ஊடக வெளியீடுகள்
வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையம் – 21.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026இந்திய தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி, சட்டமன்ற தேர்தல் 2026-ல் இளம் வாக்காளர்கள் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை சரியாக பயன்படுத்துவது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் அமைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களின் செயல்முறை விளக்க மையத்தை மாவட்ட தேர்தல் அலுவலர் மற்றும் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆ.ப., அவர்கள் திறந்து வைத்தார்.(PDF 38KB)
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் சிறுதானியம் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையத்தினை ஆய்வு செய்தார் – 20.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026மக்காச்சோளம் மற்றும் சிறுதானியங்கள் பயிரிடும் விவசாயிகளின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் சிறுதானியம் தொழில்நுட்ப வணிக மேம்பாட்டு மையத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
உங்க கனவ சொல்லுங்க திட்டம் – 20.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 22/01/2026உங்க கனவ சொல்லுங்க” திட்டத்தின் கீழ் பொதுமக்களுக்கு வழங்கப்பட்ட படிவங்கள் பூர்த்தி செய்யப்பட்டு தன்னார்வலர்கள் மூலம் திரும்பப் பெறப்படும் பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.(PDF 38KB)
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்- 19-01-2026
வெளியிடப்பட்ட நாள்: 20/01/2026மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
தமிழ்நாடு இயல், இசை நாடகம் மன்றம் சார்பில், கலைச் சங்கமம் விழா-18.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026பெரம்பலூர் மாவட்டம்-தமிழ்நாடு இயல், இசை நாடகம் மன்றம் சார்பில், கலைச் சங்கமம் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் திரு. ம.பிரபாகரன் அவர்கள் பார்வையிட்டார்.(PDF 38KB)
கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சி -15.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026பெரம்பலூர் மாவட்டம்-பெரம்பலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக சாலையில் அமைந்துள்ள திடலில் கலைப்பண்பாட்டுத்துறையின் சார்பில் நடைபெறும் பொங்கல் விழா மற்றும் கலை நிகழ்ச்சிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி, இ.ஆப., அவர்கள் துவக்கி வைத்து பார்வையிட்டார்.(PDF 38KB)
பொங்கல் விழா-14.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 19/01/2026பெரம்பலூர் மாவட்ட நிர்வாகம், சுற்றுலாத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை இணைந்து மலைவாழ் மக்களோடு நடத்திய பொங்கல் விழா மலையாளப்பட்டி கிராமத்தில் மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி,இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் கோலகலமாக நடைபெற்றது.(PDF 38KB)
காபி வித் கலெக்டர் நிகழ்ச்சி – 13.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026காபி வித் கலெக்டர் நிகழ்வில் வேலைவாய்ப்பு அலுவலக தன்னார்வ பயிலும் வட்டத்தில் பயின்று வெற்றி பெற்ற மாணவர்களுடன் கலந்துரையாடல் நிகழ்ச்சி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி ந.மிருணாளினி இ.ஆ.ப., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.(PDF 38KB)
புதிய நியாய விலை கடையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார் – 13.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026பெரம்பலூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்த கட்டப்பட்ட முழுநேர புதிய நியாய விலை கடையினை மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத் துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.(PDF 38KB)
மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் அவர்கள் 60 மகளிருக்கு நிதியுதவி வழங்கினார் – 13.01.2026
வெளியிடப்பட்ட நாள்: 14/01/2026மாண்புமிகு போக்குவரத்து மற்றும் மின்சாரத்துறை அமைச்சர் திரு.சா.சி.சிவசங்கர் அவர்கள் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் மூலம் 60 மகளிருக்கு ரூ.27,75,500 மதிப்பில் நிதியுதவி மற்றும் தலா 8 கிராம் தங்கத்தினை வழங்கினார்(PDF 38KB)