சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டப்பேரவை பொதுத்தேர்தல் 2026 பணிகளுக்கு நியமிக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்பு அலுவலர்களுடனான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 16.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அச்சக உரிமையாளர்கள், திருமண மண்டப உரிமையாளர்கள் மற்றும் நகை அடகு கடை நடத்துவோருக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந. மிருணாளினி ,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி. அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் கட்டுப்பாட்டு அறை,கண்காணிப்புக்குழு அறைகளை ஆய்வு செய்தார்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் இயங்கும் வகையில் அமைக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்றளிப்பு மற்றும் கண்காணிப்புக்குழு அறைகளை மாவட்ட தேர்தல் அலுவலர்/மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வுசெய்தார்.(PDF 38KB)
மேலும் பலமாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை கொடியசைத்து தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து பறக்கும் படை மற்றும் நிலையான கண்காணிப்பு குழுவினரின் வாகனங்களை மாவட்ட தேர்தல் / அலுவலர் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலதேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த ஆலோசனை கூட்டம் – 15.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 20/03/2026தமிழ்நாடு சட்டமன்ற பொதுத்தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததையடுத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுக்கும், அனைத்துத்துறை அலுவலர்களுக்கும் தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்கிடும் வகையிலான கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி கோ.சி.அனிதா அவர்கள் முன்னிலையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 09.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.க.கண்ணன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழா நிறைவு விழா – 08.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், மக்கள் பண்பாட்டு மன்றம் மற்றும் தென்னிந்திய புத்தக பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் இணைந்து பெரம்பலூர் புதிய பேருந்து நிலையம் எதிரில் உள்ள திடலில் 27.02.2026 அன்று கோலாகலமாகத் தொடங்கி 10 நாட்கள் தொடர்ந்து நடைபெற்ற 10வது பெரம்பலூர் புத்தகத் திருவிழாவின் நிறைவு நாள் விழா இன்று (08.03.2026) மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலசட்டமன்ற தேர்தல் 2026 – கண்காணிப்பு குழு அலுவலர்களுக்கு பயிற்சி – 07.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026சட்டமன்ற பொதுத்தேர்தல் – 2026 ஐ முன்னிட்டு தேர்தல் பணிகளுக்காக நியமிக்கப்பட்டுள்ள கட்டுப்பாட்டு அறை (Control Room), பறக்கும் படை (FST), நிலையான கண்காணிப்புக் குழு (SST), வீடியோ கண்காணிப்புக் குழு (VST) மற்றும் வீடியோ பார்வையிடும் குழுக்களில் (VVT) நியமிக்கப்பட்டுள்ள அலுவலர்களுக்கான பயிற்சிக்கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலர் / மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ,ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபெரம்பலூரில் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த சேவை மையம் திறப்பு – 06.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026பெரம்பலூர் ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில், மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் மூலம் ரூ.31.75 லட்சம் மதிப்பில் அமைக்கப்பட்டுள்ள மாற்றுத் திறனாளிகளுக்கான ஒருங்கிணைந்த விழுதுகள் சேவை மையத்தினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் அவர்கள் முன்னிலையில் இன்று (06.03.2026) திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பல“கனவுகள் மெய்ப்படும்” நிகழ்ச்சி – 06.03.2026
வெளியிடப்பட்ட நாள்: 09/03/2026மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் தலைமையில் சென்னை வர்த்தக மையத்தில், இன்று (06.03.2026) “உங்கள் கனவ சொல்லுங்க” திட்டத்தின் நிறைவாக “கனவுகள் மெய்ப்படும்” என்ற தலைப்பில் கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் இந்த நிகழ்ச்சியினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆப., அவர்கள் தலைமயில், காணொளிக்காட்சி வாயிலாக நேரலையில் பார்வையிட்டு, பெரம்பலூர் மாவட்டத்திற்கான விஷன் 2030 மற்றும் ஐந்தாண்டு சாதனை திட்டங்கள் […]
மேலும் பல