மாவட்ட கருவூலம்
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
மாவட்ட கருவூலம், ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர்
- துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
இயக்குநர், கருவூலம் மற்றும் கணக்குத்துறை, 044-24342438,044-24357412, dta.tn@nic.in
- நிர்வாக அமைப்பு

- நோக்கங்கள்
கருவூலத் துறையின் முக்கிய நோக்கம், மாவட்டத்தின் மாதாந்திர வரவு மற்றும் செலவினங்களைத் தயாரித்து, சென்னை, மாநிலகணக்காயர்மூலம் அரசுக்கு சமர்ப்பிப்பதாகும்.எனவேஇத்துறை”அரசாங்கப் பணத்தின் பாதுகாவலராக” செயல்படுகிறது.
நிதித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ்1954 ஆம் ஆண்டில்அனைத்து கருவூலங்களும் இயங்கி வந்தன.1962 இல், கருவூல செயல்பாடுகள் மற்றும் தணிக்கை செயல்பாடுகளின் பணிகளை ஒருங்கிணைத்து, கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை உருவாக்கப்பட்டது.அனைத்து மாவட்ட கருவூலங்கள்,சார்நிலை கருவூலங்கள் மற்றும் சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம்ஆகியவற்றைஉள்ளடக்கியகருவூலம் மற்றும் கணக்கு துறையானதுநிதித் துறையின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
கருவூலம் மற்றும் கணக்கு துறை 243 சார்நிலை கருவூலங்கள் மற்றும் 38 மாவட்ட கருவூலங்கள் 7 சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம்மற்றும் 2 துணை ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம் ஆகியவற்றுடன் செயல்பட்டுவருகிறது.
கருவூலம் மற்றும் கணக்கு துறையின் முக்கிய செயல்பாடுகள்
1.அரசுப் பணத்தைப் பராமரித்தல்.
2.அரசு சார்பாக பணம் செலுத்துதல்.
3. ஓய்வூதிய கொடுப்பனவுகள்.
4. விற்பனையாளர்கள் மூலம் முத்திரைகள் விற்பனை.
5.அரசு கணக்குகளின் தொகுப்பு (மாவட்ட வாரியாக).
6.மதிப்புப் பொருட்களைப் பாதுகாப்பது.
7.உள்ளாட்சி நிதி/தன் வைப்பு நிதிவைப்புத்தொகை போன்றவற்றிற்கான கணக்குகளை பராமரித்தல்.
8.இ.ஆ.ப அதிகாரிகள், உள்ளாட்சி ஊழியர்களுக்கான குழு காப்பீடு மற்றும்
9.அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்துதல்.
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு திட்டம்
இந்த திட்டத்தின் மூலம் சம்பளம், சம்பளம் அல்லாத பட்டியல்கள், முதியோர் ஓய்வூதியத் திட்டம் மற்றும் இதர திட்ட பட்டியல்கள் அனைத்தும் விரைவாக தயார் செய்யப்பட்டு அதே நாளில் காசாக்கமும் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை பட்டியல்களும் உடனடியாகச் சமர்ப்பிக்கப்பட்டு, குறுகிய காலத்திற்குள் இந்த திட்டத்தின் மூலம் பணமாக்கப்பட்டன.
இந்த திட்டத்தில் மின்னனு கையொப்ப சான்றிதழ் செயல்படுத்தப்பட்டுள்ளது, பட்டியல்களின் பாதுகாப்பிற்கு கூடுதல் அம்சமாகும்
ஓய்வூதியம்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு திட்டத்தில் முதல் ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவைத் தொகை, குடும்ப ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் போன்ற அனைத்து வகையான ஓய்வூதியங்களும் வெற்றிகரமாக செயலாக்கப்பட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஓய்வூதிய விவரத்தை தங்கள் தனிப்பட்ட உள்நுழைவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
அரசாணை எண். 393, நிதி(ஓய்வூதியம்) துறை, நாள். 20.12.2019-ன் படி, ஓய்வூதியதாரர்களுக்கான பணிக்கொடை மற்றும் இறுதி பொது வருங்கால வைப்பு நிதி தொகைகளுக்கு கருவூலம் மற்றும் சார் கருவூலம், சம்பள கணக்கு அலுவலகத்திலேயே பட்டியல் தயார் செய்து ஓய்வூதியதாரர்களுக்கு நேரடியாக வழங்குவதற்கு ஆணை வரப்பெற்றது. அதன்படி, ஜனவரி“ 2020 முதல் மாநில கணக்காயர், சென்னை அவர்களிடமிருந்து மின்னனு அங்கிகாரங்கள் ஆணை வரப்பெற்று, பட்டியல் தயாரிக்கப்பட்டு பணப்பட்டுவாடா மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதனால் ஓய்வூதியர்களுக்கு பணிக்கொடை மற்றும் இறுதி பொது வருங்கால வைப்பு நிதி காலதாமதமின்றி வழங்கப்பட்டு வருகிறது.
வைப்பு
இரண்டு வகையான வைப்புத் தொகைகள் உள்ளன.
1). தன் வைப்பு நிதி 2). மாநில அரசின் தொகுப்பு நிதி
உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்ற வைப்புத் தொகைகள் சொந்த நிதி மூலத்திலிருந்து உருவாக்கப்பட்ட சில வைப்புகளாகும். அரசாங்க மூலத்திலிருந்து உருவாக்கப்பட்ட வைப்புத் தொகையான ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை போன்றவற்றின் தன் வைப்பு கணக்குகள், ஒவ்வொரு நிதி ஆண்டும் மாநில கணக்காயர் ஒப்புதலுடன் தொடங்கப்பட்டு மார்ச் 31 ஆம் தேதியன்று பூஜ்ய கணக்காக வைக்க வேண்டும்.
மனித வளம்
ஒவ்வொரு அரசு ஊழியரின் பணிப்பதிவேடும் 2018 முதல் டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இப்போது, நிதித் தொகுதியுடன் ஒருங்கிணைக்க பணம் பெரும் அலுவலர்கள் தங்கள் ஊழியர்களின் பணி தொடர்புடைய பதிவுகளை மின்னணு பணிப்பதிவேட்டில் பதிவேற்றம் செய்ய வேண்டும்.