ஆதனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழா – 10.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட, ஆதனூர் ஊராட்சி ஒன்றியதொடக்கப் பள்ளியின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மாண்புமிகு போக்குவரத்துத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் மாவட்டஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நூற்றாண்டு சுடரொளி ஏற்றி வைத்து, நூற்றாண்டு நினைவுத்தூணை திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் தொடர்புத் திட்ட முகாம் – 09.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 15/04/2025அகரம் சீகூர் கிராமத்தில் நடைபெற்ற மக்கள் தொடர்புத் திட்ட முகாமில் 215 பயனாளிகளுக்கு ரூ.2.87 கோடி மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமுதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்-08.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025பெரம்பலூர் வட்டத்திற்குட்பட்ட கொளக்காநத்தம், பாடலூர், பெரம்பலூர், உள்ளிட்ட பகுதிகளில் கூட்டுறவுத் துறையின் சார்பில் அமைக்கப்பட்டுள்ள முதல்வர் மருந்தகங்களின் செயல்பாடுகள், மருந்துகளின் இருப்பு, விற்பனை விபரங்கள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் இன்று (8.4.2025) நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, இத்திட்டத்தின் பயன்பாடுகள் குறித்து பொதுமக்களிடம் கேட்டறிந்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் -07.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 08/04/2025பெரம்பலூர் மாவட்டம்-மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 12 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.8.06 லட்சம் மதிப்பீட்டிலான தலா 8 கிராம் தாலிக்கு தங்கமும் ரூ.4.50 லட்சம் திருமண நிதியுதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலவேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் ஆய்வு – 05.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025கடந்த ஆண்டு தோட்டக்கலை துறையின் சார்பில் தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் 2,360 விவசாயிகள் 4.57 கோடி மதிப்பீட்டில் மானியம் பெற்று பயன் பெற்றுள்ளனர் வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறைகளின் மூலம் செயல்படுத்தப்படும் திட்டப் பணிகள் குறித்து ஆய்வு மேற்கொண்டு மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தகவல்.(PDF 38KB)
மேலும் பலஅண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான அனைத்து துறை ஆய்வு கூட்டம் – 05.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025அண்ணல் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குவது தொடர்பான அனைத்து துறை அரசு அலுவலர்களுடான முன்னேற்பாடு பணிகள் குறித்த ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலமுன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டம் – 04.04.2024
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025முன்னாள் படைவீரர்கள் சிறப்பு குறைதீர்க்கும் கூட்டத்தில் 8 முன்னாள் படைவீரர்கள் மற்றும் குடும்பத்தினர்க்கு ரூ1.07 லட்சம் மதிப்பீட்டிலான அரசு நலத்திட்ட உதவிகளை – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலமுன்னாள் படை வீரர்களுக்கான முதல்வரின் காக்கும் கரங்கள் திட்டம் – 04.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 07/04/2025முதல்வரின் காக்கும் கரங்கள் என்ற புதிய திட்டத்தின் கீழ் தொழில் தொடங்குவதற்காக விண்ணப்பித்துள்ள முன்னாள் படை வீரர்களின் தொழில் விண்ணப்பங்கள் குறித்த மாவட்ட தேர்வு குழு கூட்டம் – மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், நடைப் பெற்றது .(PDF 38KB)
மேலும் பலவெப்ப அலை மேலாண்மை குறித்த ஆலோசனைக் கூட்டம் – 01.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025வெப்ப அலை மேலாண்மை குறித்து மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாட்டு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பலபள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டம் – 01.04.2025
வெளியிடப்பட்ட நாள்: 02/04/2025அரசுப்பள்ளியில் மாணவர்கள் சேர்க்கையினையும், தேர்ச்சி விகிதத்தையும் அதிகப்படுத்த அனைத்து ஆசிரியர்களும் அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும் – பள்ளிக்கல்வித்துறை சார்ந்த ஆய்வுக்கூட்டத்தில மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ்,இ.ஆ.ப., அவர்கள் அறிவுறுத்தல்(PDF 38KB)
மேலும் பல