தேர்தல்

Filter by:
All electronic voting machines have been placed in strong rooms at the counting center, locked, and sealed - 24.04.2026

அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது – 24.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 27/04/2026

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதியில் 85.50 சதவீத வாக்குகள் பதிவாதிவாகியுள்ளது – அனைத்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களும் வாக்கு எண்ணும் மையத்தில் பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது – மூன்றடுக்கு பாதுகாப்பு வளையத்திற்குள் கொண்டுவரப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையத்தில் 201 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.(PDF 38KB)

District Election Officer inspected polling booths - 18.04.2024

மாவட்ட தேர்தல் அலுவலர் அவர்கள் வாக்குச்சாவடிகளை ஆய்வு செய்தார் – 18.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 27/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு அமைக்கப்பட்டுள்ள மாதிரி வாக்குச்சாவடி, பெண்கள் பணிபுரியும் வாக்குச்சாவடிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)

Basic Facilities Provided for Persons with Disabilities at Polling Stations--21.04.2026

வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள்

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

பெரம்பலூர் மாவட்டம்-தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குப்பதிவின்போது, வாக்குச்சாவடி மையங்களில் மாற்றுத்திறனாளிகளுக்கு செய்யப்பட்டுள்ள அடிப்படை வசதிகள் குறித்து மாற்றுத்திறனாளிகளுக்கான தேசிய ஆணையர் திரு. எஸ். கோவிந்தராஜ் அவர்கள் ஆய்வு செய்தார்.(PDF 38KB)

Final Duty Allocation to Polling Officials through Computerised Randomisation – 20.04.2026

வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் இறுதி பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு -20.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

பெரம்பலூர் மாவட்டம் 23.4.2026 அன்று நடைபெறவுள்ள சட்டமன்ற பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடி மையங்களில் பணிபுரிய உள்ள வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு கணினி குலுக்கல் முறையில் இறுதி பணி ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு – மாவட்ட தேர்தல் அலுவலர்,தேர்தல் பொதுப்பார்வையாளர்கள் மற்றும் காவல் பார்வையாளர் , மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

Women’s Participation in Voter Awareness Programme – 20.04.2026

மகளிர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு- 20.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

பெரம்பலூர் மாவட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் 500க்கும் மேற்பட்ட மகளிர் பங்கேற்ற வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சியில் உறுதிமொழி ஏற்று விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது.(PDF 38KB)

Final Training Session for Polling Officials of Perambalur and Kunnam Assembly Constituencies – 20.04.2026

பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இறுதி பயிற்சி வகுப்பு -: 20.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 21/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு, பெரம்பலூர் மற்றும் குன்னம் சட்டமன்ற தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு அலுவலர்களுக்கு இன்று (20.04.2026) நடைபெற்ற இறுதி பயிற்சி வகுப்புகள் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)

District Election Officer Inspects Colour-Coded Pathways at Polling Centres - 19.04.2026

மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களில் வண்ண நிற பாதைகள் அமைக்கும் பணிகளை ஆய்வு செய்தார் – 19.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

ஒரே மையத்தில் அதிக எண்ணிக்கையிலான வாக்குச்சாவடிகள் அமைந்துள்ள இடங்களில் வாக்காளர்களின் வசதிக்காக வண்ண நிறத்திலான பாதை அமைக்கும் பணிகளை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 38KB)

Training for Micro Observers in Kunnam Constituency - 18.04.2026

குன்னம் தொகுதியில் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி நடைபெற்றது – 18.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

148-குன்னம் சட்டமன்ற தொகுதி தேர்தல் நுண் பார்வையாளர்களுக்கான பயிற்சி வகுப்பு குன்னம் சட்டமன்ற தொகுதிக்கான தேர்தல் பொதுபார்வையாளர் திரு. அமர் பகதூர் சிங், இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் , மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

District Election Officer Inaugurates Voter Awareness Rally in Sendurai - 18.04.2026

மாவட்ட தேர்தல் அலுவலர் செந்துறையில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார் – 18.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

குன்னம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட செந்துறை வட்டத்தில் வாக்காளர் விழிப்புணர்வு பேரணியை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் தொடங்கி வைத்தார்.(PDF 38KB)

District Election Officer Inspects 100% CCTV Installation at Polling Stations - 18.04.2026

மாவட்ட தேர்தல் அலுவலர் வாக்குச்சாவடி மையங்களில் 100% சிசிடிவி பொருத்தும் பணிகளை ஆய்வு செய்தார் – 18.04.2026

வெளியிடப்பட்ட நாள்: 20/04/2026

தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தலில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் 100 சதவீதம் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டு வரும் பணிகள் குறித்து கோனேரிபாளையம் வாக்குச்சாவடி மையத்தில் மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., பார்வையிட்டு ஆய்வு செய்தார். (PDF 38KB)