மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 10.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலர் திரு.மு.வடிவேல் பிரபு அவர்கள் தலைமையில் நடைபெற்றது. (PDF 38KB)
மேலும் பலரூ.2.19 கோடி மதிப்பிலான புதிய வளர்ச்சி திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா மற்றும் முடிவுற்ற பணிகள் திறப்பு விழா – 10.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் மாவட்டம், குன்னம் சட்டமன்ற தொகுதியில், வேப்பூர் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட குன்னம், மருவத்தூர் எழுமூர், வரகூர், புதுவேட்டக்குடி உள்ளிட்ட கிராமங்களில் ரூ.2.19 கோடி மதிப்பிலான பல்வேறு புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, முடிவுற்ற பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில், இன்று (10.3.2025) திறந்து வைத்தார்கள். (PDF 38KB)
மேலும் பலதனியார் துறை மாபெரும் வேலைவாய்ப்பு முகாமில் 312 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன – 08.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையம் நடத்திய மாபெரும் தனியார் துறை வேலை வாய்ப்பு முகாமில் தேர்வு பெற்ற 312 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ,ஆ.ப., அவர்கள், பெரம்பலூர் நாடாளுமன்ற உறுப்பினர் திரு.கே.என்.அருண்நேரு, பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு.ம.பிரபாகரன் ஆகியோர் வழங்கினார்கள்.(PDF 38KB)
மேலும் பலஉலக மகளிர் நாள் விழாவை முன்னிட்டு 658 மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு ரூ.48.46 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்கள் – 08.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 10/03/2025உலக மகளிர் நாள் விழாவை முன்னிட்டு மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள், மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் பெரம்பலூரில் நேரலையில் பார்வையிட்டு 658 க்களுக்கு ரூ.48.46 கோடி மதிப்பிலான வங்கிக் கடனுதவிகளை வழங்கினார்கள். (PDF 38KB)
மேலும் பலமாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்பு பயிற்சி வகுப்புகள் – 05.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025மாற்றுத்திறனாளிகளுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கித் தரும் வகையில், இலவச பயிற்சி வகுப்புகள் அரசு திட்டங்களின் மூலம் மாவட்ட நிர்வாகத்தால் வழங்கப்படுகின்றது – சார் ஆட்சியர் திரு.சு.கோகுல்,இ.ஆ.ப., அவர்கள் தகவல்(PDF 38KB)
மேலும் பலநம்ம ஸ்கூல் நம்ம ஊரு திட்டம் – 05.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025நம்ம ஸ்கூல் நம்ம ஊரு பள்ளி திட்டத்தின் கீழ் வெரிடாஸ் பவுண்டேஷன் நிறுவனத்தின் மூலம் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில் லாடபுரம் அரசு உயர்நிலைப் பள்ளியின் புதுப்பிக்கப்பட்ட பள்ளி கட்டிடங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ் இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலசமுதாய வளைகாப்பு விழா – 04.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் 400 கர்ப்பிணி தாய்மார்களுக்கு சமுதாய வளைகாப்பு விழாவினை நடத்தி வைத்து வாழ்த்தினார்(PDF 38KB)
மேலும் பலமாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் அவர்கள் பல்வேறு வளர்ச்சித் திட்டப் பணிகளை பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தொடங்கி வைத்தார் – 04.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 06/03/2025மாண்புமிகு போக்குவரத்துத்துறை அமைச்சர் திரு. சா.சி.சிவசங்கர் அவர்கள் பெரம்பலூர் நகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் ரூ.4.64 கோடி மதிப்பீட்டிலான பல்வேறு முடிவுற்ற வளர்ச்சித் திட்டப் பணிகளை திறந்து வைத்தும், புதிய பணிகளை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தார்.(PDF 38KB)
மேலும் பலமக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 03.03.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டத்தில் 10 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1.62 லட்சம் மதிப்பில் திறன் பேசிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் வழங்கினார்.(PDF 38KB)
மேலும் பலவிவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் – 28.02.2025
வெளியிடப்பட்ட நாள்: 04/03/2025விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி கிரேஸ் பச்சாவ், இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
மேலும் பல