தேர்தல் செலவினப் பார்வையாளர் அவர்கள் வேட்பாளர்கள் செலவினங்களை பாராமரிப்பது தொடர்பான வங்கிக்கணக்குகள் வழங்கியுள்ளார்களா என்று ஆய்வுசெய்தார் – 31.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலுக்கான பெரம்பலூர் மாவட்டத்தின் தேர்தல் செலவினப் பார்வையாளர் திரு.அனுஜ் கார்க்,இ.வ.ப., அவர்கள் பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளில் வேட்புமனு செய்துள்ள வேட்பாளர்கள் செலவினங்களை பாராமரிப்பது தொடர்பான வங்கிக்கணக்குகள் வழங்கியுள்ளார்களா என்றும், தேர்தல் நடத்தும் அலுவலர்களால் வேட்பாளர்களுக்கு வழங்கப்பட வேண்டிய 14 வகையான ஆவணங்கள் முறையாக வழங்கப்பட்டுள்ளதா என்றும் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்(PDF 38KB)
மேலும் பலதேர்தல் அதிகாரிகள் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட மிக்ஸி மற்றும் மது பாட்டில்கள் பறிமுதல் செய்தனர் – 29.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 01/04/2026தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளதால், உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட 42 மது பாட்டில்கள் மற்றும் ரூ.56,000 மதிப்பிலான 14 மிக்ஸிகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது – நிலையான கண்காணிப்புக் குழுவினர் மற்றும் பறக்கும்படையினர் நடவடிக்கை – பறிமுதல் செய்யப்பட்ட மிக்ஸி மற்றும் மது பாட்டில்கள் தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் ஒப்படைப்பு(PDF 38KB)
மேலும் பலவாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்பு -28.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026பெரம்பலூர் மாவட்டம் -147 (தனி) பெரம்பலூர் மற்றும் 148-குன்னம் ஆகிய சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு நடைபெற்ற பயிற்சி வகுப்புகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.(PDF 38KB)
மேலும் பல“வாக்கு தூதுவர் காரிகை ” என்ற இலட்சினையை (MASCOT)- 28.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026பெரம்பலூர் மாவட்டம் -தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தலில் அனைவரும் தவறாமல் வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாக மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் தயார் செய்யப்பட்டுள்ள “வாக்கு தூதுவர் காரிகை ” என்ற இலட்சினையை (MASCOT) மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வெளியிட்டார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக ஆய்வு -27.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 28/03/2026பெரம்பலூர் மாவட்டம் -மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பல்வேறு இடங்களில் தேர்தல் தொடர்பாக நடைபெற்று வரும் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் -27.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026பெரம்பலூர் மாவட்டம் -தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் உரிய ஆவணங்கள் இன்றி பறிமுதல் செய்யப்பட்ட பணம் மற்றும் பொருட்களில், உரிய ஆவணங்கள் சமர்ப்பிக்கப்பட்டவை உரியவர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.(PDF 38KB)
மேலும் பல2000க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சி-27.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026பெரம்பலூர் மாவட்டம் -2000க்கும் மேற்பட்ட இளம் வாக்காளர்கள் பங்கேற்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் வாக்காளர் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர் .(PDF 38KB)
மேலும் பலதமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது 100 சதவீதம் வாக்களிக்க விழிப்புணர்வு -26.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026பெரம்பலூர் மாவட்டம் -18 வயது நிரம்பிய அனனவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி பாடாலூர் வாரச்சந்தையில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் பொதுமக்கள் மற்றும் வியாபாரிகளுக்கு வாக்காளர் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய துண்டு பிரசுரங்களை வழங்கி விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.(PDF 38KB)
மேலும் பலஅங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகளுக்கான விளக்கக் கூட்டம்-26.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 27/03/2026பெரம்பலூர் மாவட்டம் -வேட்பாளர்கள் வேட்புமனு தாக்கலின் போது, பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரிதிநிதிகளுக்கான விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி .ந.மிருணாளினி,இஆ.ப. அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)
மேலும் பல18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க விழிப்புணர்வு -25.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 26/03/2026பெரம்பலூர் மாவட்டம் -18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி நடைபெற்ற பல்வேறு வகையான விழிப்புணர்வு கலை நிகழ்ச்சிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
மேலும் பல