Close

தேர்தல்

வடிகட்டு:

18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர் – 01.04.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024

19.04.2024 அன்று நடைபெறவுள்ள பாராளுமன்ற பொதுத்தேர்தலில் 18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது வாக்களிக்க வேண்டும் என்பதை உணர்த்தும் வகையில் திருமாந்துறை ஊராட்சியில் 200க்கும் மேற்பட்ட மகளிர் சுய உதவிக்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டு வாக்காளர் விழிப்புணர்வு உறுதிமொழியினை எடுத்துக் கொண்டனர்..(PDF 33KB)

மேலும் பல
All individuals who have completed 18-year of age should vote without fail in the Parliamentary General Election to be held on 19.04.2024. - 01.04.2024

மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தலைமை முகவர்களுக்கு தேர்தல் செலவினங்கள், நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் – 31.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024

மக்களவைப் பொதுத்தேர்தலில் பெரம்பலூர் மக்களைவத் தொகுதியில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் அவர்களின் தலைமை முகவர்களுக்கு தேர்தல் செலவினங்கள், நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்கக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர்/ மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், தேர்தல் பார்வையாளர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
Process of allocating symbols to contesting candidates for the General Election to the Lok Sabha 2024 for the Permbalur Parliamentary Constituency - 30.03.2024

பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு – 30.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 06/04/2024

பாராளுமன்றப் பொதுத்தேர்தல் 2024ல் பெரம்பலூர் பாராளுமன்ற தொகுதிக்கு போட்டியிடும் வேட்பாளர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யும் நிகழ்வு மாவட்ட ஆட்சித்தலைவர் / தேர்தல் அலுவலர் திருமதி க.கற்பகம்,இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
Persons who have completed 18 years of age should exercise their democratic rights - District Election Officer and District Collector emphasised the same at a awareness programme - 30.03.2024

18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் – விழிப்புணர்வு நிகழ்ச்சி -30.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024

18 வயது நிரம்பிய அனைவரும் தவறாது ஜனநாயகக் கடமை ஆற்ற வேண்டும் – விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் வேண்டுகோள்(PDF 33KB)

மேலும் பல
District Election Officer and District Collector released a giant balloon with awareness slogans to emphasize the importance of voting among the general public - 29.03.2024

பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பறக்கவிட்டார் – 29.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024

பொதுமக்களிடையே வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை உணர்த்தும் வகையில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய இராட்சத பலூனை மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் பெரம்பலூர் பேருந்து நிலையத்தில் பறக்கவிட்டார்.(PDF 33KB)

மேலும் பல
Scrutiny of the nominations was done in the presence of the District Election Officer and District Collector and the General Observer for the Perambalur Parliamentary Constituency - 28.03.2024

வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சித்தலைவர்/தேர்தல் பொது பார்வையாளர் அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது -28.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024

பாராளுமன்ற பொதுத் தேர்தல், 2024க்கான வேட்புமனு தாக்கல் 27.03.2024 அன்று முடிவடைந்த நிலையில் இன்று (28.03.2024) வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், தேரதல் பொது பார்வையாளர் திரு.இராஜேந்திர குமார் வர்மா,இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது. (PDF 33KB)

மேலும் பல
Inspection of the preparatory work being done at the counting centres for the Perambalur Parliamentary Constituency - 28.03.2024

நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு குறித்து ஆய்வு – 28.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 31/03/2024

பெரம்பலூர் நாடாளுமன்றத் தொகுதிக்கான வாக்கு எண்ணும் மையத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாட்டு பணிகள் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி க.கற்பகம்,இ.ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் பாராளுமன்றத் தொகுதிக்கான தேர்தல் பொது பார்வையாளர் திரு. ராஜேந்திரகுமார் வர்மா, இ.ஆ.ப., அவர்கள், காவல்துறை பார்வையாளராக திரு.மனிஷ் அகர்வால்,இ.கா.பா, பெரம்பலூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி ஷியாம்ளாதேவி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்கள்.(PDF 33KB)

மேலும் பல
Election awareness programs were held in various areas to emphasize 100 percent voting among the public - 27.03.2024

100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் விழிப்புணர்வு நிகழ்ச்சி – 27.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

பொதுமக்களிடையே 100 சதவீத வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் பல்வேறு பகுதிகளில் தேர்தல் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றது.(PDF 33KB)

மேலும் பல
An amount of Rs.97,500 in cash which was being transported without proper documents was seized by the Static Surveillance Team - 27.03.2024

ரூ.97,500 மதிப்பிலான தொகை நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது – 27.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

உரிய ஆவணங்கள் இன்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.97,500 மதிப்பிலான தொகை நிலையான கண்காணிப்பு குழுவினரால் கைப்பற்றப்பட்டுள்ளது.(PDF 33KB)

மேலும் பல
Short Films were screened at the Chettikulam Chariot Festival to emphasize 100 percent voter turnout among the public through a state-of-the-art electronic video vehicle - 26.03.2024

அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் விழிப்புணர்வு குறும்படம் – 26.03.2024

வெளியிடப்பட்ட நாள்: 29/03/2024

செய்தி மக்கள் தொடர்புத்துறை அதிநவீன மின்னணு வீடியோ வாகனத்தின் மூலம் பொதுமக்களிடையே 100 சதவீதம் வாக்குப்பதிவை வலியுறுத்தும் வகையில் செட்டிக்குளம் தேர் திருவிழாவில் வாக்காளர் விழிப்புணர்வு குறும்படங்கள் திரையிடப்பட்டது.(PDF 33KB)

மேலும் பல