்நடைகள் அதிகபட்சமான சந்தை மதிப்பை இழப்பீடாக பெரும் வகையில் காப்பீடு செய்யப்படுகின்றன சந்தையின் அதிகபட்ச விலையினை கால்நடை மருத்துவர் மற்றும் காப்பீடு நிறுவனம் மூலம் காப்பீடு செய்து வழங்கப்படும். காப்பீடு கட்டணத்தில் ஒரு பகுதியை மத்திய அரசு மானியமாக வழங்குகிறது.
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை, குடும்ப அட்டை.
-
விலையில்லா வெள்ளாடுகள் வழங்கும் திட்டம்
கிராம புறங்களில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பெண்களின் வாழ்கை தரத்தை உயர்த்தும் பொருட்டு தமிழக அரசால் கொண்டுவரப்பட்டது . இத்திட்டத்தில் ஏழ்மையிலும் ஏழ்மையான கிராமப்புறப் பெண்களுக்கு விலையில்லா செம்மறியாடுகள் / வெள்ளாடுகள் வழங்கபடுகிறது. இத்திட்டத்தில் ஒரு பயனாளிக்கு நான்கு ஆடுகள் அதனுடன் காப்பீடு, போக்குவரத்து, கொட்டகை அமைத்தல் பயிற்சி ஆகியவை வழங்கப்படும்.
இத்திட்டம் பெண்களுக்கு மட்டுமே வழங்கபடுகிறது. மேலும் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், சொந்த நிலம் இல்லாதவர்களுக்கு முன்னுரிமை வழங்கபடுகிறது.
தேவையான ஆவணங்கள்: ஆதார் அட்டை. குடும்ப அட்டை. முன்னுரிமை சான்று.
-
ஊரகப் புறக்கடை கோழி வளர்ப்புத்திட்டம்
வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள தாழ்த்தப்பட்ட மற்றும் பிற வகுப்பை சார்ந்த பெண்கள் பயனாளியாக இடம்பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள்.
இத்திட்டம் பெண்களுக்கு மட்டுமே வழங்கபடுகிறது. மேலும் ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்டவர்கள், மாற்றுதிரனாளிகள், முதிர்கன்னிகள், திருநங்கைகள் ஆகியோருக்கு முன்னுரிமை வழங்கபடுகிறது.
ஒரு பயனாளிக்கு நான்கு வார வயதுள்ள 2௦௦0 நாட்டுரக கோழிக்குஞ்சுகள் தீவனதட்டுகள் மற்றும் இரவு தங்கும் கூண்டும் 100 சதவிகித மானியத்துடன் வழங்கப்படும்.
தேவையான ஆவணங்கள் : ஆதார் அட்டை, குடும்ப அட்டை, வங்கி கணக்கு எண் புகைப்படம்.
-