Close

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து

  • அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து , பெரம்பலூர் 621212

  • துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி

துணை இயக்குநர் சுகாதாரப் பணிகள் அலுவலகம், பெரம்பலூர், dphpmb@nic.in

  • நோக்கங்கள்

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறை பல்வேறு தேசிய மற்றும் மாநில சுகாதார திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இந்த திணைக்களம் தொற்று நோய்கள் ஏற்படுவதைத் தடுக்கும் நடவடிக்கைகளைத் திட்டமிட்டு செயல்படுத்துகிறது, இதன் மூலம் மாநிலத்தில் நோயுற்ற இறப்பு மற்றும் இயலாமையின் சுமையைக் குறைக்கிறது.

பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்து துறையால் நடைமுறைபடுத்தப்படும் திட்டங்கள் மற்றும் சேவைகள்

      • ஆரம்ப சுகாதார நிலையங்கள் மூலம் மருத்துவ சேவைகளை வழங்குதல்
      • மகப்பேறு மற்றும் குழந்தை நல சேவைகள்
      • குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல்
      •  தொற்று நோய்கள் தடுப்பு மற்றும் கட்டுப்படுத்துதல்
      • திசையன் மற்றும் நீரினால் பரவும் நோய்களைத் தடுத்தல்  மற்றும் கட்டுப்படுத்துதல்
      • எச்.ஐ.வி / எய்ட்ஸ் உள்ளிட்ட பால்வினை நோய்களைத் தடுப்பது   மற்றும் கட்டுப்படுத்துதல்
      • உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மற்றும் புற்றுநோய் போன்ற தொற்றா நோய்களைக் கட்டுப்படுத்துதல்
      • தொழுநோய் மற்றும் காசநோய் ஒழிப்பு
      • அயோடின் குறைபாட்டை கட்டுப்படுத்துதல் மற்றும் திட்டத்தை  செயல்படுத்துதல்
      •  புகையிலை கட்டுப்பாட்டு திட்டத்தை செயல்படுத்துதல்
      • அங்கன்வாடி மையங்களில் 0-5 வயதிற்குட்பட்ட குழந்தைகளுக்கும், அரசு  மற்றும் அரசு உதவி பெரும்  பள்ளிகளில் பயிலும்   6-18 வயதிற்குட்பட்ட மாணவ மாணவியருக்கு மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளுதல்
      • பிறப்பு மற்றும் இறப்பு பதிவு கண்காணிப்பு
      • சுற்றுச்சூழல் சுகாதாரம்
      • சமூகத்தில் சுகாதாரம் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்துதல்
  • தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள் / இலக்கு குழுக்களின் திட்டங்கள் / திட்டங்களைப் பெறுவதற்கான தேவையான ஆவணங்கள்

மக்களை தேடி மருத்துவம் – MTM

நோக்கம்

    •  18 வயதுக்கு மேற்பட்ட மக்கள் அனைவருக்கும் தொற்றாத நோய்கான (உயர் இரத்த அழுத்தம், நீரிழிவு மார்பகம் புற்றுநோய் கருப்பை வாய் மற்றும் வாய் புற்று நோய்கள்) அறிகுறிகள் கண்டறிதல்.
    • தொற்றா நோய்களினால் ஏற்படும் பாதிப்புகளைத் தடுப்பதற்கு, MTM பணியாளர் ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர் (MLHP) மூலம் துணை சுகாதார மையம் அளவில் பரிசோதனை மேற்கொள்தல். சிகிச்சையளிப்பது.
    • இயன்முறை சிகிச்சை தேவைப்படும் நோயாளிகளை கண்டறிந்து அவர்களுக்கு வீட்டிலேயே சென்று தேவைப்படும் இயன்முறை சிகிச்சை வழங்குதல்.
    • மக்களை தேடி மருத்துவம் மூலம் 45 வயதுக்கு மேற்பட்ட தொற்றா நோயாளிகளுக்கு நோய் கட்டுபாட்டில் இருப்பின் அவர்களுக்கு தொற்றா நோய் களபணியாளர்கள் மூலம் வீடு தேடி மருந்து வழங்குதல்.

டாக்டர்.முத்துலட்சுமி ரெட்டி மகப்பேறு நிதிஉதவி திட்டம் மற்றும் பிரதான் மந்திரி மாத்ரு வந்தனா யோஜனா மகப்பேறு நிதிஉதவி திட்டம் (PMMVY)  

நோக்கம்

    •  குழந்தை இறப்பு விகிதம் மற்றும் மகப்பேறு மரண விகிதத்தை குறைத்தல்
    • கர்ப்பிணி தாய்மார்களை மருத்துவமனை பிரசவத்திற்கு ஊக்குவித்தல்.
    • கர்ப்பிணி தாய்மார்களின் ஊட்டச்சத்துக்கான செலவுகளைச் சந்திக்க நிதிஉதவி மற்றும் ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல்.
    • குடும்பக் கட்டுப்பாடு முறைகளை பின்பற்றுவதை ஊக்குவித்தல்குழந்தைகளுக்கு தடுப்புசி வழங்குதல்

பணப்பயன் விவரம்

    •  நிபந்தனைகளை பூர்த்தி செய்யும் தாய்மார்களுக்கு ரொக்கப்பலன் ( 5 தவணைகளில் ரூ.14,000) மற்றும் ரூ.2000/- மதிப்புள்ள 2 ஊட்டச்சத்து பெட்டகம் வழங்குதல்.
    • முதல் முறை கர்ப்பத்திற்கு PMMVY திட்டத்தின் கீழ் ,  நிதிஉதவி வழங்கப்படும்.
    • இரண்டு மற்றும் அதற்கு மேற்பட்ட கர்ப்பத்திற்கு டாக்டர்.முத்துலட்சுமி மகப்பேறு நிதியுதவி திட்டத்தின்  கீழ் நிதி உதவி வழங்கப்படும்.

