மாவட்ட கருவூலம்
- அலுவலகத்தின் பெயர் மற்றும் முகவரி
மாவட்ட கருவூலம், ஆட்சியர் அலுவலக வளாகம், பெரம்பலூர்
- துறையின் முதன்மைத் தலைவர், தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி
ஆணையர்,கருவூலம் மற்றும் கணக்குத் துறை, 044-24342438,044-24357412, dta.tn@nic.in
- நிர்வாக அமைப்பு
- நோக்கங்கள்
கருவூலத் துறையின் முக்கிய நோக்கம், மாவட்டத்தின் மாதாந்திர வரவு மற்றும் செலவினங்களைத் தயாரித்து, சென்னை, மாநிலகணக்காயர்மூலம் அரசுக்கு சமர்ப்பிப்பதாகும்.எனவேஇத்துறை”அரசாங்கப் பணத்தின் பாதுகாவலராக” செயல்படுகிறது.
நிதித் துறையின் நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ்1954 ஆம் ஆண்டில்அனைத்து கருவூலங்களும் இயங்கி வந்தன.1962 இல், கருவூல செயல்பாடுகள் மற்றும் தணிக்கை செயல்பாடுகளின் பணிகளை ஒருங்கிணைத்து, கருவூலங்கள் மற்றும் கணக்குத் துறை உருவாக்கப்பட்டது.அனைத்து மாவட்ட கருவூலங்கள்,சார்நிலை கருவூலங்கள் மற்றும் சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம்ஆகியவற்றைஉள்ளடக்கியகருவூலம் மற்றும் கணக்கு துறையானதுநிதித் துறையின் ஒட்டுமொத்த நிர்வாகக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரப்பட்டன.
கருவூலம் மற்றும் கணக்கு துறை 243 சார்நிலை கருவூலங்கள் மற்றும் 38 மாவட்ட கருவூலங்கள் 7 சம்பளம் மற்றும் கணக்கு அலுவலகம்மற்றும் 2 துணை ஊதியம் மற்றும் கணக்கு அலுவலகம் ஆகியவற்றுடன் செயல்பட்டுவருகிறது.
கருவூலம் மற்றும் கணக்கு துறையின் முக்கிய செயல்பாடுகள்
1.அரசுப் பணத்தைப் பராமரித்தல்.
2.அரசு சார்பாக பணம் செலுத்துதல்.
3. ஓய்வூதிய கொடுப்பனவுகள்.
4. விற்பனையாளர்கள் மூலம் முத்திரைகள் விற்பனை.
5.அரசு கணக்குகளின் தொகுப்பு (மாவட்ட வாரியாக).
6.மதிப்புப் பொருட்களைப் பாதுகாப்பது.
7.உள்ளாட்சி நிதி/தன் வைப்பு நிதிவைப்புத்தொகை போன்றவற்றிற்கான கணக்குகளை பராமரித்தல்.
8.இ.ஆ.ப அதிகாரிகள், உள்ளாட்சி ஊழியர்களுக்கான குழு காப்பீடு மற்றும்
9.அரசு ஊழியர்களுக்கான புதிய மருத்துவ காப்பீட்டு திட்டங்கள் போன்ற திட்டங்களை செயல்படுத்துதல்.
- தற்போது செயல்படுத்தி வரும் திட்டங்கள்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு திட்டம்
இந்த திட்டத்தின் மூலம்சம்பளம், சம்பளம் அல்லாத பட்டியல்கள், OAP மற்றும் இதர திட்ட பட்டியல்கள் அனைத்தும் விரைவாக தயார் செய்யப்பட்டு அதே நாளில் காசக்கமும் செய்யப்பட்டு வருகிறது. தேர்தல் மற்றும் பேரிடர் மேலாண்மை பட்டியல்களும் உடனடியாகச் சமர்ப்பிக்கப்பட்டு, குறுகிய காலத்திற்குள் இந்த திட்டத்தின் மூலம் பணமாக்கப்பட்டன.
இந்த திட்டத்தில்மின்னனு கையொப்ப சான்றிதழ் செயல் படுத்தப்பட்டுள்ளது,பட்டியல்களின் பாதுகாப்பிற்க்கு கூடுதல் அம்சமாகும்.
ஓய்வூதியம்
ஒருங்கிணைந்த நிதி மற்றும் மனித வள மேம்பாட்டு திட்டத்தில்முதல் ஓய்வூதியம், வாழ்நாள் நிலுவைத் தொகை, குடும்ப ஓய்வூதியம் மற்றும் மாதாந்திர ஓய்வூதியம் போன்ற அனைத்து வகையான ஓய்வூதியங்களும் வெற்றிகரமாக செயலாக்கப்பட்டு, ஓய்வூதியதாரர்களுக்கு வழங்கப்படுகின்றன. ஓய்வூதியம் பெறுவோர் தங்களின் ஓய்வூதியவிவரத்தை தங்கள் தனிப்பட்ட உள்நுழைவில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
வைப்பு
இரண்டு வகையான வைப்புத்தொகைகள் உள்ளன
1) தன்வைப்பு நிதி 2) மாநில அரசின் தொகுப்பு நிதி.
உள்ளாட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்ற வைப்புத்தொகைகள் சொந்த நிதி மூலத்திலிருந்து உருவாக்கப்பட்ட சில வைப்புகளாகும். அரசாங்க மூலத்திலிருந்து உருவாக்கப்பட்ட வைப்புத்தொகையானஆதி திராவிடர்,பழங்குடியினர் நலத்துறை மற்றும் பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்பாடுபட்டோர்நலத்துறைபோன்றவற்றின் தன்வைப்புகணக்குகள், ஒவ்வொரு நிதிஆண்டும் மாநிலகணக்காயர்ஒப்புதலுடன்தொடங்கப்பட்டுமார்ச் 31ஆம் தேதியன்றுபூஜ்யகணக்காக வைக்க வேண்டும்
மனித வளம்
ஒவ்வொரு அரசு ஊழியரின் பணிப்பதிவேடும் 2018 முதல்டிஜிட்டல் மயமாக்கப்பட்டுள்ளது. இப்போது, நிதித் தொகுதியுடன் ஒருங்கிணைக்க பணம் பெரும் அலுவலர்கள் தங்கள் ஊழியர்களின் பணிதொடர்புடையபதிவுகளைமின்னனுபணிப்பதிவேட்டில்பதிவேற்றம்செய்ய வேண்டும்.