Close

ஊடக வெளியீடுகள்

Filter by:

திறனகம் – சிறப்பு மாவட்ட திறன் மையங்கள் – 03.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026

மாண்புமிகு தமிழ்நாடு துணை முதலமைச்சர் திரு. உதயநிதி ஸ்டாலின் அவர்கள் சென்னையிலிருந்து காணொளி காட்சி வாயிலாக வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு வழங்கும் வகையில் மாநிலம் முழுவதும் “திறனகம்” எனும் சிறப்பு மையங்களை திறந்து வைத்தார்கள்.அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள திறனகத்தை பார்வையிட்டார்.(PDF 38KB)

மேலும் பல

சட்டமன்ற பொதுத்தேர்தலை முன்னிட்டு மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் – 02.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026

சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள மண்டல அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது(PDF 38KB)

மேலும் பல

2024–2025 மணிமேகலை விருது – 02.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026

2024-25 ஆம் ஆண்டில் சிறப்பாக செயல்பட்ட சுய உதவிக்குழுக்கள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு மற்றும் பகுதி அளவிலான கூட்டமைப்புகளுக்கு மணிமேகலை விருதுகைளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 02.03.2026

வெளியிடப்பட்ட நாள்: 04/03/2026

மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

கள்ளப்பட்டி கிராமத்தில் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சி நடைபெற்றது-28.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

கள்ளப்பட்டி கிராமத்தில் நடைபெற்ற ஜல்லிக்கட்டு நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து துவக்கி வைத்தார்.(PDF 38KB)

மேலும் பல

10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா – 27.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், பெரம்பலூர் மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் இணைந்து பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் மற்றும் பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் இன்று (27.02.2026) தொடங்கி வைத்து பார்வையிட்டார்கள்.(PDF 38KB)

மேலும் பல

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 27.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

17 மாணவர்களுக்கு கல்விக் கடன் ஆணைகள் வழங்கப்பட்டது – 27.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

அனைத்து வங்கியாளர்களுக்கான கூட்டத்தில் 17 மாணவர்களுக்கு ரூ.67.18 லட்சம் கல்வி கடன்களுக்கான ஆணைகளை பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் முன்னிலையில் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு குழுக்கூட்டம் – 27.02.2026

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக் குழுக்கூட்டம் குழுவின் தலைவரும், பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினருமான திரு.கே.என்.அருண் நேரு அவர்கள் தலைமையில், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப. அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)

மேலும் பல

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் அவர்கள் 163 பயனாளிகளுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்

வெளியிடப்பட்ட நாள்: 03/03/2026

பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு அவர்கள் 163 பயனாளிகளுக்கு ரூ.1.5 கோடி மதிப்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.(PDF 38KB)

மேலும் பல