தகுதி : 19 வயதுக்குமேற்பட்டகர்ப்பிணிகள். வறுமை கோட்டிற்கு கீழ் இருக்க வேண்டும்.

தேவையான ஆவணங்கள் : தொலைபேசி எண், கர்ப்பிணி தாய் மற்றும் கணவரின் ஆதார், வயதுக்கான சான்று, ஆதார் இணைக்கப்பட்ட வங்கிக் கணக்கு விவரம்.சுகாதார செவிலியரிடம் PICME எண் பெற்றிருக்க வேண்டும்.

கண்ணொளி காப்போம் திட்டம் – KKT

நோக்கம் : மாணவர்களுக்கான பார்வை பரிசோதனை மேற்கொண்டு, கண்ணாடி வழங்கி ஒளிவிலகல் குறையினை சரிசெய்தல்

பயனாளிகள்: அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 6-ஆம் வகுப்பு முதல்  12-ஆம் வகுப்பு வரையிலான பள்ளி மாணவர்களுக்கு பார்வை பரிசோதனை செய்து  ஒளிவிலகல் பிழை உள்ள மாணவர்களுக்கு கண்ணாடிகள் வழங்கப்படும்.

கலைஞரின் வரும் முன் காப்போம் திட்டம்

நோக்கம்

    • அரசு மற்றும் அரசால் அங்கீகரிக்கப்பட் மருத்துவமனைகளின்சிறப்பு மருத்துவர்கள் கொண்டுதொலைதூரகிராமத்தில்சிறப்புமருத்துவமுகாம்களைநடத்துதல்.
    • சிறப்பு,  பொது மருத்துவம், எலும்பியல், மகப்பேறு, கண், குழந்தை , அறுவை சிகிச்சை, தோல்,  தொழுநோய், ஆகிய சிறப்பு மருத்துவர்களும்,  ஆயுஷ், பல், அறுவை சிகிச்சை மருத்துவ நிபுணர்களும் கலந்துக்கொண்டு பயனாளிகளுக்கு பரிசோதனை மேற்கொள்வர்.
    •  இரத்தம், சிறுநீர் போன்ற ஆய்வக பரிசோதனைகளும், ஊடுகதிர்(Scan), ECG சேவைகளும் வழங்கப்படும்.
    • முதலமைச்சரின் காப்பீட்டு திட்டத்தில் சேர ஆவண செய்யப்படும்.தேவைப்படும் நபர்களுக்கு மேல் சிகிச்சைக்கு பரிந்துரை செய்யப்படும்

பயனாளிகள் : முகாம் நடைபெறும் கிராமம் மற்றும் அருகிலுள்ள கிராம பொது மக்கள் பயன்பெறுவர்.

ராஷ்ட்ரிய பால் ஸ்வஸ்திய காரியகாரம் (RBSK)

நோக்கம்

  • பிறக்கும்போதுநோய்,பிறக்கும்போது உடலில் குறைபாடு, ஊட்டச்சத்து குறைபாடுகள்,இயலாமைஉள்ளிட்டவளர்ச்சிதாமதங்கள்என 4 ‘D’களைகண்டறிதல்,
  • பிறந்த குழந்தை முதல் 18 வயது நிரம்பிய பிள்ளைகளை மருத்துவமனை, வீடு, அங்கன்வாடி மற்றும் பள்ளிகளில் பரிசோதனை செய்தல்.
  • நோயுற்ற தன்மையைக் குறைப்பதன் மூலம் குழந்தைகளின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துதல்.
  • அரசு மருத்துவமனையில் உள்ள மாவட்ட ஆரம்ப தலையீடு மையம் (DEIC) மூலம் குழந்தைகளிடம் கண்டறியப்படும் குறைகள் சரிசெய்ய மருத்துவ ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.
பிறப்பு-இறப்பு பதிவு

நோக்கம் :பிறப்பு, இறப்பு மற்றும் இறந்து பிறந்த நிகழ்வுகளை விடுபடாமல் பதிவு செய்தல், பிறப்பு இறப்பு நிகழ்வுகளின் பதிவுகளை 100% உறுதிசெய்தல்.

பயன்கள்

  • 01.01.2018 முதல் பதிவு செய்த பறிப்பு இறப்பு சான்றிதழ்களை crstn.org    என்ற வலைதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
  • பெயரில்லாத பிறப்பு சான்றிதழ் பயனற்றது.
  •  எனவே, பிறப்பு பதிவு செய்த ஒரு வருடத்திற்குள் பெற்றோரின் ஒப்புதலுடன் குழந்தையின் பெயரினை பதிவு செய்து கொள்ளவேண்டும்..
  •  01.01.2000-க்கு முன்னர் பதிவு செய்த மற்றும் 15 ஆண்டுகள் கால அவகாசம் முடிவு பெற்ற அனைத்து பெயரில்லா பிறப்பு சான்றிதழில் பெயரினை பதிவு செய்ய 31.12.2024 வரை மட்டுமே தலைமை பிறப்பு இறப்பு பதிவாளரால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. இது போன்ற கால அவகாசம் இனிவரும் காலரங்களில் நீட்டிக்கபடாது.
  • (QR) குறியீடு சான்றிதழின் உண்மைதன்மையை  உறுதி செய்கிறது, மென்பொருளில் பதிவிறக்கம் செய்யப்படும் பிறப்பு,இறப்பு சான்றிதழில் பிறப்பு இறப்பு பதிவாளரின் கையொப்பம் மற்றும் முத்திரை அவசியமற்றது.

 

dph fee details tamil 3.