கிராமசபைக் கூட்டம் – 15.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2025சுதந்திர தினவிழாவை முன்னிட்டு எளம்பலூர் ஊராட்சியில் நடைபெற்ற கிராமசபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ், இ.ஆ,ப., அவர்கள், கலந்து கொண்டார்.(PDF 38KB)
மேலும் பல79வது சுதந்திர தின விழா – 15.08.2024
வெளியிடப்பட்ட நாள்: 16/08/2025இந்தியத் திருநாட்டின் 79வது சுதந்திர தின விழாவினை முன்னிட்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தேசியக் கொடியை ஏற்றி வைத்து காவல்துறையினரின் அணிவகுப்பு மரியாதை ஏற்றுக்கொண்டு 79 பயனாளிகளுக்கு ரூ.2.79 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். (PDF 73KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் குரும்பலூர் ஏரி வாய்க்கால் சுத்தம் செய்யும் பணிகளை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்களின் முன்னெடுப்பினால் சமூக பொறுப்புணர்வு பணியின் கீழ் குரும்பலூர் ஏரி வரத்து வாய்க்காலில் வளர்ந்துள்ள முட்புதர்கள் மற்றும் நாணல்கள் அகற்றும் பணி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் அவர்கள் குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கு – 14.08.2025 அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.5.36 கோடி மதிப்பீட்டில் புதிய திட்டப் பணிகளுக்கு மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூர் பாராளுமன்ற உறுப்பினர் திரு.கே.என். அருண்நேரு அவர்கள் அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலஎச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்த விழிப்புணர்வு பேரணி – 13.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025தேசிய இளைஞர் தினத்தை முன்னிட்டு எச்.ஐ.வி / எய்ட்ஸ் மற்றும் பால்வினை நோய் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலான விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமாபெரும் தமிழ்க்கனவு நிகழ்ச்சி – 13.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 14/08/2025தமிழ் மரபு மற்றும் பண்பாட்டுப் பரப்புரை நிகழ்வாக நடத்தப்படும் ”மாபெரும் தமிழ்க்கனவு” நிகழ்ச்சியில், மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப.,அவர்கள் தலைமையில், “நிமிர்ந்த நன்னடை” என்ற தலைப்பில் எழுத்தாளர் திருமிகு ஆண்டாள் பிரியதர்ஷினி அவர்கள் உரையாற்றினார்(PDF 38KB)
மேலும் பலகல்குவாரி அனுமதி கோரி அளிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குநர் அவர்கள் ஆய்வு – 12.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025கல்குவாரி அனுமதி கோரி தமிழ்நாடு கனிம நிறுவனத்தால் அளிக்கப்பட்ட விண்ணப்பம் தொடர்பாக தமிழ்நாடு கனிம நிறுவன மேலாண் இயக்குநர் திரு.அனில் மேஷ்ராம் இ.ஆ.ப., அவர்கள் மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் புதுவேட்டக்குடி ஊராட்சியில் நடைபெற்ற உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் புதுவேட்டக்குடி ஊராட்சியில் நடைபெற்ற ஊரகப் பகுதிகளுக்கான உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாமினை பார்வையிட்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களைப் பெற்றுக் கொண்டார்..(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார் – 12.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் வயது முதிர்ந்தோர் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் இல்லத்திற்கே சென்று குடிமைப் பொருட்களை வழங்கும் முதலமைச்சரின் தாயுமானவர் திட்டத்தை தொடங்கி வைத்தார்..(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 11.08.2025
வெளியிடப்பட்ட நாள்: 13/08/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 24 பயனாளிகளுக்கு ரூ.11.34 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.ச.அருண்ராஜ் இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பல