Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

முதல்வரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் வேப்பந்தட்டை ஒன்றியத்தில் கடந்த நான்கைரை ஆண்டுகளில் ரூ.12.88 கோடி மதிப்பீட்டிலான 18 சாலை பணிகள் முடிவுற்றுள்ளது – ஊரக வளர்ச்சித்துறையின் சார்பில் நடைபெற்று வரும் வளர்ச்சித் திட்டப் பணிகளை ஆய்வு செய்த பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ,ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் அறிவியல் ஆய்வகத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பாடாலூர் அரசு ஆதிதிராவிடர் நல உயர்நிலைப் பள்ளியில் ரூ.55 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட அறிவியல் ஆய்வகத்தினை காணொளி காட்சி வாயிலாக திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் ஆய்வகத்தில் குத்து விளக்கேற்றி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை பயனாளிகளுக்கு வழங்கினார்கள்

வெளியிடப்பட்ட நாள்: 09/12/2025

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், டாக்டர் அண்ணல் அம்பேத்கர் அவர்களின் நினைவு தினத்தினை முன்னிட்டு முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம், கல்வி, சுயதொழில் முனைவோர்களை உருவாக்குதல் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் மூலம் பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்குதல் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பயனாளிகளுக்கு பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்கள்.இந்த நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் மக்களோடு நேரலையில் பார்த்த பின்னர் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த […]

மேலும் பல

பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் அவர்கள் இலவச மிதிவண்டிகளை மாணவ, மாணவியர்களுக்கு வழங்கினார் – 03.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

பெரம்பலூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட 25 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயிலும் 2,201 மாணவ, மாணவியர்களுக்கு ரூ.1.06 கோடி மதிப்பிலான இலவச மிதிவண்டிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் வழங்கினார்(PDF 38KB)

மேலும் பல

கோரிக்கை வைத்த ஒரு வாரத்திற்குள் முன்னுரிமை குடும்ப அட்டையை மாவட்ட ஆட்சியர் அவர்கள் வழங்கினார் – 03.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 04/12/2025

முன்னுரிமை குடும்ப அட்டை கிடைத்தால் மட்டுமே அரசின் நிதி உதவியுடன் அறுவை சிகிச்சை செய்ய இயலும் என்ற நிலையில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களிடம் கோரிக்கை வைத்த ஒரு வாரத்திற்குள் முன்னுரிமை குடும்ப அட்டை பெற்று கொடுத்த மாவட்ட ஆட்சியர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள்(PDF 38KB)

மேலும் பல

கல்லூரிக் களப்பயணம் செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார் – 02.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

நான் முதல்வன்” உயர் கல்வி வழிகாட்டி திட்டத்தின் கீழ் அரசு மேல்நிலைப் பள்ளிகளில் 12 ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களுக்கு “கல்லூரிக் களப்பயணம்” செல்லும் பேருந்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.(PDF 38KB)

மேலும் பல

நவீன கருத்தடை குறித்து விழிப்புணர்வு – 02.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

ஆண்களுக்கான நிரந்தர தழும்பில்லாத நவீன கருத்தடை குறித்து பொதுமக்களுக்கு விளக்கும் வகையிலான விழிப்புணர்வு பிரச்சார வாகனத்தை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

தாயுமானவர் திட்டம் – 02.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 03/12/2025

முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் மூலம் பெரம்பலூர் மாவட்டத்தில் 18,768 நபர்கள் பயன்பெறுகின்றனர் – பயனாளிகளுக்கு குடிமைப் பொருட்கள் வழங்கப்படுவதை நேரில் பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)

மேலும் பல

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் – 01.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் /மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 01.12.2025

வெளியிடப்பட்ட நாள்: 02/12/2025

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல