Close

மாவட்ட ஆட்சியரகம்

மாவட்ட நிர்வாகத்தில் மாவட்ட ஆட்சியர் முதன்மையானவர்..

மாவட்ட ஆட்சியரின் பங்கு மற்றும் பொறுப்புகள்

  • மாவட்ட நிர்வாகத்தின் தலைமை; வருவாய் துறை கிராமப்புற முன்னேற்றம், பஞ்சாயத்து ராஜ், சமூக நலம், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சித்திட்டம் மற்றும் நகர பஞ்சாயத்து போன்ற துறைகளில் சிறப்பு கவனம் செலுத்துகிறது.
  • சட்டம் மற்றும் ஒழுங்கு பராமரித்தல், மாவட்ட மாஜிஸ்திரேட்டின் கடமைகளை செய்தல், நிர்வாக மாஜிஸ்திரேட்டை மேற்பார்வையிடல் மற்றும் CRPC 1973, சட்டம் 1982 இன் 14 ஆம் பிரிவின் படி விவரச் சட்டங்கள் பேணுதல்.
  • பேரிடர் மேலாண்மை மற்றும் அதனை தணிக்கும் நடவடிக்கை
  • அரசின் திட்டங்களை செய்ல்படுத்தும் நோக்கில் துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பு செய்தல்.
  • குறிப்பாக அரசின் முக்கியத் திட்டங்களை செயல்படுத்துதலில் சிறப்பு கவனம் செலுத்துதல்.
  • வாரம் தோறும் திங்களன்று நடைபெறும் பொதுமக்கள் குறைதீர் நாளன்று பெறப்பட்ட மனுக்களுக்கு ஏற்ப மக்களின் குறைதீர்த்தல், மாண்புமிகு முதல்வர் தனிப்பிரிவு மனுக்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளுதல்.
  • மனு நீதி முகாம்கள் நடத்தி பொதுமக்கள் குறைதீர்த்தல்

ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள அலுவலகங்கள்

வருவாய்த்துறை

  • பிரிவு அ – அலுவலக நடைமுறை, அலுவலக செயல்பாடுகள், ஜமாபந்தி, தபால் மற்றும் அனுப்புதல்
  • பிரிவு ஆ – பட்டா மாற்றம் மேல்முறையீடு, நில உடைமை மேம்பாட்டுத் திட்ட பிழை திருத்தம், நில மாற்றம், நில உரிமை மாற்றம், வீட்டுமனை பட்டா, நில அபகரிப்பு மற்றும் ஆக்கிரமிப்பு
  • பிரிவு இ – நில எடுப்பு, இயில்வே நிலம், குத்தகை, நத்தம் மேல் முறையீடு
  • பிரிவு ஈ – சட்டம் மற்றும் ஒழுங்கு, குண்டர் சட்டம், தேசிய பாதுகாப்பு சட்டம், மாஜிஸ்ட்ரேட் (நீதிமன்றம்/ சட்டம்) விஷயங்கள் வெடிமருந்து மற்றும் இதர உரிமங்கள், வெளிநாடு வாழ் இந்தியர்
  • பிரிவு உ – சமூக நலத் திட்டங்கள், உழவர் பாதுகாப்புத் திட்டம் முதலமைச்சரின் நிவாரண நிதி, திங்கள் மனு, முதலமைச்சரின் தனிப்பிரிவு மனுக்கள், மக்கள் தொடர்பு முகாம்கள்
  • பிரிவு ஊ – தேர்தல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு
  • பிரிவு எ – வருவாய் வசூலிப்புச் சட்டம், இலங்கை அகதிகள் மற்றும் இதரப் பணிகள்
  • பிரிவு ஏ – தணிக்கை, வீடு கட்டும் முன்பணம், கடன்கள் மற்றும் ஆட்சியரின் தன்விருப்ப நிதி
  • பிரிவு ஐ – பேரிடர் மேலாண்மை, மழை மற்றும் தமிழ்நாடு அரசு பணியாளர்கள் தேர்வாணையம் நடத்தும் தேர்வுகள்
  • கலால் – மாநில கலால், டாஸ்மாக்(TASMAC) மேலாண்மை
  • மாவட்ட வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு அலுவலகம் – குடும்ப அட்டை வழங்குதல்
  • மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் சிறுசேமிப்பு – சிறுசேமிப்பு

