Close

நீர்வளத்துறை

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

நீர்வளத்துறை, மருதையாறு வடிநில கோட்டம், அரியலூர்

  • துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

செயற்பொறியாளர், நீவது, மருதையாறு வடிநிலக்கோட்டம், அரியலூர், 04329–222079, eemarudaiyaru@yahoo.com

  • நோக்கங்கள்

இக்கோட்ட கட்டுப்பாட்டில் பெரம்பலூர் மாவட்டத்தில் மருதையாறு, வெள்ளாறு வலது கரை (பகுதி), சின்னாறு, கல்லாறு, சுவேதா நதி ஆகிய ஆறுகள் உள்ளன. மேலும் இந்த ஆறுகளில் கலக்கும் சிற்றாறுகளின் குறுக்கே பெரம்பலூர் மாவட்டத்தில் 33 அணைக்கட்டுகள் மற்றும் 73 முறைசாரா ஏரிகளும், அதன் வரத்து வாரிகள் மற்றும் உபரி நீர் வாரிகள் 65 கிராமங்களில் அமைந்துள்ளது. மேற்குறித்த ஆறுகள் மற்றும் ஏரிகளை ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்தல், மழைக்காலங்களில் பாதிப்புகள் குறித்து தகவல் சேகரித்து கொடுத்தல், நீர்பங்கீடு காலத்தில் தண்ணீர் தடையின்றி செல்வதற்கும், தண்ணீர் சிக்கனமாக பயன்படுத்த உதவி புரிதல், உள்ளுர் விவசாயிகளுடன் ஒருங்கிணைந்து நீர்நிலைகளை சீரமைத்தல் / மேம்பாடு செய்தல், புனரமைத்தல் ஆகிய பணிகள் இத்துறையின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் 
வ.  எண் பணியின் பெயர் அரசாணை எண்.  / மதிப்பீட்டுத் தொகை

(ரூ. இலட்சம்)

நபார்டு
1 பெரம்பலூர் மாவட்டம்,  பெரம்பலூர் வட்டம், கல்பாடி கிராமம் கல்பாடி ஓடையின் குறுக்கே தடுப்பணை அமைக்கும் பணி. அரசாணை (2டி) எண். 4 டபிள்யு.ஆர் (எஸ்.2) துறை/ நாள், 07.01.2022 /

ரூ.342.00 இலட்சம்

2 பெரம்பலூர் மாவட்டம்,  வேப்பந்தட்டை வட்டம், பிரம்மதேசம் கிராமமம் சின்னாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும்  பணி. அரசாணை (4டி) எண். 4 / நீவ (எஸ்.2) துறை, நாள் 07.01.2022

ரூ.1000..00 இலட்சம்

3 பெரம்பலூர் மாவட்டம்,  வேப்பந்தட்டை வட்டம், நூத்தாப்பூர் கிராமமம்  நெற்குணம் ஏரியின் 8 வழங்கு வாயக்கால்கள், வடிகால்கள் மறு சீரமைப்பு பணி. அரசாணை (4டி) எண். 27 / நீவ (எஸ்.2) துறை, நாள் 28.04.2022

ரூ.340..00 இலட்சம்

4 பெரம்பலூர் மாவட்டம்,  பெரம்பலூர் வட்டம், கோனேரி ஆற்றின் பச்சைமலை மற்றும் அதன் இணைப்பு ஏரிகளில்  மறு சீரமைப்பு அமைக்கும் பணி. அரசாணை (4டி) எண். 35 / நீவ (எஸ்.2) துறை, நாள் 02.05.2022

ரூ.470..00 இலட்சம்

5 பெரம்பலூர் மாவட்டம்,  பெரம்பலூர் வட்டம், கோனேரிபாளையம்  கிராமமம் கோனேரி ஆற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கும்  பணி. அரசாணை எண். 75 / நீவ (எஸ்.1) துறை, நாள் 16.08.2022

ரூ.372..00 இலட்சம்

மாநில நிதி
1 பெரம்பலூர் மாவட்டம்,  ஆலத்தூர் வட்டம், கொட்டரை கிராமத்தில் மருதையாற்றின் குறுக்கே நீர் தேக்கம் அமைக்கும் பணி (கட்டுமான பணி) அரசாணை(நிலை) எண். 25 பொப (என்2) துறை/ நாள்,25.01.2016  திருத்திய நிர்வாக அரசாணை (நிலை) எண். 16 பொப (என்2) துறை/ நாள்,06.01.2020

ரூ.6750..00 இலட்சம்

திருத்திய மதிப்பீடு ரூ.5670..00 இலட்சம்

2 பெரம்பலூர் மாவட்டம்,  பெரம்பலூர் வட்டம், குறும்பலூர் கிராமமம் மடத்துவாரியின் குறுக்கே தடுப்பணை அமைககும்  பணி. அரசாணை(நிலை) எண். 9 பொப (எஸ்.2) துறை/ நாள், 07.01.2022

ரூ.133.95 இலட்சம்