ஊரக வளர்ச்சி

  • திட்ட அலுவலர் – கிராமப்புற வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்துராஜ்
    • ஏபிஒ – உள்ளகட்டமைப்பு
    • வேலைவாய்ப்பு திட்டம் மற்றும் ஊதியம்
    • தொகுப்பு வீடு மற்றும் சுகாதாரம்
    • நிர்வாகப் பொறியாளர் (ஊரக வளர்ச்சி)
      • AEE சாலைகள் மற்றும் பாலங்கள்
      • AEE ஊரக வளர்ச்சி
      • கணக்கு அலுவலர்
    • நேர்முக உதவியாளர் (மதிய உணவு) – பள்ளி மதிய உணவுத் திட்டம்
    • உதவி இயக்குநர் (டிபி)– ஊராட்சிகள் தொடர்பான திட்டங்கள்
    • உதவி இயக்குநர் – ஊராட்சி கணக்குகள் மற்றும் தணிக்கை
      • மாநில நிதிக் குழு
      • STRF
      • குடிநீர் பணிகள்
      • உள்ளாட்சிகள் ஆய்வு
      • ஊராட்சிகள் கணக்குகள் மற்றும் தணிக்கை
    • நேர்முக உதவியாளர் (பஞ்சாயத்து வளர்ச்சி)
      • பிஏ1 – இணை இயக்குநர், உதவி இயக்குநர் நிலை அலுவலர்கள், பொறியாளர்கள் பிரிவு, சாலை ஆய்வாளர்கள் மற்றும் பணிமேற்பார்வையாளர்கள் தொடர்பான பணியமைப்பு மற்றும் பணி ஓய்வு பெற்றவர்களின் பணியமைப்பு
      • பிஏ2 – இளநிலை உதவியாளர், உதவியாளர், பதிவறை எழுத்தர், ஈப்பு ஓட்டுநர், அலுவலக உதவியாளர், இரவுக்காவலர் மற்றும் கருணை அடிப்படையில் பணி நியமனம் தொடர்பான பணியமைப்பு மற்றும் பணி ஓய்வு பெற்றவர்களின் பணியமைப்பு
      • பிஏ3- அலுவலகப் பணியாளர்களின் பணியமைப்பு, ஊதியப்பட்டியல் தயார் செய்தல், பொதுவருங்கால வைப்பு நிதி, விடுப்பு ஒப்படைப்பு மற்றும் ஊதிய உயர்வு போன்ற பணிகள்
      • பிஏ4 – பல்வகை பொது மக்கள் குறை தீர்க்கும் மனுக்கள், முதலமைச்சரின் தனிப்பரிவு மனுக்கள், தகவல் அறியும் உரிமைச்சட்டம் தொடர்பான மனுக்கள், பிற துறைகளின் ஆய்வு கூட்டம், மாதாந்திர ஆய்வுக் கூட்டம் மற்றும் பிற பணிகள்
      • பிஏ5 – ஊராட்சி செயலர்கள் தொடர்பான பணியமைப்பு மற்றும் அதன் தொடர்பான வழக்குகள்.
      • பிஏ6 – வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் தொடர்பான பணியமைப்பு மற்றும் ஓய்வு பெற்றவர்களின் பணியமைப்பு
      • பிஏ7 – உதவி இயக்குநர் நிலை அலுவலர்களின் பயணப்படி அனுமதித்தல் அலுவலக பணியாளர்களின் பட்டியல் அனுமதித்தல் தொலைபேசி கட்டணம், மின்கட்டணம், பட்ஜெட் தயாரித்தல் மற்றும் பிற பணிகள்